2023ல் சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சரிந்தது ஏன்? - ரிஷிகா சிங்

 2016 முதல், மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate(TFR)) (ஒரு பெண் சராசரியாக, தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) சீனாவில் குறைந்து வருகிறது. 2023 இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இதன் தாக்கங்கள் கீழே, 


2023 ஆம் ஆண்டில் சீனாவில் 11.1 மில்லியன் இறப்புகள் மற்றும் 9 மில்லியன் பிறப்புகள் காணப்பட்டன. இந்த தரவு நாட்டின் மொத்த மக்கள்தொகை குறைந்துள்ள இரண்டாவது ஆண்டாகும். அதே ஆண்டில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியது. புதன்கிழமை ஜனவரி 17, வெளியிடப்பட்ட எண்ணிக்கையில், மொத்த மக்கள் தொகை 1.4 பில்லியனாக இருப்பதாக சீன அரசாங்கம் கூறியது. இந்த வீழ்ச்சியின் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் சீனாவிற்கு அதன் சாத்தியமான தாக்கம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.  


வீழ்ச்சியானது சமீபத்திய மக்கள்தொகை போக்குகளின் ஒரு பகுதியாகும்.


2016 முதல், சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate(TFR)) குறைந்து வருகிறது. மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை. மற்றொரு முக்கிய கருத்து மாற்று விகிதம் (replacement rate), இது எதிர்காலத்தில் தற்போதைய மக்கள்தொகையை பராமரிக்க தேவையான குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.


2020 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) ஒரு பெண்ணுக்கு 1.3 பிறப்புகள் ஆகும். இது 2010 மற்றும் 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 1.2 மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) விட சற்று அதிகமாகும் ஆனால் மாற்று விகிதமான (replacement rate) 2.1 ஐ விட மிகக் குறைவு.




சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சிக்கு ஒரு குழந்தை கொள்கைதான் (One-child policy) காரணமா?


1980 ஆம் ஆண்டில், சீனா ஒரு குழந்தை கொள்கையை (One-child policy) அறிமுகப்படுத்தியது. இது தம்பதிகள் ஒரே ஒரு குழந்தையைப் பெறுவது அல்லது அதற்கு மாற்றாக தண்டனையை எதிர்கொள்வது. இந்தக் கொள்கையானது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாகவும், 1949 முதல் ஆட்சியில் இருக்கும் ஒன்று, இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் முயற்சியில் இவ்வாறு மேற்கொண்டது.


பல ஆண்டுகளாக, சீன அரசாங்கம், மாவோ சேதுங் (Mao Zedong) ஜனாதிபதியாக இருந்தபோது, பிறப்பு கட்டுப்பாடு பற்றி விவாதித்தது, ஆனால் அதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில், அவர்களின் கவனமானது மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் (Great Leap Forward) (1958-62) என்ற பொருளாதாரத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கமாக கொண்டது. ஆனால் அதன் விளைவாக மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியால் இறந்தனர்.


1970களில், பிறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாமதமான திருமணங்களை ஊக்குவிப்பது, குழந்தை பிறப்பிற்கிடையே நீண்ட இடைவெளிகள் மற்றும் குறைவான குழந்தைகளை இலக்காகக் கொண்டது. இந்த நேரத்தில், சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) மிகவும் குறைந்துள்ளது.


இந்த பத்தாண்டுகளில், சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) குறைந்துள்ளது. உண்மையில், 1980 இல் அமல்படுத்தப்பட்ட கடுமையான கொள்கையின் அவசியத்தை மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். தனியுரிமை மற்றும் அரசாங்கத்தின் ஊடுருவல் பற்றிய கவலைகள் மட்டுமல்ல, முதலில் இந்த கடுமையான கொள்கைகள் தேவையா என்பது பற்றியும் கேள்வி எழுப்பினர்.


வலுவான பொருளாதார வளர்ச்சி (robust economic growth) மற்றும் தன்னார்வ குடும்பக் கட்டுப்பாடு (voluntary birth planning) முயற்சிகள் மூலம் அண்டை நாடுகளான கிழக்கு ஆசிய நாடுகள் கருவுறுதல் விகிதங்களில் கணிசமான குறைப்புகளை அடைந்து, சீனாவின் ஒரு குழந்தை கொள்கையால் (One-child policy) ஏற்படும் கடுமையான பிரச்சினைகளைத் தவிர்த்து, இது சீனாவை மோசமாகப் பிரதிபலிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் சமீபத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.


வேறு என்ன காரணிகள் பொறுப்பு?


2016 ஆம் ஆண்டில், சீனா ஒரு குழந்தை கொள்கையை (One-child policy) முடிவுக்குக் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதிக்கப்படுகிறது. 2021 இல், இந்த வரம்பு மூன்று குழந்தைகளாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த மாற்றங்கள் எதிர்பார்த்த மக்கள்தொகை வளர்ச்சியின் இலக்குகளை அடைய இது உதவவில்லை.


சீனா, அதன் அண்டை நாடுகளைப் போலவே, ஓரளவு படித்த மக்கள்தொகையால் இவர்களுக்கான சவால்களை எதிர்கொள்கிறது. பெண்களின் கல்வியும் வேலை வாய்ப்பும் குழந்தைகளைப் பெறுவது பற்றித் தேர்வு செய்யும் சுதந்திரத்தை வழங்குகிறது. வேலைப் போட்டி போன்ற நவீன சமூகத்தின் அழுத்தங்களும் குறிப்பிட்டுள்ள முக்கிய காரணியாகும்.


Associated Press அறிக்கையின்படி, மக்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள், சில சமயங்களில் குழந்தைகளைப் பெற வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள்.  அதிகப் போட்டி நிறைந்த கல்விச் சூழலில் நகரங்களில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கு அதிகச் செலவு இருப்பதால் பெரும்பாலும்  ஒரே ஒரு குழந்தையை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.


Financial Times இன் சமீபத்திய அறிக்கையில், “இது ஒரு தீய சுழற்சி. பொருளாதாரம் மந்தமாகும்போது, இளம் தம்பதிகள் குழந்தைகளைப் பெறுவதைத் தாமதப்படுத்துகிறார்கள். கருவுறுதல் விகிதங்களில் இந்த வீழ்ச்சி இறுதியில் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன் விகிதங்களைக் குறைக்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. 



குறையக்கூடிய மக்கள் தொகை சீனாவை எவ்வாறு பாதிக்கலாம்?


மக்கள்தொகையில் ஏற்படும் இறப்புகளில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் 2024 இல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த போக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.


Associated Press அறிக்கையின்படி, உழைக்கும் வயது மக்கள் தொகை (15 முதல் 59 வயது வரை) மொத்த மக்கள் தொகையில் 61% ஆக குறைந்துள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், மேம்பட்ட சுகாதார அமைப்புகளின் விளைவாக காலப்போக்கில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.


குறுகிய காலத்தில், நோய்த்தடுப்பு சிகிச்சை உட்பட முதியோர் சிகிச்சையில் அதிக முதலீடுகள் தேவை. மேலும், அதிக மருத்துவ நிபுணர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களை பணியமர்த்த வேண்டிய போக்கு ஏற்படும். நீண்ட காலமாக, 'சார்ந்தவர்களை' (15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 59 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆதரிக்க இளம் மக்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருக்கும். அதே சமயம், 2000களில் எட்டிய உச்சநிலைக்கு இன்னும் செல்லாத நேரத்திலும் இது வருகிறது.


கடந்த அக்டோபரில் சீன அதிபர் ஜி ஜின்பிங், திருமணம், பெற்றோர் மற்றும் குடும்பம் குறித்த இளைஞர்களின் கருத்துகளுக்கு வழிகாட்டுதலை வலுப்படுத்துவதும், பெற்றோரை ஆதரிக்கும் கொள்கைகளை மேம்படுத்துவதும், மக்கள்தொகையின் முதுமையை தீவிரமாகச் சமாளிப்பதும் அவசியம் என்று கடந்த அக்டோபரில் கூறியதை Associated Press அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. "குடும்பப் பழக்கவழக்கங்களைப் பற்றி நாம் நல்ல கதைகளைச் சொல்ல வேண்டும், சீன தேசத்தின் பாரம்பரிய நற்பண்புகளை மேம்படுத்துவதிலும், நல்ல குடும்ப பழக்கவழக்கங்களை நிலைநிறுத்துவதிலும், குடும்ப நாகரீகத்தின் புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பெண்களுக்கு ஒரு தனித்துவமான பங்கை அளிக்க வழிகாட்ட வேண்டும்," என்று அவர் மேற்கோள் காட்டினார்.




Original article:

Share: