ஓய்வுக்குப் பிறகு உறுதியான வருமானம், சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான நுகர்வு அளவை ஊக்குவிக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) ஏப்ரல் 1, 2025 அன்று நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது. இது அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவர்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை மாற்றக்கூடும். கோட்பாட்டளவில் இது இந்தியப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வோம்.
பொருளாதாரத்தில் நுகர்வு செயல்பாட்டுக் கோட்பாடுகள் வாழ்நாள் முழுவதும் முடிவெடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. காலப்போக்கில் மக்கள் எவ்வாறு நிலையான வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை அவை விளக்குகின்றன. வருமான மாற்றங்கள் வாழ்க்கை முறைகளையும் செலவு பழக்கங்களையும் பாதிக்கின்றன. எனவே, அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட வருமான அளவை இலக்காகக் கொண்டுள்ளனர்.
பொருளாதாரத்தில் வாழ்க்கைச் சுழற்சி கருதுகோள் (life cycle hypothesis), மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சமநிலையான வாழ்க்கை முறையைப் பராமரிக்க தங்கள் செலவுகளையும் சேமிப்பையும் திட்டமிடுகிறார்கள் என்று கூறுகிறது. இது அவர்களின் செலவினங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது.
ஆரம்ப ஆண்டுகளில், ஒருவர் கல்விக் கடன் வாங்குகிறார். வேலை கிடைத்த பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்துவதோடு, பணத்தையும் மிச்சப்படுத்துகிறார்.
இந்தச் சேமிப்புகளும் முதலீடுகளும் அவர்களின் முதுமைத் தேவைகள், பாதுகாப்பான வருமானத் தேவைகள், அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகள் போன்றவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நிரந்தர வருமானக் கோட்பாடும் இந்த வாழ்க்கைச் சுழற்சி கருதுகோள் கருத்துடன் ஒத்துப்போகிறது.
நுகர்வு முறை எவ்வாறு மாறுகிறது?
அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஏனெனில், அவர்களின் ஓய்வூதிய வருமானம் சந்தை செயல்திறனைப் பொறுத்து இருக்கும். அதனால் பலர் நிலையான வருமானத்தை உறுதி செய்வதற்காக, நிலையான வைப்புத்தொகை அல்லது பிற பாதுகாப்பான சேமிப்பு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள்.
கோவிட்-19 காலத்தில், மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை அவசர சுகாதாரச் செலவுகளுக்காகச் சேமித்து வைத்தனர். இது நுகர்வுக்கான விளிம்பு நாட்டத்தை (marginal propensity to consume (MPC)) குறைத்தது. மக்கள் தங்கள் வருமானத்தில் குறைவாகவே பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவழித்து, வரலாற்றிலேயே குறைந்த அளவை அடைந்தனர்.
பெருந்தொற்று காலத்தில், நுகர்வு அதிகரிக்கவும், வருமானம் மற்றும் வளர்ச்சியைத் தக்கவைக்கவும், நிதி மற்றும் பணவியல் கருவிகள் மூலம் பணப்புழக்கத்தை அரசாங்கம் செலுத்த வேண்டியிருந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டம் சம்பளம் வாங்கும் வகுப்பினரின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும். இல்லையெனில் அது சேமிப்பு அல்லது முதலீடுகளுக்குச் சென்றிருக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இருப்பினும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான வருமானத்தை உறுதி செய்கிறது. ஓய்வூதியதாரர் ஓய்வுக்குப் பிறகு இறந்தால், அவர்களின் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட மனைவிக்கு கடைசி ஊதியத்தில் 60% கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகள், அவரது பணிக் காலத்தில் நுகர்வு அதிகரிப்பதிலோ அல்லது MPC அதிகரிப்பதிலோ பிரதிபலிக்கின்றன. இதனால் வாழ்க்கை வசதியை உறுதி செய்யும் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது. நுகர்வு நீடித்த பொருட்கள் அல்லது சொத்து வடிவில் இருக்கலாம்.
பொருளாதாரத்தில் தாக்கம்
நடுத்தர வர்க்கப் பிரிவின் பெரும்பகுதியினருக்கு சம்பளம் வாங்கும் ஊழியர்களாக உள்ளனர். அதிக செலவழிப்பு வருமானம் அதிக நுகர்வுக்கு வழிவகுக்கிறது. இது பொருளாதாரத்தில் அதிகமான விளைவை ஏற்படுத்துகிறது.
ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கைக்காக மக்கள் தங்கள் சொந்த கிராமங்கள்/நகரங்களிலும் முதலீடு செய்கிறார்கள். இது உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பணக்காரர்களைவிட தங்கள் வருமானத்தில் அதிக பகுதியை செலவிடுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, அவர்களுக்கு அதிகப் பணம் கொடுப்பது ஒட்டுமொத்த செலவினங்களை அதிகரிக்கிறது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.
நுகர்வுக்கான அதிக விளிம்பு நாட்டம் (MPC) வருமானம் மற்றும் முதலீட்டில் வலுவான பெருக்க விளைவை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பொருளாதாரத்திலிருந்து பணக் கசிவைக் குறைக்கிறது.
இந்தியாவில் ஏராளமான உற்பத்தி திறன் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளன. வரவு செலவு அறிக்கை திட்டங்கள் அதிக முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சமீபத்திய ரெப்போ விகிதத்தில் குறைப்பு மலிவான வங்கிக் கடனுக்கு வழிவகுக்க வேண்டும் . இது முதலீட்டை அதிகரிக்கும்.
எனவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) நுகர்வு ஊக்கியாக இருக்கும்.
எழுத்தாளர் மத்திய நிதி அமைச்சகத்தில் இயக்குநராக உள்ளார்.