கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) மற்றும் பிற புற்றுநோய்களைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிவதற்கும் HPV தடுப்பூசி (Human papillomavirus infection (HPV infection)) மற்றும் முன்கூட்டிய வாய்ப் புற்றுநோய்களுக்குப் பரிசோதனை (screening for precancerous) செய்தல் ஆகிய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன.
ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும் (Cervical Cancer Awareness Month), மற்றும் கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 4 சர்வதேச HPV விழிப்புணர்வு தினமாக (HPV Awareness Day) அனுசரிக்கப்படுகிறது.
பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பது கருப்பையின் கீழ் பகுதியான கருப்பை வாயைப் பாதுகாப்பதாகும். HPV தடுப்பூசி மூலம், ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை (Cervical Cancer) தடுக்கலாம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உலகளவில் பெண்களில் நான்காவது மிகவும் பரவும் புற்றுநோயாக உள்ளது. இது ஆண்டுதோறும் 300,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது, இது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு உயிரை இழப்பதற்கு சமமாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) இறப்புகளில் 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமான உள்ள நாடுகளில் 10 பெண்களில் ஒன்பது பேருக்கு நிகழ்கிறது. இந்தியாவில், மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) இரண்டாவது மிகவும் பொதுவாக பரவும் புற்றுநோயாகும். இந்தியாவின் பெரிய மக்கள்தொகை காரணமாக, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 500 மில்லியன் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் (Cervical Cancer) பாதிக்கப்படுகின்றனர். இதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் ஏற்படும் வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2040 ஆம் ஆண்டில், இந்தியாவில் 191,347 புதிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2020 ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையை விட 54% அதிகரிப்பு ஆகும்.
தடுப்புக்கான உத்திகள்
1983 ஆம் ஆண்டில், ஜெர்மன் விஞ்ஞானி ஹரால்ட் ஜூர் ஹவுசன் (Harald zur Hausen) சில வகையான பாப்பிலோமா வைரஸ்கள் (papilloma viruses (wart viruses)) மனிதர்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். HPV இன் தொற்றுநோயியல் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்துவதில் அதன் பங்கைப் புரிந்துகொள்வது, புற்றுநோயைத் தடுப்பதற்கும் முன்கூட்டியே கண்டறிவதற்கும், HPV தடுப்பூசி மற்றும் முன்கூட்டிய வாய்ப் புற்றுநோய்களுக்குப் பரிசோதனை செய்தல் ஆகிய இரண்டு முக்கிய முறைகளை உருவாக்க வழிவகுத்தது. இருப்பினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அகற்றுவது சாத்தியமானது. என்றாலும், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், பல பின்தங்கிய சமூகங்கள் இன்னும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கருதுவதற்கு பயனுள்ள திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) உத்தியானது, 2030 ஆம் ஆண்டளவில் 90-70-90 மூன்று தூண் தலையீட்டை (triple pillar intervention) இலக்காகக் கொண்டுள்ளது. உயர்தர மற்றும் சமமான சுகாதார சேவைகளை வழங்குவதில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் பொருள் 90% பெண்கள் 15 வயதிற்குள் HPV தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதாகும். அடுத்து, 70% பெண்கள் 35 மற்றும் 45 வயதிற்குள் உயர் செயல்திறன் சோதனைகளைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொள்வது. கடைசியாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முந்தைய மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90% பெண்கள் சிகிச்சை மற்றும் கவனிப்பைப் பெறுவது, ஆகியவை இதன் முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
'உலகளாவிய சுகாதார பாதைகளை துரிதப்படுத்துதல்: G20க்கான ஆரோக்கிய சமபங்கு' (Accelerating global health pathways: to health equity for the G20) என்ற தலைப்பிலான சமீபத்திய அறிக்கை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு, தடுப்பூசிகளுக்கான நியாயமான அணுகலை மேம்படுத்துவதில் இந்தியாவின் G20 தலைமையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் HPV தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மாநில அளவில் வெற்றிகரமான ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளுக்குப் பிறகு, 2023 இல் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தில் (Universal Immunization Programme) சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. சுகாதார அமைச்சகம் இதை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்ததை, சமீபத்தில், நிதியமைச்சர் தனது இடைக்கால பட்ஜெட் உரையில் அதைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, இந்த தடுப்பூசி தேசிய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
HPV தடுப்பூசி இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் எளிதில் கிடைக்காது என்று ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது. தற்போது, இது தனியார் சந்தையில் கணிசமான விலையில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இது விலை உயர்ந்தது. கூடுதலாக, பல மருத்துவர்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் HPV நோய்த்தொற்றின் நிகழ்வு மற்றும் அபாயத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர். தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் இந்த நம்பிக்கை இல்லாததால், தகுதியான இளம் வயதினரின் பெற்றோருக்கு இதை பரிந்துரைக்க மருத்துவர்கள் தயங்குகிறார்கள். HPV நோய்த்தொற்றுகள் முக்கியமாக நெருங்கிய தோல் தொடர்புகள் (intimate skin-to-skin contact) மூலம் பரவுவதால் மருத்துவர்களும் இதை பரிந்துரைக்க தயங்கலாம். HPV தடுப்பூசியைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் குறித்த பெற்றோரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று அவர்கள் நினைக்கலாம்.
உண்மைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்
HPV தடுப்பூசி தேசிய அளவில் வெளியிடப்படுவதை எதிர்பார்த்து, 80,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Obstetric and Gynaecological Societies of India (FOGSI)) மற்றும் இந்திய குழந்தை மருத்துவ அகாடமி (Indian Academy of Pediatrics (IAP)) ஆகியவை ஒருங்கிணைந்த உறுப்பினர்களுடன் கைகோர்த்துள்ளன. HPV தடுப்பூசியின் உண்மைகளைப் பற்றி உறுப்பினர் மகப்பேறியல்-மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களுக்கு (member obstetricians-gynecologists and pediatricians) நினைவூட்டுவது மற்றும் இந்த புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் பற்றி பெற்றோருடன் திறம்பட தொடர்புகொள்வதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை அவர்களின் குறிக்கோளாகும். இந்த பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி ஆறு வகையான HPV தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்க உதவும். அவற்றுள், கருவாய் (vulvar), ஆசன வாய் (anal), பிறப்புறுப்பு (vaginal), தொண்டை (throat) மற்றும் கர்ப்பப்பை வாய்ப் (cervical) புற்றுநோய்கள் உட்பட இவை ஐந்து பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் (Indian Academy of Pediatrics (IAP)) கூற்றுப்படி, 9 வயதில் தொடங்கி அனைத்து இளம் பருவத்தினருக்கும் HPV தடுப்பூசி கொடுப்பது அவர்களின் பரிந்துரைக்கப்பட்ட நோய்த்தடுப்பு அட்டவணையின் ஒரு பகுதியாகும். சமீபத்தில், இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) நல்ல மருத்துவ பயிற்சியின் பரிந்துரைகள், இதன் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, 9-14 வயதுடைய முதன்மை வயதினருக்கான HPV தடுப்பூசிக்கான பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தியது. மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் வழக்கமான பரிசோதனை செய்வதற்கு ஒப்புதல் அளித்தது. மக்கள்தொகையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் நிரூபிக்கப்பட்ட சாதனையுடன் உச்சபட்ச தேசிய மருத்துவ சங்கங்களாக, இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) மற்றும் இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் (IAP) ஆகியவை HPV தடுப்பூசி மூலம் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பெண்ணும் வழக்கமான கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை மூலம் பாதுகாக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குறைந்தது 20,000 சிறந்த மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் சமூகங்களுக்குள் HPV தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பார்கள்.
மருத்துவர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்கள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களுக்கு நம்பகமான ஆதாரமாக உள்ளனர். இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் தலைமை முக்கிய பங்கு வகுக்கிறது.
ரிஷிகேஷ் பாய் இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் (FOGSI) தலைவர்.
உபேந்திர எஸ் கிஞ்சவடேகர் இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் (IAP) தலைவர்.