செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் காப்புரிமை பெற்ற தகவல் ஆதாரங்களை பயிற்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டுமா? -பி.ஜே. ஜார்ஜ்

 டிசம்பர் 27, 2023 அன்று, நியூயார்க் டைம்ஸ் OpenAI மற்றும் Microsoft காப்புரிமையை மீறியதாகக் கூறி வழக்கு தொடர்ந்தது. அனுமதி அல்லது கட்டணம் இல்லாமல் ChatGPTக்கு பயிற்சி அளிக்க OpenAI தனது ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் பயன்படுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது ChatGPT ஐ நியூயார்க் டைம்ஸ்க்கு போட்டியான தகவல் ஆதாரமாக மாற்றியுள்ளது. அதன் வணிகத்தை பாதிக்கிறது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் காப்புரிமை பெற்ற தகவல் ஆதாரங்களை பயிற்சிக்காகப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்பது பற்றிய விவாதத்தில், அருள் ஜார்ஜ் ஸ்காரியா, சிசிலியா ஜினிட்டி ஆகியோர் பங்கேற்றனர்.  பி.ஜே. ஜார்ஜ் நடுவராக செயல்பட்டுள்ளார். அவர்களின் உரையாடலில் இருந்து சில திருத்தப்பட்ட பகுதிகள் இங்கே.


நியூயார்க் டைம்ஸ் vs. OpenAI வழக்கில், காப்புரிமை பெற்ற தகவல் ஆதாரங்களை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிப்பதோடு நியாயமான பயன்பாட்டுக் கோட்பாடு (fair use doctrine) எவ்வாறு தொடர்புடையது?


சிசிலியா ஜினிட்டி: அமெரிக்க  காப்புரிமைச் சட்டத்தின் (Copyright Act) 107வது பிரிவின்படி நியாயமான பயன்பாடு (fair use) நிர்வகிக்கப்படுகிறது என்று விளக்குகிறார். இது நான்கு விதமான சோதனையை உள்ளடக்கியது. இது கணிப்பது சவாலானது. OpenAI மற்றும் நியூயார்க் டைம்ஸ் இரண்டும் சரியான வாதங்களைக் கொண்டுள்ளன. முதலாவது, நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்விற்குள் செல்லும் முதல் காரணி பயன்பாட்டின் நோக்கம் மற்றும் தன்மை ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், OpenAI ஏன் தகவல் ஆதாரங்களை பயன்படுத்துகிறது. இரண்டாவது, காப்புரிமை பெற்ற படைப்பின் தன்மை, இது மிகவும் ஆக்கப்பூர்வமானதா? மூன்றாவது OpenAI எவ்வளவு தகவல்களை பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறது. நான்காவது, OpenAI இன் பயன்பாடு நியூயார்க் டைம்ஸின் அசல் படைப்பின் சந்தை மதிப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்கிறது. நியாயமான பயன்பாட்டிற்கு இந்த காரணிகளின் சமநிலை தேவைப்படுகிறது. OpenAI இன் வாதம் என்னவென்றால், அதன் பயன்பாடு மாற்றத்தக்கது, அதாவது நியூயார்க் டைம்ஸின் பயன்பாட்டை இது மாற்றாது. Google புத்தகங்கள், சிறுபடங்கள் அல்லது ஸ்கிராப்பிங் சம்பந்தப்பட்ட வழக்குகளை OpenAI குறிப்பிடும். அங்கு அவற்றை மாற்றாமல் படைப்புகளைப் பயன்படுத்துவது உருமாற்றம் மற்றும் நியாயமான பயன்பாடாகக் கருதப்படுகிறது.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா:  இது செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட ஒரு தனித்துவமான வழக்கு, மேலும் இரு தரப்பினரும் வலுவான வாதங்களைக் கொண்டுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் அதன் உள்ளடக்கத்தை நேரடியாக நகலெடுத்ததற்கான ஆதாரங்களைத் தயாரித்துள்ளது. நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வு (fair use analysis) மிகவும் சவாலானது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நியூயார்க் டைம்ஸ் கட்டுரையிலிருந்து செயற்கை நுண்ணறிவு ஒரு பகுதியை உருவாக்க குறிப்பிட்ட தூண்டுதல்கள் இருந்தால், நியூயார்க் டைம்ஸ்க்கு சந்தா செலுத்துவதற்கான மாற்றாக அது பார்க்க முடியுமா? இதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கான காப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது மீறலாகக் கருதப்படக்கூடாது. ஏனெனில் அது பரந்த நியாயமான பயன்பாட்டு விதிவிலக்கின் (fair use exception) கீழ் வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட வரம்புகள் ஏதுமின்றி, அமெரிக்க நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வு (U.S. fair use analysis) பரந்த அளவில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள நான்கு காரணிகள் அல்லது பிற தொடர்புடைய காரணிகள் மூலம் நீதிமன்றத்தை நம்ப வைக்க முடிந்தால், அதை நியாயமான பயன்பாடாக உபயோகிக்கலாம். இந்தியாவில், பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட விதிவிலக்குகளுடன் நியாயமான விதிவிலக்கு மேற்கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக, உரை மற்றும் தரவுச் செயலாக்கத்திற்கு (text and data mining) ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கு இல்லை. எனவே, இந்தியாவில் இதேபோன்ற வழக்கு எழுந்தால், நியாயமான கையாளுதலின் கீழ் மட்டுமே பயிற்சி நியாயப்படுத்தப்படும். இந்த வழக்கில், நீதிமன்றம் பயிற்சிக்கு இடமளிக்கும் பட்டியலிடப்பட்ட நோக்கங்களின் தாராளமான விளக்கம் சிறந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக, கனடா போன்ற பிற நாடுகளில் இருந்து நீதிமன்றங்கள் இதேபோன்ற நியாயமான கையாளுதல் விதிகளுக்கு தாராளவாத அணுகுமுறையை எடுத்துள்ளன.


சிசிலியா ஜினிட்டி:  ஜார்ஜ் வாஷிங்டனின் எழுத்துக்களை நகலெடுப்பது தொடர்பான வழக்கு 1841 ஆம் ஆண்டிலிருந்து நியாயமான பயன்பாடு (Fair use) பற்றிய கருத்து. ’ஒரு வாழ்க்கை’ வரலாற்றாசிரியர் வாஷிங்டனின் ஆவணங்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தார். மேலும் ஒருவர் 353 பக்கங்களை நகலெடுத்தார். இன்றும் நாம் பயன்படுத்தும் சமநிலை சோதனையை (balancing test) நீதிமன்றம் கொண்டு வந்தது. 1984 ஆம் ஆண்டில், பீட்டாமேக்ஸ் வீடியோ டேப் ரெக்கார்டிங் டெக்னாலஜி (BetaMax video tape recording technology (VCR)) மற்றும் உலகளாவிய கலைக்கூடத்தை (Universal Studios) உருவாக்கிய சோனி சம்பந்தப்பட்ட வழக்கு இருந்தது. உலகளாவிய கலைக்கூடம் (Universal Studios) இந்த தொழில்நுட்பத்தை காப்புரிமை மீறலுக்குப் பயன்படுத்தலாம் என்று வாதிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இது நேரத்தை மாற்றுதல் போன்ற மீறல் இல்லாத பயன்பாடுகளைக் கண்டறிந்தது.  காப்புரிமைச் சிக்கல்களை நிர்வகிக்க இணைய தளங்களுக்கு உதவும் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமைச் சட்டம் (Digital Millennium Copyright Act) போன்ற சட்டமியற்றும் தீர்வும் இருக்கலாம்.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: சிசிலியா ஜினிட்டி, நியூயார்க் டைம்ஸ் வழக்கில், நியூயார்க் டைம்ஸால் வைக்கப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகள் (digital protection measures) செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டபோது, அவை மீறப்பட்டன என்பது சுவாரஸ்யமான கூற்றுகளில் ஒன்றாகும். அமெரிக்காவில் நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வில் (fair use analysis) இது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


சிசிலியா ஜினிட்டி: காப்புரிமைதாரரின் உரிமைகளில் ஒன்று, நியாயமான பயன்பாட்டு பகுப்பாய்வின் (fair use analysis) உள்ளடக்கம் எவ்வாறு காட்டப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துவது. இவற்றில் உரிமைத் தகவலை அகற்றுவது மற்றொரு சிக்கலாகும், ஆனால் அது நியாயமான பயன்பாடாகக் கருதப்பட்டால், அது காப்புரிமை மீறலும் அல்ல, எந்தக் உரிமைக்கோரிக்கையும் இல்லை. மேலும், நியாயமான பயன்பாடு என்பது குற்றத்திற்கு எதிரான தற்காப்பு அல்ல, ஏனெனில் காப்புரிமை இவற்றின் பயன்பாட்டை உள்ளடக்காது.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: இந்தியாவில், உரை மற்றும் தரவுச் செயலாக்கம் (text and data mining) தொடர்பான வழக்குகள் எதையும் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஒன்று இருந்தால், அது காப்புரிமைச் சட்டத்தின் (Copyright Act) பிரிவு 52 (1a) இல் வழங்கப்பட்ட நியாயமான நடத்தைக்கான விதிவிலக்கின் (fair dealing exception) கீழ் வரும். நியாயமான பகுப்பாய்விற்கான சட்டத்தில் மூன்று வகை பயனர்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளனர். இருப்பினும், கனடா போன்ற பிற நாடுகளில் உள்ள பல அறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்கள், குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு நீதிமன்றங்கள் தளர்வான அணுகுமுறையை எடுக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. பயிற்சி தொடர்பான மீறல்களுக்கான உரிமைகோரல்கள் வரும்போது, நீதிமன்றத்தில் ஒரு வலுவான வாதம் அது பரந்த ஆராய்ச்சி நோக்கத்தின் கீழ் வருகிறது. பயிற்சி நோக்கங்களுக்காக காப்புரிமை பெற்ற பொருட்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க விரும்பினால், காப்புரிமைச் சட்டத்தில் உரை மற்றும் தரவுச் செயலாக்க (text and data mining) விதிவிலக்கைச் சேர்ப்பது அல்லது நியாயமான நடத்தைக்கான விதிவிலக்கை (fair dealing exception) நியாயமான பயன்பாட்டு விதிவிலக்காக (fair use exception) மாற்றுவது பற்றி இந்தியா பரிசீலிக்க வேண்டும்.  குறிப்பாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நிவர்த்தி செய்ய, நியாயமான நடத்தைக்கான விதிவிலக்கைப் (fair dealing exception) பின்பற்றிய சில அதிகார வரம்புகள் ஏற்கனவே அதை நியாயமான பயன்பாட்டு விதிவிலக்காக (fair use exception) மாற்றியுள்ளன.


செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை பற்றிய சட்டம் என்ன?


சிசிலியா ஜினிட்டி: அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகம் (Copyright Office), செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை காப்புரிமை பெற முடியாது என்று கூறியுள்ளது. முன்னுதாரணங்கள் ஒரு மனிதனின் தேவையைப் பற்றி பேசுவதால் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியான வழக்கு ஒரு குரங்கைப் பற்றியது. இந்தோனேசியாவில் ஒரு குரங்கு செல்ஃபி (selfies) எடுப்பது ஒரு சுவாரஸ்யமான முன்னுதாரணமாகும். இதன் விளைவாக காப்புரிமைக்கான சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில், அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, காப்புரிமைச் சட்டத்திற்கு அடையாளம் காணக்கூடிய ஆசிரியர் தேவைப்படுவதால், புகைப்படக் கலைஞரோ அல்லது குரங்கோ காப்புரிமை கோர முடியாது. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (generative AI) விஷயத்தில், ஆசிரியர் யார் என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக, நீங்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு பகுதியைத் திருத்தச் சொன்னால், பின்னர் நீங்கள் திருத்தங்களைச் செய்தால், நான் எந்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக ஆசிரியராக இருக்கிறேன்? இவை சவாலான கேள்விகள், தற்போது, முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் காப்புரிமைப் பாதுகாப்பைப் பெறாது என்று காப்புரிமை அலுவலகம் (Copyright Office) சுட்டிக்காட்டியுள்ளது.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: இந்திய காப்புரிமை அலுவலகத்துடன் (Indian Copyright Office) நிலைமையை விவாதிக்கலாம். ஆரம்பத்தில், செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய ஓவியத்தின் காப்புரிமைக்கான விண்ணப்பத்தை அவர்கள் நிராகரித்தனர். பின்னர், ஒரு மனிதனுக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான ஒத்துழைப்பாக விண்ணப்பம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டபோது, அது சரியான மறுபரிசீலனையின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால், காப்புரிமையை திரும்பப் பெறுவதாக காப்புரிமை அலுவலகம் (Copyright Office) அறிவித்தது. இருப்பினும், அது இன்னும் நிலுவையில் இருப்பதாக சமீபத்திய பதிவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் 1957 இன் காப்புரிமைச் சட்டத்தின்படி (Copyright Act), மனிதரல்லாத நிறுவனங்களுக்கு காப்புரிமைப் பாதுகாப்பை வழங்க முடியாது. இதற்கு நேர்மாறாக, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதா மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விண்ணப்பதாரர்கள் வெளிப்படுத்த வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் (U.S. Copyright Office) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்றைய சூழலில் இத்தகைய வெளிப்பாடு என்பது முக்கியமானது ஆகும்.


செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சி அல்லது செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்ட படைப்புகள் மற்றும் காப்புரிமையைச் சுற்றி உருவாகும் சூழ்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


சிசிலியா ஜினிட்டி: நாப்ஸ்டர் (Napster-பிரபலமான இசை பகிர்வு தளம்) மற்றும் பியர்-டு-பியர் (peer-to-peer) ஆவணப் பகிர்வு தோன்றியபோது, இணையதளத்தில் இசையை வாங்குவதற்கான சந்தை தீர்வு இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. iTunes ஆனது, இணையவழி பாடல்களை வாங்குவதற்கு அனுமதித்தது. இது Spotify மற்றும் Amazon Music போன்ற சேவைகளுக்கும் வழி வகுத்தது. புதுமையான படைப்புகளுக்கு இதேப்போன்ற சந்தை அடிப்படையிலான தீர்வு வெளிப்படும். அங்கு கலைஞர்களின் காப்புரிமை பெற்று ரசிகர்களின் கலை அல்லது பிற படைப்புகளை ஊக்குவிக்கும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.


அருள் ஜார்ஜ் ஸ்காரியா: இந்தியா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாக காப்புரிமை பெற்ற பொருளின் உரிமையை தவறவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். படைப்பாற்றலை மேம்படுத்துவதே காப்புரிமையின் முக்கிய நோக்கம் என்பதை நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும், பயிற்சி நோக்கங்களுக்காக காப்புரிமை பெற்ற பொருளைப் பயன்படுத்துவது பொதுவாக நியாயமான பயன்பாடாகக் கருதப்பட வேண்டும். இருப்பினும், திறந்த செயற்கை நுண்ணறிவு அல்லது வேறு எந்த நிறுவனமும் காப்புரிமை பெற்ற பொருளைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தினால், செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு காப்புரிமைப் பாதுகாப்பை அவர்கள் நாடக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.


Original article:

Share: