வேலை சந்தையில் உள்ள திறன் தேவைகளை உயர் கல்வி பூர்த்தி செய்யவில்லையா ? -ஏ. எம். ஜிகீஷ்

 தனியார் நிறுவனங்களின் அறிக்கைகள், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பட்டதாரிகளில் பாதிக்கும் குறைவானவர்களே வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக கூறுகின்றன. பல வளரும் நாடுகளை விட இந்தியாவில் பட்டதாரிகள் வேலையின்மை அதிகமாக இருப்பதாக காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) வெளிப்படுத்துகிறது. தொற்றுநோய்களின் போது கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். ஆனால், இப்போது அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் இணையவழி கல்வியின் தரம் குறித்தும் கவலைகள் உள்ளன. இந்தியாவின் உயர்கல்வியானது வேலை சந்தை திறன்களுடன் ஒத்துப்போகவில்லையா? ஜிகேஷ் என்பவர், ஃபுர்கான் கமர் (Furqan Qamar) மற்றும் சந்தோஷ் மெஹ்ரோத்ரா (Santosh Mehrotra)  உடன் இந்த பிரச்சினையை பற்றி விவாதிக்கின்றனர். 


ஆன்லைன் கற்றல் வேலைவாய்ப்பை பாதித்துள்ளதா?


சந்தோஷ் மெஹ்ரோத்ரா: இணையவழி கற்றல் பிரபலமடைவதற்கு முன்பே வேலை வாய்ப்பு பற்றிய சிக்கல்கள் இருந்தன. உயர்கல்வியைப் பெற்றவர்கள் அல்லது பெறுபவர்கள் குறைந்தபட்சம் 20-30% வருமானப் பங்கீட்டை சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம், எனவே அவர்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையிலும் உள்ளனர். பெரும்பாலான இந்திய இளைஞர்கள் உயர்கல்வியில் நுழையக்கூட முடியவில்லை. உயர்கல்விக்கான சேர்க்கை விகிதம் 18-23 வயதுடையவர்களிடையே சுமார் 27% ஆகும். 2012 இல், பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் 20% ஆக இருந்தது, ஆனால் 2021 இல் இது 34% ஆக அதிகரித்தது. முதுகலை பட்டதாரிகளுக்கு, 2012 இல் 18% ஆகவும், 2021 இல் 37% ஆகவும் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்தது. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்,  இணையவழி கற்றலுக்கு முன்பே, நமது கல்வி முறையின் கட்டமைப்பு பிரச்சனைக்குரியதாக இருந்தது.


2006 முதல் 2018 வரை உயர்கல்வி பெருமளவில் விரிவடைந்ததே இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இது தனியார் கல்லூரிகளின் விரைவான அதிகரிப்புக்கும், அவற்றின் தரம் குறைவதற்கும் வழிவகுத்தது. மாநில மற்றும் மத்திய அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் (University Grants Commission) இந்த நிறுவனங்களை திறம்பட ஒழுங்குபடுத்த முடியவில்லை. இப்பல்கலைக்கழகங்கள் வெறும் தேர்வை நடத்தும் அமைப்புகளாக மாறிவிட்டன.  மேலும், இணையவழி கல்வியும் ஒரு கூடுதல் பிரச்சனையாகி விட்டது. பேராசிரியர் கமர் இந்த அம்சத்தை விரிவாகக் கூறலாம் என்று நினைக்கிறேன்.  


ஃபுர்கான் கமர்: ஆம், படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. ஆனால், பட்டதாரிகளுக்கு இந்தியாவில் வேலை கிடைக்கவில்லை என்றால், பொருளாதாரம் எந்த வேலையையும் உருவாக்காதது கூட காரணமாக இருக்கலாம். அதனால்தான் வெளிநாடுகளில் சிறந்த வாய்ப்புகளைத் தேடி நாட்டை விட்டு வெளியேறும் ஏராளமான பட்டதாரிகள் உள்ளனர்.


இணையவழி கற்றலினால் ஏற்படும் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார். மாணவர்கள் கணிசமான அளவில் கற்றல் இழப்பை சந்தித்துள்ளனர். நீண்ட மணிநேர திரை நேரத்தில் கவனம் செலுத்துவதில் அவர்கள் சிரமப்பட்டனர். இது அவர்களின் கற்றலில் குறைபாடுகளை ஏற்படுத்தியது. இந்த குறைபாடுகள் அறிவைப் பெறுவதற்கும் அதிக வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் அவர்களின் திறனை பாதிக்கிறது. கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (Ed-tech companies) குறைக்கப்படுவதாகவும், மேலும் இந்த நிறுவனங்களால் தங்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பதை மாணவர்கள் உணர்ந்தனர்.


பொருளாதாரம் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்று கமர் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், விவசாயம் இன்னும் பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது மற்றும் வேலைகளை வழங்குவதில் உற்பத்தி துறையின் பங்கு குறைந்து வருகிறது. எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் திறன் மேம்பாடு எவ்வாறு முதன்மைத் துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்?


ஃபுர்கான் கமர்: இந்தியாவில் விவசாயம் இன்னும் பாரம்பரியமாக உள்ளது. ஆனால், இது உயர் தொழில்நுட்ப முறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, பல முக்கிய பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபடுவது இல்லை. மேலும், சேவைத் துறையில், உருவாக்கப்படும் வேலைகள் உயர் மட்ட அறிவு தேவைபடுகிறது. இருப்பினும், விநியோக நபர் (delivery man) போன்ற பெரும்பாலான பல வேலைகள்  படித்த நபர்களுக்கு விருப்பமான தேர்வாக இல்லை. இருப்பினும், வேறு வேலை வாய்ப்புகள் இல்லாததால், பட்டதாரிகள் இந்த வேலைகளில் சேர்கிறார்கள். 


உயர்கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் அறிவுசார்ந்த நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் புதிய அறிவை உருவாக்கும் போது, அது பல நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் பரிந்துரைக்கிறார். மேலும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, வணிக வாய்ப்புகள், புதுமை, தொழில்முனைவு மற்றும் புதிய தொழில் நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் பட்டதாரிகளுக்கு மிகவும் பொருத்தமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

சந்தோஷ் மெஹ்ரோத்ரா: இந்தியாவின் உயர்கல்வித் துறையில், குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (research and development (R&D)) உள்ள கட்டமைப்பில் சிக்கல்கள் உள்ளதை சுட்டி காட்டினார். அதில், 


முதலாவதாக, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டற்கான (research and development (R&D)) செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% மட்டுமே. இது, கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது 4% குறைவாக உள்ளது. இவ்வளவு குறைந்த முதலீட்டில் எப்படி புதிய அறிவை உருவாக்க முடியும்? என்று மெஹ்ரோத்ரா கேள்வி எழுப்புகிறார்.

 

இரண்டாவதாக, உலகளவில், தனியார் பெருநிறுவன துறையின் மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவினங்களில் 70% ஆகும், இதில் 30% மட்டுமே அரசிடம் இருந்து வருகிறது. இந்தியாவில், மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவினங்களில் 70% பொதுத் துறையின் பங்களிப்பு மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் சிறியது. ஆனால் இந்தியாவில், இந்த நிலைமை தலைகீழாக உள்ளது.  இதன் பொருள் ஆராய்ச்சியில் தனியார் துறையில் வேலைகள் அதிகரிக்கவில்லை.


மூன்றாவதாக, உலகின் பெரும்பாலான பகுதிகளில், ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்க பகுதியான பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், பொது நிதியில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இது உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியின் நோக்கத்தையும் தரத்தையும் கட்டுப்படுத்துகிறது.


ஆராய்ச்சிக்கான இந்திய அரசின் நிதியுதவியின் பெரும்பகுதி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) போன்ற நிறுவனங்களுக்கு செல்கிறது என்று மெஹ்ரோத்ரா விளக்குகிறார். இந்த பொது ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியை பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகளாகவும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் செயல்முறைகளாக மாற்றும் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலைத் தீர்க்கப் போகிறோம். இதை நிவர்த்தி செய்ய, கூடுதலாக, பல்கலைக்கழகங்கள் அதிக நிதியைப் பெற வேண்டும். மேலும் தொழில்துறையுடன் அதிக ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இந்தியாவில் தெளிவான தொழில்துறை கொள்கை அல்லது உற்பத்திக்கான யுக்திகள் இல்லை. இது பெரும்பாலும் உயர் மதிப்புள்ள சேவைத் துறைகளில் பணிபுரியும் இளம், படித்த ஆராய்ச்சியாளர்களை உள்வாங்குவதைப் பாதிக்கிறது. இந்தியாவில் ஆராய்ச்சி மையங்களுடன் சுமார் 800 பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மதிப்பு பெரும்பாலும் மற்ற வெளிநாடுகளுக்கு பயனளிக்கிறது.


பேராசிரியர் மெஹ்ரோத்ரா, சில அறிக்கைகள் இந்தியாவில் ஆண்களை விட வேலை வாய்ப்புள்ள பெண் பட்டதாரிகளின் சதவீதம் அதிகம் என்று கூறுகின்றன. ஆனால் தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. இந்தியாவில் பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் கல்விக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா?


சந்தோஷ் மெஹ்ரோத்ரா: இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு பிரச்சினை என்பது, ஏமன் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு உலகின் மிகக் குறைவு. இருப்பினும், கல்வியில் நேர்மறையான போக்கை சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் பெண்கள் முன்பை விட சிறந்த கல்வியைப் பெறுகிறார்கள். நாடு இரண்டாம் நிலையில் பாலின சமத்துவத்தை அடைந்துள்ளது. இது தனிநபர் வருமானத்தின் அளவிற்கு அசாதாரணமானது. இதன் விளைவாக, அதிகமான பெண்கள் சிறந்த கல்வியறிவு பெற்றுள்ளனர் மற்றும் அவர்களின் விருப்பங்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பது ஆகும். ஆனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்றால் இந்தப் பெண்கள் என்ன செய்ய முடியும்?


இது 2020 தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy) நான்காவது ஆண்டாகும், இது பாரம்பரிய பாடத்திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களுடன் திறன்களை ஒருங்கிணைக்க உறுதியளிக்கிறது. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) தாக்கத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?


ஃபுர்கான் கமர்: தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில்  தேர்ந்தெடுத்து செயல்படுத்துதல் என்பது ஒரு பிரச்சனை உள்ளது. கொள்கையின் பெயரால் என்ன நடக்கிறதோ அதுவே நடக்கிறது, அதே சமயம் கொள்கை வெவ்வேறு நிபந்தனைகளை வழங்குகிறது. ஆனால் அவை கொள்கையின் உண்மையான விதிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை. ஆனால், இந்த கொள்கையின் செயல்பாட்டால் சிறிய கணிசமான மாற்றத்திற்கு வழிவகுத்தது. மாறாக, உயர்கல்வி நிறுவனங்களிடையே சர்ச்சைகளையும் குழப்பத்தையும் மேலும் ஏற்படுத்தியுள்ளது.


"நான் விளக்குகிறேன். மாணவர் சேர்க்கைக்கு ஒரு நிலையான வழி இருக்க வேண்டும் என்று கொள்கை கூறுகிறது. இதற்கு  தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) மதிப்பெண்களைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.  இருப்பினும்,  அந்த மதிப்பெண்களைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற விருப்பம் தனிப்பட்ட உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிடம் விடப்படும் என்று கொள்கை அடிக்கோடிட்டுக் காட்டியது. அப்போது மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Central University Entrance Test) அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ (one nation, one examination) என்று பேச ஆரம்பித்தோம். அதனால் உயர்கல்வி முறை மிகவும் குழப்பமாக உள்ளது.


பெண்கள் பற்றிய முந்தைய விவாதத்திற்குத் திரும்புகையில், உயர்கல்வியில் சராசரியாக ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருந்தாலும், பொறியியல் மற்றும் வேலை சார்ந்த படிப்புகளில் அவர்கள் குறைவாகவே உள்ளனர். பின்னர் அவர் சமூக வளர்ச்சியின் சமத்துவத்திற்கு கவனம் செலுத்துகிறார். இதில், உயர்கல்வியில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் பங்கேற்பைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அவர்களின் பங்கேற்பு இடஒதுக்கீடு வழங்கும் அளவிற்கு அருகில் இருந்தாலும், அது அவர்களின் மக்கள்தொகை பங்கை விட மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட சமத்துவ நடவடிக்கைகளுக்கு தீர்வு காணுவது பற்றி  தேசிய கல்விக் கொள்கை பேசவில்லை.  பல்வேறு குழுக்களுக்கான உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான தலையீட்டு உத்திகள் வேறுபட்டதாக இருக்க வேண்டும்.  


இந்தியாவின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (industrial training institutes (ITI)) மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஏழை மற்றும் விளிம்புநிலை மாணவர்களுக்கு சில திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. திறமையான வேலைவாய்ப்பில் இந்த சமத்துவமின்மை பிரச்சினைக்கு அவைகள் எவ்வாறு தீர்வு காண உதவும் ?


சந்தோஷ் மெஹ்ரோத்ரா: இணைப்புக் கல்லூரிகளைப் போலவே தொழில்துறை பயிற்சி நிறுவனங்களின் (ITI) எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகமான விரிவாக்கம் கல்வி மற்றும் வழங்கப்படும் பயிற்சியின் தரம் பற்றிய கவலையை எழுப்புகிறது. அடுத்த 12 ஆண்டுகளில் உயர்கல்வியில் இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதத்தை (gross enrolment ratio) தற்போதைய 27% லிருந்து 50% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கையுடன் இந்தப் பிரச்சினை இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக இத்தகைய வளர்ச்சிக்கு ஆதரவாக அரசாங்க நிதி போதுமான அளவு அதிகரிக்கப்படவில்லை. 


திறமையான வேலைவாய்ப்பில் உள்ள சமத்துவமின்மை பிரச்சினைக்கு தீர்வு காண மாற்று அணுகுமுறை உள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களை உயர்கல்வியை நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக, தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்  மற்றும் சிறந்த தொழிற்கல்வி நிறுவனங்களை நோக்கி மாணவர்களை திசை திருப்புவது, தொழில் மற்றும் முதலாளிகளுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் இந்தத் தொழிற்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த அணுகுமுறை, மிகவும் பயனுள்ள திறன் மேம்பாட்டிற்கும், மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.


ஃபுர்கான் கமர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் மேலாண்மை ஆய்வுகள் துறை பேராசிரியர்; சந்தோஷ் மெஹ்ரோத்ரா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share: