பல குறு நிறுவனங்களுக்கு உதவுவதில் 10 ஆண்டுகள் பாராட்டத்தக்க முன்னேற்றம்.
2015 முதல், குறு நிறுவனங்களுக்கான (micro enterprises) முறையான கடன் வழங்கலில் ஒரு புரட்சி நிகழ்ந்து வருகிறது. ஜன் தன் (Jan Dhan) என்பது வங்கியில் நன்கு அறியப்பட்ட சொல். இது நேரடியாக நன்மை பரிமாற்றங்களைப் பொறுத்தவரை வெளிப்படையான நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் கடன் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் கடன் வழங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் கருவி பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri MUDRA Yojana (PMMY)) ஆகும். இந்தத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. வங்கிக் கடன் உதவியுடன் பின்தங்கிய குழுக்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பத்தாண்டுகாலத்தை விரைவில் கொண்டாட உள்ளது. வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகள் உட்பட, வேளாண் அல்லாத துறைகளில் தொழில்முனைவோருக்கு நிதி உள்ளடக்கத்தை பரப்புவதற்காக முத்ரா திட்டம் (MUDRA scheme) உருவாக்கப்பட்டது.
கடன் தொகைகளின் அடிப்படையில் மூன்று வகைகளுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது: அவை,
ஷிஷு திட்டம் (Shishu) : ₹50,000 வரையிலான கடன்களுக்கு.
கிஷோர் திட்டம் (Kishore) : ₹50,000க்கு மேல் மற்றும் ₹5 லட்சம் வரையிலான கடன்களுக்கு.
தருண் திட்டம் (Tarun) : ₹5 லட்சத்திற்கு மேல் மற்றும் ₹10 லட்சம் வரையிலான கடன்களுக்கு.
”தருண்-பிளஸ்” (Tarun-plus) என்ற புதிய மாறுபாடு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ₹10 லட்சத்திற்கு மேல் மற்றும் ₹20 லட்சம் வரையிலான கடன்களை உள்ளடக்கியது. இது, திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு கூடுதலாக, NBFCகள் (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்) மற்றும் MFIகள் (குறுநிதி நிறுவனங்கள்) முத்ரா திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குகின்றன. இது குறிப்பாக, சிறிய கடன்களுக்கு பாதுகாப்பை பெரிதும் உறுதி செய்வதை அதிகரித்துள்ளது.
தனித்துவமான மரபாண்மை (Unique Ethos)
இந்தத் திட்டத்தின் நெறிமுறை தனித்துவமானது. கடன் வழங்குபவர்கள் குறு நிறுவனங்களுக்கு பிணையம் இல்லாமல் கடன்களை வழங்குவார்கள். இதில் காய்கறி விற்பனையாளர்கள், கியோஸ்க் கடைகள், சலூன்கள், அடிப்படை உணவு பதப்படுத்துதல், கோழிப்பண்ணை ல போன்ற வணிகங்கள் அடங்கும். இருப்பினும், வேளாண் பண்ணை கடன்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான கடன்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. பலர், குறிப்பாக கிராமப்புறங்களில், வாழ்க்கைக்காக இத்தகைய வணிகங்களுக்குத் திரும்புகிறார்கள். இந்தத் திட்டம் அதிக எண்ணிக்கையிலான மக்களை ஆதரிப்பதையும், சுயதொழில் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இது மற்ற நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக அமைகிறது. இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்குச் சென்றுள்ளது. இந்தத் திட்டம் ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
20 சதவீதத்திற்கும் அதிகமான கடன்கள் அல்லது 10.7 கோடி புதிய தொழில்முனைவோருக்கு இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட மொத்த பணம் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ₹33.14 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்ட நிலையில் இதில், ₹32.41 லட்சம் கோடி வழங்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட தொகையில் 44 சதவீதத்தை பெண்கள் பெற்றனர். முதல்முறை தொழில்முனைவோர் 31 சதவீதத்தை பெற்றனர்.
கடன் சார்ந்த நிதி சேர்க்கை என்பது பின்தங்கிய குழுக்களை அணுகுவதாகும். இந்த குழுக்கள் பொதுவாக முறையான நிதியை அணுக முடியாது. அவர்கள் பெரும்பாலும் கடன்களுக்காக கடன் வழங்குபவர்கள் போன்ற அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களை நம்பியிருக்கிறார்கள். இந்த குழுக்களை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வருவதன் மூலம், ஒரு பெரிய சவால் சமாளிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்குபவர்கள் முத்ரா திட்டத்தை தீவிரமாக ஊக்குவித்துள்ளனர். இந்தத் திட்டம் முக்கியமாக மூன்று குழுக்களை இலக்காகக் கொண்டுள்ளது. இவர்கள் பெண்கள் (women), முதல்முறை தொழில்முனைவோர் (first-time entrepreneurs) மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவுகள் (socially weaker sections) ஆகியோர் ஆவர். இந்த கவனம் தொடர வேண்டும். நாடு இந்த குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணியில் ஈடுபடுவதால் இது முக்கியமானது.
அரசாங்கமும் வங்கிகளும் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும். இது மக்கள் முறைசாரா பணக் கடன் வழங்குபவர்களிடமிருந்து முறையான கடன் அமைப்புகளுக்கு மாற உதவும். இந்த முறையான ஆதாரங்களில் வங்கிகள், NBFCகள் மற்றும் MFIகள் அடங்கும். பயனாளிகள் கடன் மதிப்பெண்களின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு கடன்களைப் பெறுவதை எளிதாக்கும்.
கடன் வாங்குபவர்களிடமிருந்தும், கடன் வழங்குபவர்களிடமிருந்தும் இந்தத் திட்டம் குறித்த சரியான அணுகுமுறை இல்லாதது (lack of knowledge) தகவல் தொடர்புக்கான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்குபவர்களுக்கு இந்தத் திட்டம் புரியவில்லை. மேலும், கடன் வழங்குபவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் கடன் தொடர்பான பின்னணி தெரியாது. இதைச் சரிசெய்ய, கடன் வழங்குபவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இதுவரை கிடைத்த முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. இருப்பினும், வருங்கால பயனாளிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதாலும், தற்போதைய பயனாளிகள் வசதிக் கடனின் பின்னணியில் வருமானத்தில் தன்னிறைவு வளர்ச்சியின் அடுத்த சுற்றுப்பாதையில் இறங்க வேண்டியிருப்பதாலும், நிச்சயமாக இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
எழுத்தாளர் பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆவார்.