ஜனநாயகம், விதிகள் சார்ந்த ஒழுங்கு மற்றும் பலதரப்பு அமைப்பு போன்ற அடிப்படைக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதில் நார்வேயும் இந்தியாவும் நெருக்கமாகவும் ஒற்றுமையாகவும் உள்ளன.
நாம் மிகவும் சவாலான மற்றும் நிலையற்ற உலகளாவிய சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். உலகம் முழுவதும் போர்கள் நடக்கின்றன. இதனால், சர்வதேச சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவைகள் உள்ளன. சாத்தியமான வர்த்தக மற்றும் வரிவிதிப்பு மோதல்களுக்கு நாம் நெருக்கமாக இருக்கிறோம். இருப்பினும், இந்தக் கடுமையான நேரத்தில் வாய்ப்புகளையும் கொண்டு வரக்கூடும். ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றுபடலாம், வலுவான கூட்டாண்மைகளை உருவாக்கலாம் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் புதிய பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தலாம்.
இந்த பலதரப்பட்ட சூழ்நிலையின் மத்தியில், எனது இந்திய சகாவும், நண்பருமான வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான உரையாடல்களிலிருந்து நான் உத்வேகத்தையும், உறுதியையும் கண்டேன். நார்வேயும் இந்தியாவும் புவியியல் ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், நாம் நெருக்கமாக இருக்கிறோம். ஜனநாயகம், சர்வதேச சட்டம் மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்கு போன்ற முக்கியமான மதிப்புகளைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. நாம் நம்முடைய பலதரப்பு அமைப்பையும் ஆதரிக்கிறோம். இது கூட்டாண்மைகளுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், புவிசார் அரசியலில் இந்தியாவின் பங்கு இப்போது எப்போதையும்விட வலுவாக உள்ளது.
மதிப்புமிக்க ரைசினா உரையாடலில் பங்கேற்பதற்காக, இந்திய வருகைக்காக நான் என்னுடன் கொண்டு வந்த எண்ணங்கள் இவை. நார்வேயும் இந்தியாவும் இணைந்து எதைச் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்துடனும், உயர்ந்த விருப்பங்களுடனும் நான் இங்கு வருகிறேன்.
இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் கருப்பொருள் : "காலசக்ரா: மக்கள், அமைதி மற்றும் பூமி" (Kalachakra: People, Peace, and Planet) ஆகும். இந்த கருப்பொருள் இன்று மிகவும் பொருத்தமானது.
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை (United Nations (UN)) நிறுவப்பட்டதிலிருந்து 80 ஆண்டுகளையும் குறிக்கிறது. இரண்டு உலகப் போர்களைக் கடந்து வாழ்ந்த மக்களால் ஐ.நா. உருவாக்கப்பட்டது. தேசியவாதமும், சாதகமற்ற உலகளாவிய நிர்வாகமும் இரண்டாம் உலகப் போருக்குக் களம் அமைக்க உதவிய 1930-ம் ஆண்டுகளையும் நிறுவனர்கள் கொண்டிருந்தனர்.
ஐ.நா.வை நிறுவியவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைவிட அதிகமாகச் செய்ய விரும்பினர். நாடுகளின் அமைதியின் அடிப்படையில் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதை அடைய, அவர்கள் ஐ.நா. சாசனத்தைத் தயாரித்தனர். சாசனத்தில் உள்ள ஒரு முக்கியமான கொள்கை என்னவென்றால், நாடுகள் ஒருவருக்கொருவர் இறையாண்மையை மதிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் மனித உரிமைகள் சாசனத்தையும் உருவாக்கினர். அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இந்த ஆவணம் கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், இந்த அமைப்பு சவால் செய்யப்படுகிறது. இது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது.
உலகளாவிய நிர்வாக அமைப்பில் சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது அதிக பிரதிநிதித்துவமாக மாற வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் ஆகும். மேலும், இந்த சர்வதேச அமைப்புகளில் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கான இந்தியாவின் முயற்சிகளை நாம் ஆதரிக்கிறோம்.
தற்போதுள்ள சர்வதேச அமைப்புகளைப் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் முக்கியம். உலகளாவிய விவகாரங்களில் நாம் இரட்டைத் தரங்களைக் கொண்டிருக்கக்கூடாது. நாடுகளின் அனைத்து மோதல்களுக்கும் ஒரே சர்வதேச சட்டங்கள் பொருந்தும். இதில் காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், மியான்மர், மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஆகியவை இதில் அடங்கும். நாம் உண்மையிலேயே சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த விரும்பினால், அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
காலநிலை நெருக்கடி போன்ற நமது தலைமுறை இதுவரை கண்டிராத மிகப்பெரிய சவால்களில் சிலவற்றை நமது உலகம் எதிர்கொள்கிறது. நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். பொருளாதார நிலைத்தன்மை நம்மை வலிமையாக்குகிறது. இதற்கு நல்ல சர்வதேச வர்த்தக உறவுகள் முக்கியம். வர்த்தகக் கட்டுப்பாடுகள் பிற நாடுகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இந்த நடவடிக்கைகள் உலகளாவிய சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
நார்வேக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று நான் நம்புகிறேன். மார்ச் 10 அன்று, இந்தியாவிற்கும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்க (European Free Trade Association (EFTA)) நாடுகளுக்கும் (நார்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன்) இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (Trade and Economic Partnership Agreement (TEPA)) முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, அது எதிர்காலத்தில் நமது நாடுகளுக்கு இடையே அதிக வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு வழிவகுக்கும். இன்று, TEPA நெருக்கமான உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஒரு நேர்மறையான எடுத்துக்காட்டாகத் தனித்து நிற்கிறது.
இந்த ஆண்டு, பிரதமர் மோடியை தலைநகர் ஒஸ்லோவிற்கு அழைத்தோம். இந்தியாவுடன் ஒப்பிடும்போது நார்வே ஒரு சிறிய நாடு ஆகும். இருப்பினும், இது உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. நார்வே அழகான ஒஸ்லோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இது மூன்றாவது நார்டிக்-இந்தியா உச்சிமாநாட்டையும் (Nordic-India Summit) நடத்தும். இந்த நாடானது, பல பொதுவான ஈடுபாட்டையும், மதிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறோம். இவற்றில் ஒன்று நிலையான பெருங்கடல்கள் (sustainable oceans) ஆகும்.
இந்தியாவின் லட்சிய நிலைத்தன்மை இலக்குகள் மற்றும் உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக மாறுவதற்கான இலக்கு ஆகியவை நோக்கமாக கொண்டு பங்களிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய நன்மைக்கும் பயனளிக்கும். பகிரப்பட்ட உலகளாவிய இலக்குகளை அடைய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நார்வே தயாராக உள்ளது. இது அவர்களின் ஒன்றிணைவதற்கான பலங்கள், அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
காலத்தின் சக்கரமான காலச்சக்ரா, ஏற்கனவே நேர்மறையான வழிகளில் திரும்பத் தொடங்கிவிட்டது என்பதில் நான் எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளைக் குறைக்க நாம் ஒன்றாக நடவடிக்கை எடுக்கலாம். நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கும் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நாம் பாடுபடலாம். இந்தியா மற்றும் பிற ஒத்த எண்ணம் கொண்ட கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து நார்வே இந்த முயற்சிகளுக்கு உறுதியுடன் உள்ளது.
எஸ்பென் பார்த் எய்டிஸ், நார்வேயின் வெளியுறவு அமைச்சர் ஆவார்.