இந்தியாவில் சிவில் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் -ராகுல் முகர்ஜி, ஆதித்யா ஸ்ரீவஸ்தவா

 இந்தியாவின் ஜனநாயகம் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது, ஏனெனில் அரசு வகுப்புவாத எதிர்ப்பு மற்றும் முற்போக்கான சிவில் சமூகத்தைத் (Civil society) தீவிரமாக கண்கானிக்கிறது.

 

ஜனநாயகத்தின் சாராம்சம் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான குடியுரிமையில் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்ட மற்றும் ஆற்றல்மிக்க சமுதாயத்தை இந்தியா பெற்றிருப்பது அதிர்ஷ்டம். ஆனாலும், அரசியலமைப்புச் சுதந்திரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட சமூக மற்றும் அரசியல் சக்திகளுக்கு இது இன்றியமையாதது. இந்த சுதந்திரங்களை அங்கீகரித்து பாதுகாக்கவேண்டும்.  


வகுப்புவாத எதிர்ப்பு மற்றும் முற்போக்கான குடிமையியல் அரசின் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மதச்சார்பின்மை, அஸர்வ தர்ம சம பவ (sarva dharma sambhava) அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் குடிமக்களின் நல்வாழ்வை வழங்கும் எந்தவொரு கட்சியின் கீழும் இந்து தேசியவாதத்திற்கு எதிராக ஒன்றுபடும் சமூகத்தின் பிரிவும் இதுதான். 

 தாக்குதலின் தீவிரம் 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியை நம்பியிருக்கும் பெரிய மற்றும் சிறிய 15 அமைப்புகளின் குடிமைச் செயல்பாடுகளை (civic space) கட்டுப்படுத்த அரசு பயன்படுத்தும் முறைகளின் வரிசையை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த அமைப்புகள் அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) போன்ற தாக்குதல்களை எதிர்கொண்ட நன்கு அறியப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது. சமத்துவ ஆய்வுகளுக்கான மையம் (Centre for Equity Studies), நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizens for Justice and Peace), வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு அமைப்பு (Lawyers Collective), சமூக அக்கறைகளை மேம்படுத்துவதற்கான மையம் (Centre for Promotion of Social Concerns) மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக அமைப்பு (Act Now for Harmony and Democracy (ANHAD)) ஆகியவை இவற்றில் அடங்கும்.


இந்த அமைப்புகள் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல், நடுநிலையிலிருந்து மிதமானவை முதல் வலிமையானவை வரை அவற்றின் நிலைப்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. 


வகுப்புவாதத்தை தீவிரமாக எதிர்க்கும் அமைப்புகள் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டன என்பதை எங்கள் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த தாக்குதல்களை நாங்கள் ஒரு அளவில் வகைப்படுத்தினோம், அவர்களின் நிதியைக் குறைத்தது மட்டுமல்லாமல், அவர்களின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது  குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizens for Justice and Peace (CJP)), அம்னெஸ்டி இந்தியா(Amnesty India), ஆக்ஸ்பாம்(Oxfam), சமத்துவ ஆய்வுகளுக்கான மையம் (Centre for Equity Studies) மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டு (Lawyers Collective.) போன்ற அமைப்புகள் எடுத்துக்காட்டுகளாகும்.


மிதமான தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்கள் அரசின் பல தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. இது அவர்களின் செயல்பாடுகளை வெகுவாக குறைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட செயல்பட முடியவில்லை. கொள்கை ஆராய்ச்சி மையம் (Centre for Policy Research (CPR)) இந்த நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றொன்று அமெரிக்க நிதியுதவியுடன் குறிப்பிடத்தக்க அரசு சாரா நிறுவனம் (NGO) ஆகும். இந்த NGO வகுப்புவாதப் பிரச்சினைகளுடன் தொடர்பில்லாத பகுதிகளில் செயல்படுகிறது. 


ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அமைப்பு (Act Now for Harmony and Democracy (ANHAD)) போன்ற வகுப்புவாத பிரச்சினைகளை கடுமையாக எதிர்க்கும் NGOக்களும் உள்ளன. இந்த வகையைச் சேர்ந்த சில அமைப்புகள் வகுப்புவாதத்திற்கு எதிரான விஷயங்களில் நடுநிலை வகிக்கின்றன. இந்தியாவில் குடிமையியல் இடம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையம் (Centre for Policy Research (CPR)) போன்ற வகுப்புவாத அமைப்புகள் கூட இந்திய அரசால் தனியாக விடப்படவில்லை. கொள்கை ஆராய்ச்சி மையத்தின் முக்கியமான நபர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தற்போதைய தலைவர் மற்றும் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ஆகியோரும் கொள்கை ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடையவர்களே.


கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையம் (Centre for Policy Research (CPR)) ஆதிவாசிகளின் உரிமைகளை ஆதரிக்கும் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இயக்கங்கள் கௌதம் அதானி என்ற தொழில் அதிபரின் சுரங்கத் தொழிலைப் பாதிக்கிறது. கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையம் தாக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.


சில தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், முக்கியமான மனித உரிமைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினாலும், பெரும்பாலும் வகுப்புவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இந்த நிறுவனங்கள் ஒரே ஒரு தாக்குதலை மட்டுமே சந்தித்துள்ளன. தலித் உரிமைகளுக்கான தலைவரான நவ்சர்ஜன் (Navsarjan) மற்றும் குழந்தை உரிமைகளுக்காகப் பணிபுரியும் குழந்தைகளை காப்பாற்றுதல் போன்ற அமைப்புகள், அடிக்கடி அல்லது கடுமையாக தாக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒப்பிடும்போது குறைவான சவால்களை எதிர்கொள்கின்றன.


அரசின் நடவடிக்கைகள் நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. உதாரணமாக, கிரீன்பீஸ் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்வதில் இருந்து குறைவான தாக்குதல்களை சந்திக்கும் நிலைக்கு மாறியுள்ளது இந்த மாற்றத்தின் போது, கிரீன்பீஸ் (Greenpeace) தனது கவனத்தை உரிமைகள் அடிப்படையிலான அணிதிரட்டல், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் ஆதிவாசிகளின் உரிமைகள் ஆகியவற்றிற்காக வலுவாக வாதிடுவதில் இருந்து இந்த பகுதிகளில் மிகவும் மிதமான நிலைப்பாட்டிற்கு மாற வேண்டியிருந்தது.    

அரசின் பல்வேறு முறைகள்     


நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசு பயன்படுத்தும் பல்வேறு முறைகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அவை, ஒரு முறை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது. பணமோசடி குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act) உட்பட, அரசு சாரா நிறுவனங்களை முக்கியமாக பாதிக்கும் செயல்களில் கவனம் செலுத்தினோம்.


பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002), 2019 இல் திருத்தப்பட்டது. இந்த மாற்றங்கள் குற்றச் செயல்களின் பரந்த வரையறையை அனுமதித்தன. அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளை குறிவைக்க வருவாய்த்துறை இதைப் பயன்படுத்தியது. இந்த நன்கு அறியப்பட்ட தாக்குதல்களுக்கு அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) தலைமை தாங்கியது. 


1976 இல் இருந்து வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (Foreign Contribution (Regulation) Act,  (FCRA)) 2010  மற்றும் 2020 இல் திருத்தம் செய்யப்பட்டது. 2010 திருத்தம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. 2020 திருத்தம் பாரதிய ஜனதா (BJP) அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. என்ஜிஓக்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியைக் கட்டுப்படுத்த பாஜக அரசு இந்தப் புதுப்பிப்புகளைப் பயன்படுத்தியது. 2015 மற்றும் 2022 க்கு இடையில் சுமார் 18,000 நிறுவனங்கள் வெளிநாட்டு நிதிக்கான அணுகலை இழந்துள்ளன. 


ஆனால், அரசியல் கட்சிகளின் வெளிநாட்டு நிதியில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் தாக்கம் காலப்போக்கில் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும், இது என்ஜிஓகளுக்கு எதிராக திறம்பட பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் முன் குறிப்பு வகைப்பட்டியலால் (Prior Reference Category List) ஊக்கமளிக்கவில்லை. இந்த பட்டியலில் சுமார் 80 நன்கு அறியப்பட்ட நன்கொடையாளர்கள் உள்ளனர். மனித உரிமைகளை ஆதரித்தால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு மிரட்டப்படுகிறார்கள். 


மத்திய புலனாய்வு அமைப்பு (Central Bureau of Investigation (CBI)) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் என்ஜிஓக்களையும் விசாரிக்க முடியும். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, அம்னெஸ்டி இந்தியா (Amnesty India) மற்றும் அதன் தலைவர் ஆகர் படேல் (Aakar Patel) ஆகியோருக்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இத்தகைய நடவடிக்கைகள் சட்டரீதியான தண்டனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட செயல்முறையே தண்டனையின் ஒரு வடிவமாக இருக்கலாம். 

 

வகுப்புவாத எதிர்ப்பு அரசு சாரா நிறுவனங்களின் (NGOs)  உள்நாட்டு நிதியுதவியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் 12A மற்றும் 80G பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகள் அரசு சாரா நிறுவனங்களுக்கும் அவற்றின் நன்கொடையாளர்களுக்கும் வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், 2020 இன் திருத்தங்கள் இந்த பிரிவுகளை மாற்றின. 


இப்போது, என்ஜிஓக்கள் தங்கள் 12A மற்றும் 80G சான்றிதழ்களை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும். அவர்கள் பான் கார்டு எண்கள் உள்ளிட்ட நன்கொடையாளர் தகவல்களை நிதி அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டும். இந்த மாற்றங்கள் உள்நாட்டு நன்கொடையாளர்களை குறிப்பாக வகுப்புவாதம் (communalism) மற்றும் சலுகைசார் முதலாளியத்திற்கு (crony capitalism) எதிராக போராடுபவர்கள் மிரட்டுவதற்கு அரசை அனுமதிக்கின்றன.




Original article:

Share: