உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழு (Supreme Court Legal Services Committee (SCLSC)) ஆணை என்ன சொல்கிறது, அதற்கு உறுப்பினர்களை யார் பரிந்துரைப்பது? சட்ட உதவி ஏன் தேவை ? நாங்கள் விளக்குகிறோம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் உச்ச நீதிமன்றத்தின் சட்டப் பணிகள் குழுவின் (Supreme Court Legal Services Committee (SCLSC)) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய தலைமை நீதிபதிக்குப் (Chief Justice of India (CJI)) பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பதிலாக அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறை டிசம்பர் 29, 2023 அன்று நீதிபதி கவாயின் நியமன அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் சட்ட சேவைகள் தொடர்பான குழு மற்றும் சட்டங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழு (Supreme Court Legal Services Committee) என்றால் என்ன?
உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவைகள் குழு (Legal Services Committee), 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணைய சட்டம் (Legal Services Authorities Act, 1987 )மூலம் உருவாக்கப்பட்டது, இது உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள வழக்குகளில் பின்தங்கிய குழுக்களுக்கு இலவச மற்றும் திறமையான சட்ட உதவியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. சட்டத்தின் பிரிவு 3Aஇன் படி, தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority or NALSA) குழுவை அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. இது மத்திய ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மற்ற உறுப்பினர்களுடன் தலைவராக பணியாற்றும் ஒரு தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டுள்ளது. தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்கள் இருவரும் இந்திய தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். கூடுதலாக, தலைமை நீதிபதி குழுவின் செயலாளரை நியமிக்கலாம்.
உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழு யாரை உள்ளடக்கியது?
தற்போது, உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவில் (SCLSC) பி.ஆர்.கவாய் தலைவராகவும், இந்தியத் தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களும் உள்ளனர். தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், மத்திய ஆணையத்தின் தேவைக்கேற்ப அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பணியமர்த்த குழுவானது அனுமதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 1995 இன் தேசிய சட்ட சேவைகள் ஆணைய விதி 10 உச்ச நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவின் (SCLSC) உறுப்பினர்களின் எண்ணிக்கை, நிபுணத்துவம் மற்றும் தகுதிகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. 1987 சட்டத்தின் பிரிவு 27 இன் படி, சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், இந்தியத் தலைமை நீதிபதியுடன் இணைந்து, மத்திய ஆணையம் விதிகளை உருவாக்க முடியும்.
சட்ட சேவைகளின் தேவை என்ன, அது மக்களுக்கு எவ்வாறு பயன்படும்?
இந்திய அரசியலமைப்பு, சட்ட சேவைகளின் முக்கியத்துவத்தை பல பிரிவுகளில் வலியுறுத்துகிறது. பொருத்தமான சட்டங்கள் அல்லது திட்டங்கள் மூலம் இலவச சட்ட உதவியை வழங்குவதன் மூலம், பொருளாதார அல்லது பிற வரம்புகளைப் பொருட்படுத்தாமல், சட்ட அமைப்பு அனைவருக்கும் நீதியை மேம்படுத்துவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று விதி 39A குறிப்பாக கூறுகிறது.
கூடுதலாக, சட்டப்பிரிவு 14 சமத்துவ உரிமைக்கு (right to equality) உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் பிரிவு 22(1) கைது செய்வதற்கான காரணங்களைத் (rights to be informed of grounds for arrest) தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்கிறது சட்டத்தின் கீழ் சமத்துவத்தையும் நீதியை ஊக்குவிக்கும் சட்ட அமைப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
சட்ட உதவி திட்டத்தின் கருத்து 1950 களில் விவாதிக்கப்பட்டது, ஆனால் 1980 இல் ஒரு தேசிய குழு உருவாக்கப்பட்டது. நீதிபதி பி.என்.பகவதி இந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். அவர்கள் இந்தியா முழுவதும் சட்ட உதவி முயற்சிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தனர்.
சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் என்ன சொல்கிறது
1987 ஆம் ஆண்டில், சட்ட உதவித் திட்டங்களுக்கு அடித்தளத்தை உருவாக்க சட்ட சேவைகள் ஆணைய சட்டம் (Legal Services Authorities Act) நிறைவேற்றப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பட்டியல் சாதியினர் (Scheduled Castes(SC)), பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes(ST)) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள் (Economically Weaker Section(EWS)), தொழில்துறை தொழிலாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் பல போன்ற தகுதியுள்ள பல்வேறு குழுக்களுக்கு இலவச மற்றும் திறமையான சட்ட உதவிகளை வழங்குவதே இதன் இலக்காகும்.
சட்ட சேவைகள் ஆணைய சட்டத்தின் படி, 1995 இல் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) உருவாவதற்கு வழிவகுத்தது. இது சட்ட உதவி திட்டங்களை மேற்பார்வையிடுதல் மற்றும் மதிப்பீடு செய்தல் மற்றும் அணுகக்கூடிய சட்ட சேவைகளுக்கான கொள்கைகளை அமைப்பது ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. சட்ட உதவியை வழங்குவதற்காக நாடு தழுவிய வலையமைப்பிற்கு சட்டம் வழிவகுக்கிறது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மாநில சட்ட சேவைகள் அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு (NGO) சட்ட உதவி முயற்சிகளை மேற்கொள்ள நிதி மற்றும் மானியங்களை ஒதுக்கீடு செய்கிறது.
பின்னர், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) அதன் கொள்கைகளை செயல்படுத்தவும், இலவச சட்ட சேவைகளை வழங்கவும் மற்றும் லோக் அதாலத்தை ஏற்பாடு செய்யவும் மாநில சட்ட சேவைகள் ஆணையங்கள் (State Legal Services Authority(SLSA)) உருவாக்கப்பட்டன. ஒரு மாநில சட்ட சேவைகள் ஆணையம் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் வழிநடத்தப்படுகிறது மற்றும் மூத்த உயர் நீதிமன்ற நீதிபதியை அதன் நிர்வாகத் தலைவராகக் (Executive Chairman) கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் முக்கிய புரவலர்-தலைவர் (patron-in-chief) ஆவார், மேலும் இந்திய தலைமை நீதிபதி (CJI) தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) முக்கிய புரவலர்-தலைவராக (patron-in-chief) பணியாற்றுகிறார்.
இதே பாணியில், மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான தாலுகாக்களில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் (District Legal Services Authorities (DLSA's)) மற்றும் தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள் (Taluk Legal Services Committees(TLSC)) உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையமும் அந்த மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியால் வழிநடத்தப்படுகிறது.
தாலுகா அல்லது துணைப்பிரிவு சட்ட சேவைகள் குழுக்கள் மூத்த சிவில் நீதிபதியால் (senior civil judge) கண்காணிக்கப்படுகின்றன. இந்த குழுக்கள் இணைந்து, சட்ட விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றன, இலவச சட்ட சேவைகளை வழங்குகின்றன, மேலும் பிற பொறுப்புகளுடன் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களின் விநியோகம் மற்றும் மீட்டெடுப்பை நிர்வகிக்கின்றன.