குறைக்கூறுபவர்கள் என்ன சொன்னாலும், நிதி ஆயோக்கின் (National Institution for Transforming India (NITI Aayog)) சமீபத்திய விவாதக் கட்டுரையைப் (discussion paper on reduction in multi-dimensional poverty (MDP) in the country) பற்றி நம்பிக்கை கொள்ள ஒரு காரணம் இருக்கிறது. நிதியாண்டு-23 வரை ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் பல பரிமாண வறுமையை (multidimensional poverty (MDP)) குறைப்பது பற்றி இந்த கட்டுரை பேசுகிறது. இது கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உட்பட 12 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பல பரிமாண வறுமை (multidimensional poverty (MDP)) வரையறையின் ஆய்வறிக்கையின்படி, இந்த குறிகாட்டிகளால் வரையறுக்கப்பட்ட வறுமை, நிதியாண்டு-14 இல் 29.17% ஆக இருந்து நிதியாண்டு-23 இல் 11.28% ஆக குறைந்துள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. சுமார் 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையின் (MDP) அடிப்படையில் மதிப்பிட்டுள்ளன. இவற்றில், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களும் சிறப்பாக செயல்படுகின்றன.
பல பரிமாண வறுமை (MDP) குறியீடுகள், 2005-06, 2015-16 மற்றும் 2019-21 இல் வெளியிடப்பட்ட மூன்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளிலிருந்து (National Family Health Surveys), இனி, வரவிருக்கும் ஆண்டுகளுக்கான கணிப்புகளைச் செய்ய அவர்கள் கடந்த காலத் தரவைப் பயன்படுத்துகின்றனர். 2005-06 முதல், வங்கிக் கணக்குகளைச் சேர்ப்பது, சொத்துக்களை வைத்திருப்பது, பள்ளிக்குச் செல்வது, மின்சாரம் மற்றும் சுத்தமான நீர் பெறுவது போன்ற துறைகளில், குறிப்பாக 2015-16க்குப் பிறகு, இந்தியாவில் முன்னேற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. இருப்பினும், சமையல் எரிபொருள், சுகாதாரம், வீட்டுவசதி, தாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகல் இன்னும் கவலையளிக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தரவுகள் மோசமாக இருந்தன. இந்த குறியீடுகள் எத்தனை பேர் இழந்துள்ளனர் மற்றும் அவர்களின் பற்றாக்குறை எவ்வளவு கடுமையானது என்பதை கருத்தில் கொள்கிறது. ஆனால் இவற்றின் பற்றாக்குறையை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட வறுமையை வரையறுக்க தெளிவான வழி இல்லை என்பதால் அறிக்கை எழுத்தாளர்கள் இதை தெளிவுபடுத்த வேண்டும். வருமான அடிப்படையிலான வறுமையைப் பற்றி பேசுகையில், உலக வங்கியின் மதிப்பீட்டை (World Bank’s assessment) அறிக்கை குறிப்பிடுகிறது. இது 2017-ல் ஒரு நபரின் வருமானம் $2.15 என பயன்படுத்தி, இவற்றின் வறுமை விகிதம் 2015 இல் 18.73% இல் இருந்து 2021 இல் 11.9% ஆகக் குறைந்துள்ளது.
பல பரிமாண வறுமை (MDP) கண்டுபிடிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிக் குறியீட்டைப் (UN HDI) போலன்றி, பல பரிமாண வறுமை (MDP) வருமானத்தை வெளிப்படையாகக் கருதுவதில்லை. ஆனால் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வீடுகள் மாற்றாகச் செயல்படும். ஒரு நபரின் வருமானத்தின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு சமமான முக்கியத்துவத்தை மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index (HDI)) வழங்குகிறது. வறுமையை மதிப்பிடுவதற்கு வருமானம் அல்லது கலோரி அடிப்படையிலான நடவடிக்கைகளைப் பார்ப்பதில் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், வருமானத்தைக் குறைப்பது சிறந்த யோசனையல்ல. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி நிதியாண்டு-18 மற்றும் நிதியாண்டு-23 க்கு இடையில் குறைந்துள்ளது. மேலும் நல்ல பல பரிமாண வறுமை (MDP) முன்னேற்றம் அடைந்த நான்கு மாநிலங்களின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2012-22 இலிருந்து தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. இந்த குறைந்த வளர்ச்சி விகிதங்கள் இருந்தபோதிலும் பல பரிமாண வறுமை (MDP) கணிசமாக குறைந்துள்ளது சுவாரஸ்யமானது.
ஜன்தன் யோஜனா (Jan Dhan Yojana), போஷன் அபியான் (Poshan Abhiyaan) மற்றும் கரிப் கல்யாண் யோஜனா (Garib Kalyan Yojana) போன்ற அரசின் திட்டங்களால் இந்த வெற்றி இருக்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், இது ஒரு கவலையை எழுப்புகிறது: வலுவான வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த 'அந்தியோதயா' திட்டங்களை மக்கள் இறுதியில் இல்லாமல் செய்ய முடியுமா? உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் இரண்டும் கைகோர்த்துச் செயல்படும்போது வறுமைக் குறைப்பு சிறப்பாகச் செயல்படும்.