செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச அமைப்பை உருவாக்குவது உள்நாட்டு நலன்கள் மற்றும் வல்லரசு போட்டி காரணமாக சவால்களை எதிர்கொள்கிறது. தற்போதுள்ள துறை சார்ந்த தரநிலை அமைப்புகளைப் (standard-setting) பயன்படுத்துவது ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence (GPAI)) உச்சிமாநாட்டில் இந்தியா தனது நான்காவது உலகளாவிய கூட்டாண்மை பிரகடனத்தை (New Delhi Declaration) சமீபத்தில் ஏகமனதாக இந்தியாவில் அங்கீகரித்தது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் தொடர்புடைய புதுமை மற்றும் அபாயங்களுடன் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர். இதே போன்ற கருத்துக்களை ஊக்குவிக்க சமீபத்தில் நடத்தப்பட்ட பல அரசுகளுக்கிடையேயான உச்சிமாநாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த பொதுவான கூட்டாண்மைகளுக்கு அப்பால் சென்று, நாடுகளால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் சட்டங்களில் உள்ளடங்கிய தன்மையை உறுதி செய்ய ஒரு சர்வதேச அமைப்பு தேவை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த விவாதம் முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு குறியீட்டு அறிக்கை (Artificial Intelligence Index Report) 2022 இன் படி, 25 நாடுகளில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டங்களின் எண்ணிக்கை 2016 லிருந்து 2022 இல் 18 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தேசிய அல்லது சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் செல்வதால், உள்நாட்டு சட்டங்களின் செயல்திறன் குறித்து கேள்விகள் உள்ளன. கூடுதலாக, ஒரு மையப்படுத்தப்பட்ட எல்லைகடந்த நிர்வாக அமைப்பு (centralised transboundary governance) இல்லாதது, குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், போட்டித்தன்மையுடன் இருக்க தங்கள் தரத்தை குறைக்க வழிவகுக்கும், இதன் விளைவாக ஒழுங்குமுறையின் தரம் குறைகிறது.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, கேரி மார்கஸ் (Gary Marcus) மற்றும் அங்க ரியுல் (Anka Reuel) ஆகியோர் செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச நிறுவனத்தின் (International Agency for AI (IAAI)) நோக்கம் பாதுகாப்பான, நம்பத்தக்க தன்மை மற்றும் அமைதியான செயற்கை நுண்ணறிவின் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதாகும். ஒவ்வொரு நாட்டின் விதிகளும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்தக் கொள்கைகளில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, விளக்கமளிக்கும் தன்மை, விளக்கம், தனியுரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மை ஆகியவை அடங்கும். சர்வதேச செயற்கை நுண்ணறிவு அமைப்பு (International AI Organisation (IAIO)), வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு (Emerging Technology Coalition) மற்றும் செயற்கை நுண்ணறிவு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைக்கான சர்வதேச அகாடமி (International Academy for AI Law and Regulation) போன்ற பிற நிறுவனங்களும் இதே நோக்கங்களுடன் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய அரசியலின் காரணமாக இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது சிக்கல்களை எதிர்கொள்கிறது. தனியார் துறையானது, செயற்கை நுண்ணறிவின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக உள்ளது மற்றும் சுய கட்டுப்பாடுகளை (self-regulation) விரும்புகிறது. மேலும், நாடுகள் தொடர்பான அம்சங்கள் மற்றும் ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்து கவனம் செலுத்தும். இந்த நிறுவனங்கள் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமா அல்லது அவர்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்பதை நோக்கி கவனம் செலுத்தும்.
முனைப்படுத்தப்பட்ட உலகில் நாடுகள் ஈடுபடும்போது இத்தகைய அமைப்புகளின் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுகிறது. ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் செயற்கை நுண்ணறிவில் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டுள்ளன, இதனால் அவை மற்ற நாடுகளுடன் திறம்பட ஒத்துழைக்க வாய்ப்பில்லை. இதன் விளைவாக, அனைத்து முக்கிய முயற்சிகளும் செயற்கை நுண்ணறிவு புரட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சீனாவை இழக்கின்றன. உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation (WTO)) மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union (ITU)) போன்ற அமைப்புகளுக்குச் செய்யப்பட்ட சர்வதேசக் கடமைகளைப் பின்பற்றாத வரலாற்றைக் கொண்டிருப்பதால், சீனாவையும் சேர்த்து இந்த நிறுவனங்களை சீர்குலைக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கான போட்டி தற்போதைய குழுக்களில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான, முக்கிய முயற்சிகளும் மேற்கத்திய நாடுகளால் ஆதிக்கம் செலுத்தினாலும், எதிர்காலத்தின் சக்தியை மாற்றி வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு ஒன்று உள்ளது. எடுத்துக்காட்டாக, செயற்கை நுண்ணறிவு நிர்வாக ஆணையின் (AI Executive Order) மூலம் தொழில்நுட்ப மாற்றத்தின் பத்தாண்டுகளில் அமெரிக்கா வழிநடத்தும் என்று அதிபர் ஜோ பிடன் கூறினார். அதேபோல், ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக செயற்கை நுண்ணறிவின் விதிமுறைகளை உருவாக்குகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவின் பாதையில் செல்வாக்கு செலுத்த இங்கிலாந்து அதன் சொந்த கொள்கையை கொண்டுள்ளது.
பல்வேறு நலன்களைக் கொண்ட நாடுகளுடன் ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது மெதுவான ஒருமித்த கருத்தாகும், மேலும் அதுவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகக் குறைந்த-வகுப்புக் கொள்கைகளின் (lowest-denominator principles) அடிப்படையில் சமரசம் என்பதாகும். ஒரு ஒப்பந்தம் இருந்தாலும், அது பிணைக்கப்படாமல் இருக்கலாம், அதற்கு பதிலாக நாடுகள் தங்கள் சொந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். தற்போதைய பல முயற்சிகள் இந்த வகையில் உள்ளன. கூடுதலாக, அரசு தலைமையிலான விதிகள் வரலாற்று ரீதியாக தொழில்நுட்ப மாற்றங்களைத் தொடரவில்லை, எனவே அவை இறுதியாக உருவாக்கப்படும் போது, செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றம் ஏற்கனவே அவற்றின் செயல்திறனை விஞ்சிவிடும். இது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Treaty on Non-Proliferation of Nuclear Weapons) மற்றும் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு (Missile Technology Control Regime) போன்ற ஆயுத ஒப்பந்தங்களைப் போன்றது, இது தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தொடர போராடுகிறது.
சில கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம், ஆனால் அவை பொதுவானவை மற்றும் காலப்போக்கில் மாறக்கூடியவை. அமைதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் என எண்ணுவது மாறுபடலாம், ஆனால் ஒன்றாகச் செயல்படுவது சவாலானது. இது பல குழுக்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும், இது நாடுகளின் கொள்கைகளுக்கும் உலகளாவிய செயல் திட்டங்களில் உள்ள வேறுபாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய கவுன்சிலின் (Council of Europe’s (CoE)) சைபர் கிரைம் மாநாடான சைபர் கிரைம் மீதான புடாபெஸ்ட் மாநாடு (Budapest Convention on Cybercrime). இவை, நாடுகளுக்கிடையேயான சைபர் கிரைம் விசாரணைகளை ஒருங்கிணைத்து, சில சைபர் கிரைம்களை குற்றவாளியாக்கும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் இதுவாகும். இருப்பினும், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற முக்கிய நாடுகள் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டன. ஏனெனில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் (foreign investigative agencies), குறிப்பாக மேற்கத்திய நாடுகளுடன் தகவல்களைப் பகிர்வது அவர்களின் இறையாண்மை மற்றும் உள்நாட்டுச் சட்டங்களைப் பாதிக்கும். ஏற்கனவே நிறுவப்பட்ட செயல்முறைகளுடன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இது பயனளிக்கும் அதே வேளையில், அதன் அணுகுமுறையில் நியாயமும் சமநிலையும் இல்லாததால் மற்ற மாநிலங்களுக்கு இடையே குறிப்பிட்டளவில் அவநம்பிக்கை உள்ளது.
அரசியல் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், பல்வேறு ஆர்வமுள்ள குழுக்களிடையே பரவலான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் தீர்வு உள்ளதா? அதிகார வரம்பைக் கடக்கும் பல்வேறு தொழில்களுக்கு செயற்கை நுண்ணறிவு பொருத்தமானது என்ற கருத்தை மேம்படுத்துவது ஒரு நம்பத்தகுந்த அணுகுமுறையாகும். தற்போதுள்ள துறை சார்ந்த நிறுவனங்களை, குறிப்பாக தரநிலைகளை அமைப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை, அந்தந்த துறைகளில் செயற்கை நுண்ணறிவின் நிர்வாகக் கொள்கைகளை நிறுவ ஊக்குவிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
இந்த நிறுவனங்கள், நிலையான அமைப்பு நிறுவனங்கள் (Standard Setting Organisations(SSO)) என்றும் அழைக்கப்படும். இவை சர்வதேச அளவில் இயங்கக்கூடிய, பாதுகாப்பான மற்றும் சீரான தரநிலைகள்/விதிகளை உருவாக்கும் நிறுவப்பட்ட அமைப்புகளாகும். எடுத்துக்காட்டுகளில் Institute of Electrical and Electronics Engineers Standards Association (IEEE SA), தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (International Organisation for Standardisation (ISO)), சசர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission (IEC)) மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunications Union (ITU)) ஆகியவை அடங்கும். அவற்றின் தரநிலைகள் பொதுவாக தன்னார்வமாக இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பதிவை அவை கொண்டுள்ளன. மேலும், அவர்கள் தங்கள் குறிப்பிட்ட தளங்களில் செயற்கை நுண்ணறிவு தரநிலைகளின் வளர்ச்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, தன்னாட்சி மற்றும் நுண்ணறிவு அமைப்புகளின் நெறிமுறைகளுக்கான உலகளாவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக மின்சாரம் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம் (Institute of Electrical and Electronics Engineers (IEEE)) செயற்கை நுண்ணறிவு தரநிலைகளில் செயல்படுகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியமானது (International Telecommunications Union (ITU)) தொலைத்தொடர்புகளில் கவனம் செலுத்தும் எதிர்கால இணைய தளங்களுக்கான இயந்திர கற்றலில் இலக்குக் குழுவைக் (Focus Group on Machine Learning for Future Networks focusing on telecommunications) கொண்டுள்ளது. இது 2018 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுக்கான குட் குளோபல் உச்சிமாநாட்டிற்குப் (AI for Good Global Summit) பிறகு ஆரோக்கியத்திற்கான செயற்கை நுண்ணறிவு பற்றிய இலக்குக் குழுவையும் (Focus Group) உருவாக்கியது. சுகாதாரப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை (Artificial Intelligence algorithms) மதிப்பிடுவதற்கான தரப்படுத்தப்பட்ட வரையறைகளை உருவாக்குவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
நிலையான அமைப்பு நிறுவனங்கள் (Standard Setting Organisations(SSO)) தன்னார்வ இணக்கத்துடன் மென்மையான சட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தினாலும், அவற்றின் பெரும்பாலான தரநிலைகள் நம்பகத்தன்மையைப் பெறுகின்றன. ஏனெனில் அவை பல்வேறு பொது மற்றும் தனியார் குழுக்களின் ஆதரவைப் பெறுகின்றன. கடந்த காலத்தில், உதாரணமாக, தரவு தனியுரிமை (data privacy) குறித்த ISO/IEC 27701 தரநிலைகள் தன்னார்வமாக இருந்தாலும், உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளூர் நிலைமைகள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளுக்கு அவற்றை சமநிலைப்படுத்துவதன் மூலம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய தரநிலைகள் உண்மையில் சட்டத்தில் இணைக்கப்படுவதற்கும், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் துறைகள் மற்றும் அதிகார வரம்புகள் முழுவதும் ஒற்றுமையைப் பேணுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது என்பதை இது உண்மையில் பிரதிபலிக்கிறது.
அதனால்தான் உலகளாவிய செயற்கை நுண்ணறிவின் நிர்வாகத்திற்கான கொள்கைகளின் பயன்பாடு ஏற்கனவே முன்னுதாரணமாக இருக்கும் அமைப்புகளில் இருந்து உருவாக வேண்டும். இறுதியில், இடையூறுகளை ஏற்படுத்தாமல் செயற்கை நுண்ணறிவு கொள்கைகளில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த புதிய நிறுவனங்கள் பின்னர் இந்த தரநிலைகளை பின்பற்றலாம். இந்த அணுகுமுறை அரசியலில் நெகிழ்வுத்தன்மை, பல்வேறு பிராந்தியங்களில் சீரமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் அதனை உடனடியாக செயல்படுத்துதல் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
பயனுள்ள உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தை (AI governance) உருவாக்குவது சந்தேகத்திற்கு இடமின்றி கடினம். எவ்வாறாயினும், தற்போதுள்ள அடித்தளங்களை உருவாக்குவது எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. அங்கு கொள்கைகள் அங்கீகரிக்கப்படுவது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உலகில் தடையின்றி ஒருங்கிணைக்கப்படுகின்றன.
எழுத்தாளர் சி ராஜா மோகனின் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தற்போது லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில்கிறார்.