தியாகிகள் தினம் (Shaheed Diwas) — பகத் சிங் மற்றும் லாகூர் சதி வழக்கு என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி : பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜ்குரு ஆகியோரை கௌரவிக்கும் வகையில் மார்ச் 23 இந்தியாவில் ஷஹீத் திவாஸ் அல்லது தியாகிகள் தினம் (Martyr’s Day) ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஜான் சாண்டர்ஸைக் கொன்றதற்காக லாகூர் மத்திய சிறையில் 1931-ல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். பகத் சிங் மற்றும் லாகூர் சதி வழக்கு பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. பகத் சிங் செப்டம்பர் 28, 1907 அன்று லியால்பூரில் (இப்போது பைசலாபாத், பாகிஸ்தான்) உள்ள பங்காவில் பிறந்தார். பகத் சிங் ஒரு துணிச்சலான புரட்சியாளர். 1931-ஆம் ஆண்டு ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஜான் சாண்டர்ஸைக் கொன்றதற்காக 23 வயதில் பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். குறிப்பாக, வட இந்தியாவில் அவரது தியாகம் அவரை ஒரு முக்கிய நபராக மாற்றியது. பகத் சிங் நாடு முழுவதும் உள்ள தேசபக்தர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.


2. பகத் சிங் செயல் வீரர் மட்டுமல்ல. அவர் ஒரு அறிஞர் மற்றும் எழுத்தாளராக இருந்தார்.  1920-களில், அவர் அமிர்தசரஸில் உள்ள உருது மற்றும் பஞ்சாபி செய்தித்தாள்களுக்கு எழுதினார். மேலும், ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்கும் துண்டுப்பிரசுரங்களுக்கு வழங்கினார். கீர்த்தி கிசான் கட்சியின் பத்திரிகையான கீர்த்தியிலும், டெல்லியில் உள்ள வீர் அர்ஜுன் செய்தித்தாளிலும் சுருக்கமாக எழுதினார். அவர் பெரும்பாலும் பல்வந்த், ரஞ்சித் மற்றும் வித்ரோஹி போன்ற புனைப்பெயர்களைப் பயன்படுத்தினார்.


3. பகத் சிங் ஒரு நாத்திகர் மற்றும் கிளர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட ஒரு மார்க்சியவாதி. 1930ஆம் ஆண்டு அவர் எழுதிய "நான் ஏன் நாத்திகர் ஆனேன்?" (Why I am an Atheist) என்ற கட்டுரையில், மதத்தை விமர்சித்தார். எல்லா மதங்களும் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஒவ்வொன்றும் தான் ஒரே உண்மையான நம்பிக்கை என்று கூறுகின்றன. இதுவே பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்று பகத்சிங் நம்பினார்.


4.  பகத் சிங் மார்க்ஸ், லெனின், ட்ராட்ஸ்கி மற்றும் பகுனின் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். அவரது இறுதி எழுத்தான "இளம் அரசியல் தொண்டர்களுக்கு" (1931) கட்டுரையில், அவர் மார்க்சிய அடிப்படையில் சமூகத்தை மீண்டும் வளர்வதை ஆதரித்தார். இருப்பினும், சில கடுமையான மார்க்சியக் கருத்துக்களுடன், அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த சர்வாதிகார ஆட்சியை ஊக்குவித்தவற்றுடன் அவர் உடன்படவில்லை.


லாகூர் சதி வழக்கு மற்றும் பகத் சிங்கின் விசாரணை


1. இந்திய நாடாளுமன்றத்தில் குண்டுவெடிப்பு நடத்தியதற்காக பகத்சிங்கும் அவரது கூட்டாளியான படுகேஷ்வர் தத்தும் முதலில் கைது செய்யப்பட்டனர். "காது கேளாதவர்களைக் கேட்க வைக்க உரத்த குரல் தேவை" என்ற வாசகம் கொண்ட துண்டுப்பிரசுரங்களை பகத்சிங் வீசினர். யாரையும் கொல்வதோ அல்லது தீங்கு விளைவிப்பதோ அல்ல, மாறாக நியாயமற்ற அமைப்புக்கு எதிராகப் போராடுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. அது அந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றத்தின் "போலித் தன்மையை" வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகத்தான். அதற்காக சிங் மற்றும் தத் இருவரும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்


2. இருப்பினும், பின்னர், லாகூர் சதி வழக்கில் பகத் சிங் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 1928-ல், அவரும் ராஜ்குருவும் ஒரு ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஜான் பி. சாண்டர்ஸை தவறுதலாகக் கொன்றனர். சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தின்போது லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டைக் குற்றம் சாட்டி அவரைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.


3. லாகூர் சதி வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வைஸ்ராய் இர்வின் ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தை அமைத்தார். இது இந்தியாவிலும் பிரிட்டனிலும் நியாயமற்றது என்று விமர்சிக்கப்பட்டது. அக்டோபர் 7, 1930 அன்று, தீர்ப்பாயம் இந்துஸ்தான் சோசலிச குடியரசு இராணுவத்தின் (Hindustan Socialist Republican Army (HSRA)) உறுப்பினர்களான பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மார்ச் 23, 1931 அன்று தூக்கிலிடப்பட்டனர்.



Original article:

Share: