நிதிநிலை அறிக்கை கணக்கீடுகளுக்குப் பின்னால் உள்ள அனுமானங்கள் நியாயமானதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், நாடு கடன் மற்றும் பற்றாக்குறையை எவ்வாறு நிர்வகிக்க திட்டமிட்டுள்ளது என்பது பற்றி தெளிவான தகவல்கள் தேவைப்படுகிறது.
தொற்றுநோய் தாக்கத்தின் முதல் ஆண்டில், (2020-21) ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2%-ஆக கடுமையாக உயர்ந்தது. அப்போதிருந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்புக்கான செலவினங்களை அதிகரிக்கும் அதே வேளையில் இந்த பற்றாக்குறையை குறைப்பதாக உறுதியளித்தார். 2023-24-ல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றாக்குறை 5.6% ஆகக் குறைந்ததாக அறிவித்தார். சமீபத்திய வரவு செலவுத் திட்டத்தில், இந்த ஆண்டு அதை 4.9% ஆகக் குறைக்கவும், 2025-26-க்குள் அதை 4.5%-க்கும் கீழ் குறைக்க நிதியமைச்சர் இலக்கு வைத்துள்ளார். இருப்பினும், கடந்த ஆண்டு பட்ஜெட் வருவாயை மதிப்பிடுவதில் கவனமாக இருந்தது. வருவாய் எதிர்பார்ப்புகளை விட சுமார் ரூ. 1 லட்சம் கோடியாக இருந்தது. தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் முந்தைய பட்ஜெட்டை போலவே எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
மொத்த வரிகள் 10.8% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது. இது 10.5% பெயரளவு மொத்த உள்நாட்டு வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பொருள் வரி வருவாய் பொருளாதாரத்தின் அதே விகிதத்தில் வளர்ந்து வருகிறது என்பதாகும். இது கடந்த ஆண்டு வளர்ச்சியை விட மிகவும் மெதுவாக உள்ளது. நேரடி வரிகள், குறிப்பாக தனிநபர் வருமான வரிகள், மறைமுக வரிகளை விட வேகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மீதான வரிகளை விட குறைவாக இருந்த தனிநபர் வருமான வரி வசூல் தற்போது கணிசமாக அதிகரித்ததுள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து பணப் பரிமாற்றங்கள் அதிகரித்ததாலும், தொலைத்தொடர்புச் சேவைகளான தொலைத்தொடர்புக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் போன்றவற்றின் வருமானம் காரணமாகவும் வரி அல்லாத வருவாய் அதிகரித்துள்ளது. மாநிலங்கள் மொத்த வரி வசூலில் சுமார் 32.5% வரிப் பகிர்வு மூலம் பெறும். இருப்பினும் வருவாயில் கணிசமான பகுதி மேல் வரி (cess) மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வருகிறது.
இந்த ஆண்டு, அரசாங்கம் தனது செலவினங்களை 8.5% அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விட குறைவாக உள்ளது. எவ்வாறாயினும், வழக்கமான செலவினங்களுடன் ஒப்பிடுகையில் உள்கட்டமைப்பில் முதலீடுகளுக்கு அதிக பணம் ஒதுக்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் முன்னுரிமைகளைக் காட்டுகிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் திட்டங்களுக்கு கணிசமான நிதி செல்வதால், உள்கட்டமைப்பு செலவினங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 3.4% ஆக உள்ளது. கூடுதலாக, உணவு, உரங்கள் மற்றும் பெட்ரோலியம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான மானியங்கள் கடந்த ஆண்டு 1.49%-லிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.31% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21-இல் மானியங்கள் 3.82% என்ற உச்சத்தை எட்டியது. பட்ஜெட்டின் நடுத்தர கால நிதிக் கொள்கை அறிக்கையில் (medium-term fiscal policy cum fiscal policy strategy statement) முந்தைய நடைமுறைகளைப் போல் இல்லாமல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இலக்குகள் இல்லை. 2026-27 ஆம் ஆண்டிலிருந்து நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசாங்கக் கடனைக் குறைப்பதை இலக்காகக் கொண்டிருப்பதாக பட்ஜெட் கூறுகிறது, ஆனால் இது எப்படிச் செய்யப்படும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களைக் கொடுக்க வேண்டும்.