நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) மிகவும் முக்கியமானது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் பாரபட்சமற்றதாகவும் மாற்ற இந்த மேம்பாடுகள் அவசியம்.
அரசாங்கங்களை நிலையாக வைத்திருக்கவும், ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்கவும் இந்தியாவில் கட்சித் தாவல் தடைச் சட்டம் முக்கியமானது. இந்த சட்டம் 1985-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கட்சி மாறுவதைத் தடுக்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இது பெரும்பாலும் அரசியல் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியது. கட்சி மாறுவதை குறைப்பதில் சட்டம் ஓரளவு பயனளித்துள்ளது. இருப்பினும், காலப்போக்கில், சட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் காரணமாக சிக்கல்கள் உருவாகின. மேலும், சட்டத்தை மேம்படுத்த சீர்திருத்தங்கள் தேவை என்பதை இது காட்டுகிறது.
சட்டத்தின் வரலாற்று தோற்றம்
கட்சித் தாவல் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்திய அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுதந்திரத்திற்குப் பெற்ற பிறகு, முதல் பத்தாண்டுகளில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கட்சித் தாவல்களை நடந்தன. இந்த கட்சி தாவல்கள் அரசாங்கங்களின் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு முக்கிய காரணியாக மாறியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற கேள்வியை இது அதிகரிக்க செய்கிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் சில நேரங்களில் நிதி ஆதாயங்கள் அல்லது பதவிகளுக்கு கட்சி மாற்றுவார்கள். இந்த நடவடிக்கை ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாகிறது. புதிய தேர்தல்களை நடத்தாமல் புதிய அரசாங்கங்கள் அமைவதற்கும் இது காரணமாக இருக்கிறது. இந்த நடைமுறை "ஆயா ராம், கயா ராம்" என்று பேச்சுவழக்கில் அறியப்பட்டது. 1960-களில் ஹரியானாவில் நடந்த ஒரு சம்பவத்தின் காரணமாக இந்த சொல் உருவானது. கயா லால் என்ற சட்டமன்ற உறுப்பினர் ஒரே நாளில் பலமுறை கட்சி மாறினார். இது போன்ற சம்பவங்களை தடுக்க கட்சித் தாவல் சட்டத்தின் அவசியத்தை சுட்டிக் காட்டுகின்றன.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் பத்தாவது அட்டவணையை அறிமுகப்படுத்தி, அரசியலமைப்பின் 52-வது திருத்தத்தின் மூலம் இந்திய நாடாளுமன்றம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை இயற்றியது. கட்சி தாவல் அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்களை இந்த சட்டம் கோடிட்டுக் காட்டியது. ஒரு உறுப்பினர் இரண்டு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்படலாம்:
1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தாமாக முன்வந்து அரசியல் கட்சியை விட்டு வெளியேறினால்.
2. நம்பிக்கையில்லா தீர்மானங்கள் அல்லது நிதி நிலை அறிக்கை சம்மந்தமான ஒப்புதல்கள் போன்ற முக்கியமான வாக்கெடுப்பின் போது கொறடாவின் (whip) அறிவுறுத்தல்களை மீறினால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த சட்டம் அரசாங்கங்களை நிலையாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு நம்பிக்கையாக இருப்பதையும் இது உறுதி செய்தது.
முதல் சட்டம் கட்சி தாவல்களுக்கு எதிராக சில தடுப்புகளை வழங்கினாலும், அதில் சில குறைபாடுகள் உள்ளன. ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒன்றாக வெளியேறினால் கட்சி பிளவுபட வழிவகுக்கிறது. இது பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல மக்கள் பிரதிநிதிகள் வெளியேற வழிவகுத்தது. 91-வது சட்ட திருத்தம் 2003-ல் நிறைவேற்றப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாவது "இணைப்புக்கு" உடன்பட வேண்டும். இந்த விதி தகுதி நீக்கத்தைத் தவிர்க்க உதவுகிறது. சிறிய அளவிலான கட்சி தாவல்கல்கள் நடப்பதை இது கடினமாக்கியது. இது கட்சி விலகல் தொடர்பான எண்ணிக்கையை குறைத்தது. கட்சித் தாவல் தடைச் சட்டம் விமர்சனத்தை எதிர்கொண்டது. சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. இருப்பினும் ஒரு பெரிய சவாலானது, கட்சி தாவல் வழக்குகளை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஆகும். சில சமயங்களில், இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் கழித்து வழங்கப்படுகின்றன. இந்த தாமதங்கள், கட்சி தாவியவர்கள் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கின்றன. இது சட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கிறது. இந்த வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகர் அல்லது அவைத் தலைவருக்கு உள்ளது. இருப்பினும், முடிவுகளை எடுப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை. இந்த காலக்கெடு இல்லாததால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
மற்றொரு பிரச்சினை கட்சி கொறடா மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லாதது. அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களிடையே, முக்கியமான வாக்கெடுப்புக்களின் போது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தும் முக்கியமான கருவியாக கொறடா செயல்படுவார். இருப்பினும், இந்த உத்தரவுகள் பெரும்பாலும் உள்கட்சிக்குள் தெரிவிக்கப்படுவதால் சர்ச்சைகள் எழலாம். கட்சியின் நிலைப்பாடு குறித்து தங்களுக்கு சரியாக தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்து உறுப்பினர்கள் வாதிடலாம். இந்த குழப்பம், கட்சி தாவல் தடை சட்ட வழக்குகள் முறையானதா என்பதை முடிவு செய்வதை கடினமாக்குகிறது.
சபாநாயகர் அல்லது தலைவர் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய முடியும். இருப்பினும், நீதிமன்றங்கள் பொதுவாக தாவல் தடை சட்ட வழக்குகளை தவிர்க்கின்றன. சட்டமன்றத்தின் சுதந்திரத்தை மதிப்பது முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த தயக்கம் அதிகார துஷ்பிரயோகங்களை நிவர்த்தி செய்யும் திறனைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சரியான நேரத்தில் தீர்மானங்களை உறுதி செய்வதை கடினமாக்குகிறது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வலுப்படுத்தவும், அதன் தன்மையை மேம்படுத்தவும், இரண்டு முக்கிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முதலாவது, சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் முடிவெடுப்பதற்கு தற்போது காலக்கெடு எதுவும் இல்லை. இது காலதாமதத்திற்கு வழிவகுக்கும் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும். இது போன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கட்சித்தாவல் வழக்குகளின் மீது முடிவெடுக்க நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும். இதற்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், விலகும் உறுப்பினர்கள் தானாகவே தங்கள் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற சட்டத்தை உருவாக்க வேண்டும். அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையில் இந்த மாற்றங்களை செய்வதன் மூலம் விரைவான தீர்மானங்களை உறுதிப்படுத்தவும், நியாயமற்ற முடிவுகளைத் தடுக்கவும், அரசியல் சார்பு சட்டமன்ற செயல்முறையின் ஒருமைப்பாட்டைப் பராமரிக்கவும் உதவும்.
இரண்டாவது, கட்சி கொறடாக்களின் பொது அறிவிப்பு. கட்சி கொறடா முடிவு வெளிப்படைத்தன்மை இல்லாதது, உறுப்பினர்களுக்கு போதுமான தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்த சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தீர்க்க, அரசியல் கட்சிகளுக்கு செய்தித்தாள் வெளியீடு அல்லது மின்னணு தகவல் தொடர்பு வடிவில் கொறடா சேவைக்கான ஒரு கட்டமைப்பை வழங்க வேண்டும். கீஷாம் மேகசந்திர சிங் VS மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் இதர (2020), இந்திய உச்ச நீதிமன்றம் கட்சித் தாவல் எதிர்ப்பு வழக்குகளில் சபாநாயகரின் பங்கை ஒரு சுயாதீன தீர்ப்பாயம் அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்புடன் மாற்ற பரிந்துரைத்தது. இருப்பினும், ஜனநாயகத்தில் சபாநாயகர் அல்லது அவைத்தலைவரின் பங்கு மிக முக்கியமானது. அவை பாராளுமன்றத்தின் ஒருமைப்பாட்டைப் பேணவும், நியாயத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. இந்த நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, சீர்திருத்தங்கள் அதை வெளிப்படையானதாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக தினேஷ் கோஸ்வாமி குழு அறிக்கை (1990), ஹாஷிம் அப்துல் ஹலிம் குழு அறிக்கை (1994), இந்திய சட்ட ஆணையத்தின் 170-வது அறிக்கை (1999), இந்திய அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை (2002), ஹாஷிம் அப்துல் ஹலிம் குழு அறிக்கை (2003) மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் 255-வது அறிக்கை (2015) ஆகியவற்றில் முன்வைக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகளையும் இந்திய அரசு ஆராய வேண்டும்.
அரசியல் விருப்பம் தேவை
கட்சித் தாவல்களிலிருந்து உறுதியற்ற தன்மையை நிறுத்துவதற்கும், தேர்தல் ஆணையை செயல்பாடுகளை நிலையாக வைத்திருப்பதற்கும் கட்சித் தாவல் தடைச் சட்டம் முக்கியமானது. இருப்பினும், அதைச் செயல்படுத்துவது சில இடைவெளிகளையும் சவால்களையும் சரிசெய்து காட்டியுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையில் திருத்தங்கள் ஒன்றிய அரசின் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" முயற்சியை ஆதரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்தத் திருத்தங்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மேம்படுத்த உதவும். அதனால் இன்று அதன் நோக்கத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கட்சிகளுக்கு நம்பிக்கையாக இருப்பதையும், வாக்காளர்களின் ஜனநாயக விருப்பத்திற்கு மதிப்பளிப்பதையும் சட்டம் உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்னையில் மக்களவைத் தலைவர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து செயல்பட வேண்டும். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த திருத்தங்கள் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்ட நிலைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பராமரிக்க உதவும். மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நியாயமான மற்றும் பயனுள்ள வகையில் சட்டத்தை மாற்றியமைக்க இந்த நடவடிக்கைகள் உதவும்.
வினோத் குமார் 14 மற்றும் 16 வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக (பாரத் ராஷ்டிர சமிதி) இருந்தார்