பாராளுமன்ற ஜனநாயகம் : நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஓர் ஒப்பீடு

 நேபாளத்தின் பன்முகத்தன்மை மற்றும் தற்போதைய கூட்டாட்சி செயல்முறை அதன் அரசியல் நிலைத்தன்மைக்கு எவ்வாறு தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது? இந்தியாவின் நீண்ட ஜனநாயக அனுபவமும் நிலையான அரசியல் சூழலும் இமாலய தேசத்திற்கு என்ன வழங்குகிறது ? 


கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜூலை 14-அன்று, கே.பி. சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்றார். நேபாள நாட்டிற்கு நிலையான ஆட்சியைத் தருவதே தற்போது பதவியேற்றுள்ள அரசின் முன் உள்ள முக்கிய பணியாக உள்ளது.  

 2008-ஆம் ஆண்டு முடியாட்சி ஒழிக்கப்பட்டு, நேபாளம் ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, 14-அரசாங்கங்கள் பதவியேற்றுள்ளன. 2015-ஆம் ஆண்டில்  புதிய அரசியலமைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட போதிலும், நேபாளம் தொடர்ந்து அரசியல் உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டு வருகிறது. 


ஆனால், இந்த அரசியல் ஸ்திரமின்மைக்கான காரணங்கள் என்ன? நேபாளம் ஏன் இவ்வளவு குறுகிய காலத்தில் அரசாங்கத்தில் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்தித்தது? இந்த சவால்களை சமாளிக்க நேபாளம் என்ன செய்ய வேண்டும்? நேபாளம் தனது அண்டை நாடான இந்தியாவின் அனுபவங்களிலிருந்து தனது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கு ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? 


நாடாளுமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு முன், நேபாளத்தின் அரசியலமைப்பு காலப்போக்கில் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைப் புரிந்துகொள்வோம்.


முடியாட்சி மன்னர்களால் ஆளப்பட்ட நேபாளத்தில் ஜனநாயகரீதியாக ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது கடினம். முதல் முயற்சி 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் அரசியலமைப்புச் சட்டமாக இந்த சட்டம் நேபாளத்தில் பார்க்கப்பட்டது. 1951-ஆம் ஆண்டில், நேபாளத்தின் இடைக்கால அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தை நிறுவ மீண்டும் முயற்சித்தது. இருப்பினும், இந்த இடைக்கால அரசியலமைப்பு 1959-ல் மாற்றப்பட்டது. 


1959-ல், நேபாள நாடு  பல கட்சிகளைக் கொண்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால், 1962-ஆம் ஆண்டில் மகேந்திரா அரசர் பஞ்சாயத்து அரசியலமைப்பை அறிமுகப்படுத்தினார். பின்னர் 1990-ல், நேபாளம் முடியாட்சியின் கீழ் பல கட்சி அரசியலமைப்பு அமைப்பு முறையை மீட்டெடுத்தது. இருப்பினும், நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக, முடியாட்சி முறையை  ஒழிக்க முடிவு செய்யப்பட்டது. 2007-ஆம் ஆண்டு, நேபாளத்தில் இடைக்கால அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.   இருந்த போதிலும், நேபாள நாட்டில் அரசியல் சூழல் நிலையற்றதாக இருந்தது. இறுதியில், 2015-ல், தற்போதைய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. நேபாளத்தை ஒரு கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாற்றியது. நேபாளத்தின் 2015 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட அரசியலமைப்பு ஏழு மாகாணங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பாக உள்ளது. இது, இருஅவை கொண்ட பாராளுமன்றம் மற்றும் பாரம்பரிய தலைவராக (ceremonial head) ஒரு அதிபர், நிர்வாகத் தலைவராக ஒரு பிரதமரையும் ஏற்றுக்கொண்டது.


2015-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட  அரசியலமைப்பு, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக மாற்றியது. மேலும், சமூக-பொருளாதார உரிமைகள் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தது. 


உச்ச நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


அதிகாரப் போராட்டம்


நேபாளத்தில் அரசாங்கங்கள் பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்யாதது ஒரு புதிய நிகழ்வு அல்ல. முடியாட்சியின் போது, ​​அரசர் அடிக்கடி அரசாங்கத்தையும் பிரதம மந்திரியையும் மாற்றினார். அவர்களின் பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி  செய்வதை தடுத்தார் என்று பேராசிரியர் எஸ்.டி.முனி கூறினார்.


தற்போது, ​​நேபாளத்தில் அதிகாரப் போட்டி உள்ளது. குறிப்பாக மூன்று முக்கிய தலைவர்கள்: கே.பி.சர்மா ஒலி (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அல்லது சிபிஎன்-யுஎம்எல்), புஷ்பா கமல் தஹால் (மாவோயிஸ்ட் மையம்), மற்றும் ஷேர் பகதூர் தியூபா (நேபாளி காங்கிரஸ்) ) பல சிறிய அரசியல் கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.


இருப்பினும், தெற்காசியாவில் நேபாளம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்ட ஒரே நாடு அல்ல. நேபாளத்தின் மிகப்பெரிய அண்டை நாடான இந்தியாவும் இந்த ஆட்சி முறையைக் கொண்டுள்ளது. கேள்வி என்னவென்றால், இந்தியா தனது அரசாங்க அமைப்பை எவ்வாறு திறம்பட நிர்வகிக்கிறது? இந்தியாவிடமிருந்து நேபாளம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன ?

நேபாளம் மற்றும் இந்தியாவில் நாடாளுமன்ற அமைப்பு


இந்தியா மற்றும் நேபாளம் இரண்டு நாடுகளும்   நாடாளுமன்ற ஆட்சி முறைகளைக் கொண்ட ஜனநாயக நாடுகளாகும். இந்த அமைப்புகளில், செயல்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இரு நாடுகளிலும் சம்பிரதாயமான அரச தலைவராக பணியாற்றுகிறார். இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சி அல்லது கூட்டணியை வழிநடத்தும் பிரதமர், அரசாங்கத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார்.


இரு நாடுகளும் தேசிய அளவில் இரு அவைகளைக் கொண்டுள்ளன. அதாவது சட்டங்களை உருவாக்குவதற்கு இரண்டு அவைகள் உள்ளன. இது ஒரு முழுமையான சட்டமன்ற செயல்முறையை உறுதி செய்கிறது. அவர்கள் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் பல கட்சி அமைப்புகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இரு நாடுகளின் கொள்கைகளும் அரசியலமைப்பை நிலைநிறுத்துகின்றன. இரு நாடுகளிலும் உள்ள சுதந்திரமான நீதித்துறைகள் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கின்றன.


ஒவ்வொரு அரசியலமைப்பும் ஒரு கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசை, தேசிய,  மாநில மற்றும் உள்ளூர் ஆகிய மூன்று நிலை அரசாங்கத்துடன் வரையறுக்கிறது. ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ள ஜனநாயக தேர்தல்களுக்கு அவை உத்தரவாதம் அளிக்கின்றன. இந்த ஒற்றுமைகள் இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே அரசாங்கத்தின் கட்டமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் அம்சங்கள் கணிசமாக வேறுபடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பல்வேறு அரசியல் காட்சிகள்


நேபாளம் ஒரு கூட்டாட்சி முறை கொண்ட நாடாகும்.  அதன் அதிகாரப்பூர்வ பெயர் நேபாளத்தின் கூட்டாட்சி ஜனநாயக குடியரசு (Federal Democratic Republic of Nepal) ஆகும். அதே நேரத்தில் இந்திய குடியரசு அரை-கூட்டாட்சியாகக் (quasi-federal) கருதப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1-இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு "கூட்டமைப்பு" (federation’) என்ற வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்தியாவை "மாநிலங்களின் ஒன்றியம்" (‘union of states’) என்று விவரிக்கிறது.


இந்தியாவில், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த தனித்துவமான கட்டமைப்பை அங்கீகரித்தனர் மற்றும் சூழ்நிலைகள் கோரும் வகையில் ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டின் மூலம் கொடுக்கப்பட்ட சூழல்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியலமைப்புத் திருத்தங்களின் அவசியத்தை அங்கீகரித்தனர். இந்த நெகிழ்வுத்தன்மை, ஒன்றிய அரசு  அதிகாரம் மற்றும் மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் அதே வேளையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசுக்கு உதவுகிறது. 


நேபாளத்தின் மாறுபட்ட அரசியல் நிலப்பரப்பு, மறுபுறம், பல்வேறு இன, பிராந்திய மற்றும் கருத்தியல் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள், எந்த ஒரு கட்சியும் சுதந்திரமாக அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான இடங்களை வெல்வதை கடினமாக்குகிறது. இது கூட்டணி அரசாங்கங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது. இது பல்வேறு இலக்குகளைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே நிலையான பேச்சுவார்த்தைகளின் தேவை காரணமாக பெரும்பாலும் நிலையற்றதாக இருக்கும்.


மேலும், நேபாளம் ஃபர்ஸ்ட்-பாஸ்ட்-தி-போஸ்ட் (first-past-the-post (FPTP)) மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ (proportional representation (PR)) அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. விகிதாசார பிரதிநிதித்துவ மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், சிறிய கட்சிகளின் பெருக்கத்திற்கும் பங்களிக்கிறது. இந்த சிறிய கட்சிகள் கூட்டணி அரசாங்கங்களில் கணிசமான அதிகாரத்தை வைத்திருக்கலாம். அவை அதிகாரம் மற்றும் சலுகைகளுக்காக பேரம் பேசுவதால் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். சில சமயங்களில், அமைச்சர்கள் குழுவின் அளவு நிர்ணயிக்கப்படும் போது அது மிகவும் சிக்கலாகிவிடும். நேபாளத்தில், அமைச்சர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 25 ஆகும்.




ஃபர்ஸ்ட்-பாஸ்ட்-தி-போஸ்ட் (First-Past-The-Post (FPTP)) என்பது மொத்த வாக்குகளில் பாதிக்கு மேல் இல்லாவிட்டாலும், அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறும் ஒரு வாக்குப்பதிவு முறையாகும். ஒவ்வொரு மாவட்டமும் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் மாவட்டங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. அதிக வாக்குகளைப் பெற்றவரே வெற்றியாளர். 


மேலும், இந்தியாவின் நீண்ட ஜனநாயக அனுபவமும், நிலையான அரசியல் சூழலும், அதிகாரம் மற்றும் கொள்கை தொடர்ச்சியின் சுமூகமான மாற்றங்களை கண்டுள்ளது. மறுபுறம், நேபாளத்தின் புதிய ஜனநாயகம் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சவால்களை எதிர்கொள்கிறது. கூடுதலாக, நேபாளத்தின் அதிக அளவிலான பன்முகத்தன்மை மற்றும் தற்போதைய கூட்டாட்சி செயல்முறை அதன் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது.  

 

(டாக்டர். மதுகர் ஷியாம் அரசியல் அறிவியலில் உதவிப் பேராசிரியாக உள்ளார்.)



Original article:

Share: