குடும்பப் பெயரில் என்ன இருக்கிறது?: ஒரு பெண் தனது சொந்த அடையாளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை பற்றி . . .

 பெண்கள் தங்கள் பெயருடன் தங்களின் கணவரின் பெயரை இணைக்க கட்டாயப்படுத்தக்கூடாது.


வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்களுக்கு சம உரிமைகளை அடைவதற்கு, அதற்கான படிநிலை, வேறுபாடு மற்றும் ஆணாதிக்க மனநிலையை ஆதரிக்கும் எந்தவொரு செயலையும் நிராகரிப்பது முக்கியமாக உள்ளது. பொதுவாக, தனது சொந்த அடையாளத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காக, திருமதி திவ்யா மோடி டோங்யா, விவாகரத்து முடிவான பிறகு, தனது இயற்பெயர்க்குத் திரும்ப அனுமதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு மேற்கொண்டார். இவர், விவாகரத்துக்குப் பிறகு தனது இயற்பெயரைப் பயன்படுத்த விரும்பும் திருமணமான பெண்கள் விவாகரத்து ஆவணங்களையோ (divorce papers) அல்லது அவரது கணவரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழையோ (no-objection certificate) வழங்க வேண்டும் என்ற அரசாங்க அறிவிப்பை எதிர்கொண்டபோது அவர் நீதிமன்றத்தை நாடினார். பின்னர், அடுத்த விசாரணை நாளான மே 28ம் தேதிக்குள் மத்திய அரசிடம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் கோரியுள்ளது. தனது மனுவில், திருமதி மோடி டோங்யா, இந்த அறிவிப்பு "பாலினச் சார்புடையது" (gender biased) என்றும், பெண்கள் தங்கள் பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்துவதற்கு, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும், குறிப்பாக குடும்பப்பெயரை மாற்றுவது தொடர்பான கட்டுப்பாடுகள், அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 ஐ மீறுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். விவாகரத்து நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல், ஆட்சேபனை இல்லா சான்றிதழ்க்கான (NOC) தேவை, தனிப்பட்ட விருப்பங்களைக் கட்டுப்படுத்த முற்படும் ஆழமான வெறுப்பை பிரதிபலிக்கிறது. திருமதி மோடி டோங்யா, சட்டப் போராட்டத்தில் ஈடுபடாமல் தனக்கு வசதியான எந்த குடும்பப் பெயரையும் தேர்வு செய்யும் சுதந்திரம் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


வழக்கத்திற்கு மாறான பாதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது பல பெண்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரின் குடும்பப்பெயரை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்பவர்கள், கூட்டு வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது அல்லது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பல தேவையற்ற கேள்விகள் மற்றும் அதிகப்படியான ஆவணங்களை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே சாதி அடிப்படையிலான படிநிலைகளுடன் போராடும் ஒரு சமூகத்தில், உறவில் எந்த தரப்பினருக்கும் ஆதரவாக பாகுபாட்டை அதிகரிக்காமல் இருப்பது அவசியம். அதற்கு பதிலாக, பாலின பாகுபாடு, வேறுபாடுகள் மற்றும் அவமானம் இல்லாத பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதை நோக்கிய முயற்சிகள் வேண்டும். குறிப்பிடத்தக்க பாலின ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒரு நாடான இந்தியாவில், பெண்கள் பெரும்பாலான ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் சுமையை சுமக்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் பல்வேறு காரணங்களுக்காக தொழிலாளர் தொகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும், ஒரு பெண்  என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது குடும்பத்தில் உள்ள ஆண்களால் தீர்மானிக்கப்படுகிறது. சில நேரங்களில், பாரம்பரியம் என்ற பெயரில் இத்தகைய அவமானங்களை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பாலின சமத்துவத்தை அடைவது மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது, உலகளவில் மிக முக்கியமான மனித உரிமை சவாலாக ஐக்கிய நாடுகள் சபை அடையாளப்படுத்துகிறது. சட்டமியற்றும் ஆதரவு மற்றும் வலுவான சமூகக் கட்டமைப்புகள் மூலம் உறுதியான மாற்றங்களைச் செயல்படுத்தாமல், பாலின சமத்துவக் கருத்துக்கு வாய்மொழி ஆதரவை வெளிப்படுத்துவது உண்மையான நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.




Original article:

Share: