எப்போதிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மட்டுமே வாக்குகள் பதிவு நடத்தப்பட்டு வருகிறது? வாக்காளர் பட்டியலை மாற்றியமைத்ததாக தேர்தல் ஆணையத்தை சில எதிர்க்கட்சிகள் ஏன் குற்றம் சாட்டுகின்றன? தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகள் பரவலாக விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா ?
இதுவரையிலான நிகழ்வு :
சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் போலி வாக்காளர் அடையாள அட்டை எண்கள் (Electoral Photo Identity Card (EPIC)) குறித்த எழுந்த பிரச்சனையை தொடர்ந்து, தேர்தல்களை தேர்தல் செயல்முறையை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சட்ட விதிகள் என்ன கூறுகிறது?
அரசியலமைப்பின் பிரிவு 324, வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது உட்பட, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. வாக்காளர் பட்டியல்களை உருவாக்கும் செயல்முறை, 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) மற்றும் 1960-ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் போன்ற தொடர்புடைய விதிகளைப் பின்பற்றுகிறது.
1952-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு வாக்களிக்கும் செயல்முறை நிறைய மாறிவிட்டது. 1952 மற்றும் 1957 தேர்தல்களில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவரவர் தேர்தல் சின்னத்துடன் கூடிய தனித்தனி வாக்குப் பெட்டி இருந்தது. ஆரம்பகால தேர்தல்களில், வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெட்டியில் ஒரு வெற்று வாக்குச் சீட்டை செலுத்தினர். 1962 தேர்தலிலிருந்து, வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம் பெறதொடங்கின. 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலிருந்து, அனைத்துத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machines (EVM)) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2019-ஆம் ஆண்டு முதல், அனைத்து தொகுதிகளிலும் 100% வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை (Voter Verifiable Paper Audit Trail (VVPAT)) சீட்டுகளால் EVM செயல்முறைகள் ஆதரிக்கப்படுகின்றன.
என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?
வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் செயல்முறை தொடர்பாக கடந்த காலங்களில் தொடர்ச்சியான பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. முதலாவதாக, காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்கான பொதுநல வழக்கு மூலம் கோரிக்கைகள் இருந்தன. அந்த மனுவை ஏப்ரல் 2024-ல் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவதாக, இந்த வழக்கு அனைத்து VVPAT சீட்டுகளையும் EVM முடிவுகளுடன் பொருத்த வேண்டும் என்றும் கோரியது. ஆனால் தற்போது, ஒரு சட்டசபை பிரிவில் ஐந்து இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. தற்போது, இது ஒரு சட்டமன்றத் தொகுதி/பிரிவுக்கு ஐந்து இயந்திரங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், ஒரு உத்தரவை வழங்கியது. 5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோகண்ட்ரோலர்களின் எரிந்த நினைவகம், ஏதேனும் சேதம் ஏற்பட்டதாக சந்தேகம் இருந்தால், அதைச் சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஒவ்வொரு சட்டமன்றப் பிரிவிலும் உள்ள கட்டுப்பாட்டு அலகுகள், வாக்குச் சீட்டு அலகுகள் மற்றும் VVPAT-கள் ஆகியவை அடங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர்களின் பொறியாளர்கள் குழு சரிபார்ப்பு செயல்முறையைக் கையாளும். ஒரு தொகுதியில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம் செயல்முறையைத் தொடங்கலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒன்றயதில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு பயனளிக்கும் வகையில் ஏராளமான போலி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நான்காவது மற்றும் தற்போதைய பிரச்சினை மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் (Electoral Photo Identity Card (EPIC)) தொடர்பானது. திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறுகின்றன. EPIC எண்களை வழங்குவதற்கான பழைய பரவலாக்கப்பட்ட அமைப்பு காரணமாக நகல் இடம்பெற்றிருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கியது. இந்த பிரச்சினை பின்னர் மையப்படுத்தப்பட்ட ERONET தளத்திற்கு மாற்றுவதன் மூலம் தீர்க்கப்பட்டது. வாக்காளர்களின் வாக்காளர் அட்டை எண் எதுவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் செயல்பாட்டில் மேற்கூறிய பிரச்சினைகள் தவிர, பிரச்சார செயல்முறை தொடர்பான குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். முதலாவதாக, பெரும்பாலான கட்சிகளின் “நட்சத்திர பேச்சாளர்கள்” பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், வாக்காளர்களின் சாதி/வகுப்பு உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தல் ஆகியவற்றில் குற்றவாளிகளாக உள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவு வரம்பைவிட அதிகமாக செலவு செய்கிறார்கள். தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளுக்கு செலவு வரம்புகள் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் ₹1,00,000 கோடி செலவிட்டதாக ஊடக ஆய்வுகள் மையம் மதிப்பிட்டுள்ளது. அதிக தேர்தல் செலவு ஊழலுக்கு வழிவகுக்கிறது. இது தவறான முன்னுதாரணமாக மாறுகிறது. மூன்றாவது, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை, 2024-ஆம் ஆண்டில் அரசியல் குற்றமயமாக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 251 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 46% குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில், 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 31% பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
தேவையான சீர்திருத்தங்கள் என்ன?
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேர்தல் செயல்முறையைப் பொறுத்தவரை, பின்வரும் சீர்திருத்தங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். முதலாவதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சீட்டு (Voter Verifiable Paper Audit Trail (VVPAT)) தொடர்பான அம்சங்களைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர எண்ணிக்கை மற்றும் VVPAT சீட்டுகளைப் பொருத்துவதற்கான மாதிரி அளவை ஒவ்வொரு மாநிலத்தையும் பெரிய பகுதிகளாகப் பிரித்து அறிவியல் பூர்வமாக முடிவு செய்ய வேண்டும். ஒரே ஒரு பிழை ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட பகுதியில் VVPAT சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும். இது வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும், தேர்தல் ஆணையம் 2016-ஆம் ஆண்டில் “மொத்தமாக்கி” (totaliser) இயந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த இயந்திரங்கள் வேட்பாளர் வாரியான எண்ணிக்கையைக் காண்பிப்பதற்கு முன்பு 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வாக்குகளை இணைக்கும். இது வாக்குச்சாவடி மட்டத்தில் வாக்காளரின் தனியுரிமையைப் பாதுகாக்க உதவும். தேர்தலில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளர்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பயன்படுத்தி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் சிக்கல் கண்டறியப்பட்டால், அதை முறையாக சரி செய்ய வேண்டும். எந்த பிரச்சினையும் கண்டறியப்படாவிட்டால், அது அரசியல் சந்தேகங்களையும் ஊகங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும்.
இரண்டாவதாக, போலி வாக்காளர்கள் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டை எண்கள் (Electoral Photo Identity Card (EPIC)) சேர்க்கப்படுவது குறித்த கவலையை சரிசெய்ய, அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகும், தனியுரிமை குறித்த கவலைகளை நீக்கிய பிறகும், குடிமக்களின் ஆதார் எண்ணை EPIC அட்டைகளுடன் இணைக்கும் செயல்முறை பரிசீலிக்கப்படலாம். இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர் அடையாள எண்களை நீக்கி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு தனித்துவமான EPIC எண் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரச்சார செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் இல்லாவிட்டாலும் அதை மேற்கொள்வது மிகவும் முக்கியம். முதலாவதாக, மாதிரி நடத்தை விதிகளை (Model Code of Conduct (MCC)) கடுமையாக மீறும் எந்தவொரு தலைவரின் “நட்சத்திர பேச்சாளர்கள்” அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்க வேண்டும். இது கட்சி வேட்பாளர்களுக்கு அவர்களின் பிரச்சாரங்களுக்காக வழங்கப்படும் செலவு நிவாரணத்தை பறிக்கும். சின்னங்கள் உத்தரவின் பத்தி 16-A, ஒரு அரசியல் கட்சி மாதிரி நடத்தை விதிகளை பின்பற்றத் தவறினால் அல்லது தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை மீறினால், அதன் அங்கீகாரத்தை இடைநிறுத்த அல்லது திரும்பப் பெற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த விதியின் கீழ் முக்கிய அரசியல் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை மாதிரி நடத்தை விதிகளை திறம்பட செயல்படுத்த உதவும். இரண்டாவதாக, ஒரு அரசியல் கட்சி தனது வேட்பாளருக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் வேட்பாளரின் செலவு வரம்பிற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தெளிவாகக் கூறும் வகையில் சட்டம் திருத்தப்பட்ட வேண்டும். மேலும், தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதற்கு அதிகபட்ச வரம்பு இருக்க வேண்டும். மூன்றாவதாக, வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன்பு குறைந்தது மூன்று முறையாவது தங்கள் குற்றப் பின்னணிகளை (criminal antecedents) அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரவலாகப் பரப்பப்படும் செய்தித்தாள்களிலும் மின்னணு ஊடகங்களிலும் விளமபரப்படுத்தபட வேண்டும். இந்த விதியை கடுமையாக அமல்படுத்துவது வாக்காளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.
தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்த வேண்டும். இது பிரச்சாரமும் தேர்தல் செயல்முறையும் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதை உறுதி செய்யும்.
R. ரங்கராஜன் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.