இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை பற்றிய கருத்து : சரியான ஆதரவை வழங்குதல் -Editorial

 தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support prices (MSP)) மற்றும் கொள்முதல் கொள்கையானது (procurement policy) முக்கியமாக குறைந்த எண்ணிக்கையிலான பயிர்களுக்கு பயனளிக்கிறது மற்றும் சந்தையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகை விவசாயத்தில் விவசாயிகள் முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். முதலாவதாக, அரிசி, கோதுமை மற்றும் கரும்பு போன்றவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (minimum support prices (MSP)) திறம்பட செயல்படுத்தப்படவில்லை, அங்கு அரசாங்கம் நேரடி கொள்முதல் அல்லது ஆலைகளிலிருந்து கொள்முதல் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்கிறது. எடுத்துக்காட்டாக, கடுகு தற்போது ராஜஸ்தானில் அதன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே விற்கப்படுகிறது, மேலும் கொண்டைக்கடலை மகாராஷ்டிராவில் வரவிருக்கும் பயிர் அறுவடைக்கு முன்பே அதன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கீழே விற்கப்படுகிறது.


இரண்டாவதாக, இறக்குமதிக்கு ஆதரவாக ஒரு சார்பு உள்ளது. கோதுமைக்கு 40% இறக்குமதி வரியும், அரைக்கப்பட்ட அரிசிக்கு 70% இறக்குமதி வரியும், சர்க்கரைக்கு 100% இறக்குமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை பூஜ்ஜிய வரியுடன் இறக்குமதி செய்யலாம். கொண்டைக்கடலை மற்றும் பாசிப்பருப்பு தவிர, பெரும்பாலான பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி இல்லை.


இந்தியா தனது சமையல் எண்ணெய் இறக்குமதியை 2013-14 மற்றும் 2022-23 க்கு இடையில் 11.6 மில்லியனில் இருந்து 16.5 மில்லியன் டன்களாக உயர்த்தியுள்ளது. இது $16.7 பில்லியன் மதிப்புடைய உள்நாட்டு தேவையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியது. இது நரேந்திர மோடி அரசுக்கு சாதகமான சாதனை அல்ல. மாறாக, பருப்பு வகைகளின் இறக்குமதி 2016-17ல் 6.6 மில்லியன் டன்னிலிருந்து 2022-23ல் 2.5 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக 90% தன்னிறைவு அடைந்துள்ளது. எவ்வாறாயினும், நாடளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக, உற்பத்தியாளர்களை ஆதரிப்பதில் இருந்து நுகர்வோருக்கு மோடி அரசாங்கம் தனது கவனத்தை மாற்றியதால், இறக்குமதியில் சமீபத்திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


கோதுமை, அரிசி அல்லது கரும்பு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போதுமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கவனத்தைப் பெறவில்லை. உதாரணமாக, மரபணு மாற்றப்பட்ட கலப்பின கடுகு மற்றும் களைக்கொல்லி-எதிர்ப்பு சோயாபீன் போன்ற பயிற்கள் அங்கீகரிக்கப்படவில்லை, இது அதிகாரப்பூர்வ புறக்கணிப்பைக் குறிக்கிறது. பருப்பு வகைகளில் கூட, கொண்டைக்கடலை மற்றும் பாசிபருப்பு குறுகிய கால விளைச்சல் வகைகளை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


ஒரு சில பயிர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் கொள்கை குறித்து பல்வேறு அரசு துறைகள் கவலை தெரிவிக்கின்றன. இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். விவசாயிகள்,  பொருளாதார வல்லுநர்கள் போலவே, விலை சமிக்ஞைகள் மற்றும் ஊக்கத்தொகைகளுக்கு பதிலளிக்கின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் சந்தைகளை பூர்த்தி செய்ய வேண்டும், அவற்றை மாற்றக்கூடாது. இந்திய விவசாயத்தில் கால்நடைகள் மற்றும் தோட்டக்கலைத் துறைகள் கடந்த இருபது ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஏனெனில் அவற்றின் சந்தை சார்ந்தது. இதற்கு நேர்மாறாக, பயிர்களின் துணைத் துறை (crops sub-sector) குறைவான இயக்கத்தன்மை கொண்டது.  இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும், மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் உள்ளீட்டு மானியங்கள் உட்பட அனைத்து விலை அடிப்படையிலான ஆதரவுகளையும் ஒரு ஏக்கருக்கு வருவாய் பரிமாற்றத்துடன் மாற்றுவதே சிறந்த அணுகுமுறையாகும்.       




Original article:

Share: