இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) கடமை அரசு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து பாதிக்கப்படுவதில்லை. இதன் முக்கிய பங்கு வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும். இதனால்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)), அரசு மசோதாவின் பகுதிகளைச் சேர்ப்பதற்கும் பின்னர் மாற்றுவதற்கும் அதன் உள்நோக்கத்தை ஆராய வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் ஆணையத்துக்கான தேர்வுக் குழுவை (selection committee) அமைக்க உச்ச நீதிமன்றம் விரும்பியது. இந்த குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) உறுப்பினராக இருப்பார். அப்போது, தேர்தல் ஆணையத்தில் காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை. இந்திய தலைமை நீதிபதியை, தேர்வுக் குழுவில் இருந்து விலக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி ஓராண்டு கடந்துவிட்டது. இப்போது, மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு காலியிடங்கள் உள்ளன. மேலும், சட்டத்தையும், அதன் உணர்வையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் மசோதா (Chief Election Commissioner And Other Election Commissioners (Appointment, Conditions Of Service And Term Of Office) Bill) , 2023 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, அதன் விதிகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் அதில் செய்யப்பட்ட திருத்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். பயன்படுத்தப்படும் மொழியானது சட்டபூர்வமானது, ஆனால், அவர்களின் ஞானமும் சட்ட வல்லுநர்களிடமிருந்து வருகிறதா?
இந்திய அரசியலமைப்பு, நமது ஜனநாயகத்திற்கு முக்கியமான பல்வேறு நிறுவனங்களை அமைக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தனித்துவமான நோக்கத்திற்காக சேவை செய்கின்றன மற்றும் அதன் தனிப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், அனைத்து நிறுவனங்களும் அரசாங்கத்துடன் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளன. அது, ஆதரவாக இருந்தாலும், ஒழுங்குமுறையாக இருந்தாலும் அல்லது எதிர் எடையாக இருந்தாலும் சரி, ஒரு உறவைக் கொண்டுள்ளன.
நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றுவதன் மூலம், அரசாங்கத்தின் மீது அதிகாரத்தை ஏற்படுத்துகிறது. நீதிமன்றங்கள், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை மதிப்பாய்வு செய்வதுடன், அரசாங்க நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மையை சரிபார்க்கின்றன. தீர்ப்பாயங்கள் ஓரளவு ஒத்த செயல்பாட்டைக் கொண்டுள்ளன. அட்டர்னி ஜெனரல் (Attorney General) அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகிறார் மற்றும் சில சமயங்களில் அதை நீதிமன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor-General of India (CAG)) அரசாங்க கணக்குகளை நிர்வகிக்கிறார் மற்றும் அதன் செலவினங்களை தணிக்கை செய்கிறார். பொது சேவை ஆணையங்கள் (Public service commissions) அரசுக்கான வேலைவாய்ப்பைக் கையாளுகிறது மற்றும் குறிப்பிட்ட சேவை விஷயங்களில் ஆலோசனைகளை வழங்குகிறது.
நிதி ஆணையம் (Finance Commission) அல்லது எல்லை நிர்ணய ஆணையம் (Delimitation Commission) போன்ற, எப்போதும் நிரந்தரமாக இல்லாத நிறுவனங்களையும் அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. இவை, அவ்வப்போது அரசின் சுதந்திரமான பகுதிகளாக செயல்படவும், பரிந்துரைகளை வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளன. வரி விநியோகம் (devolution of taxes) மற்றும் பிற நிதி பரிமாற்றங்கள் உள்ளிட்ட நிதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நிதி ஆணையம் பரிந்துரைக்கிறது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகளை வரைவதற்கு எல்லை நிர்ணய ஆணையம் (Delimitation Commission) பொறுப்பாகும்.
இரண்டு நிறுவனங்கள் அரசாங்க நடவடிக்கைகளுடன் நேரடியாக இணைக்கப்படாத செயல்பாட்டைக் கொண்டுள்ளன. அவை எல்லை நிர்ணய ஆணையம் (Delimitation Commission) மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆகும். இதில், தேர்தல் ஆணையத்தின் முக்கிய வேலை தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதாகும். இது, ஜனநாயக வழிமுறைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்க வழிவகுக்கிறது. இது, அடுத்த தேர்தல்கள் வரும் வரை நாட்டை வழிநடத்துகிறது. குறிப்பிடப்பட்ட மற்ற அமைப்புகளைப் போலல்லாமல், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நம்பியிருக்கவில்லை. தேர்தல்களின் போது மாதிரி நடத்தை விதிகளைப் (Model Code of Conduct) பயன்படுத்தும்போது தவிர, இது அரசாங்கக் கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ இல்லை. வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே அதன் முக்கிய கடமையாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் மசோதா (CEC Bill) மற்றும் அதன் திருத்தங்களில் அரசாங்கத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள, ஒருவர் சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள்/அமைச்சரவைச் செயலர், தேடல் குழுவின் அமைப்பு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்/தேர்தல் ஆணையர்களை அகற்றுவதற்கான செயல்முறை மற்றும் ஏதேனும் மாற்றங்கள் போன்ற தலைமைத் தேர்தல் ஆணையர்/தேர்தல் ஆணையர்களை நடத்துவதற்கான விதிகள் முக்கியமானவை. தேர்வுக் குழு எவ்வாறு அமைக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியமானது.
2023 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி உச்சநீத்மன்ற உத்தரவின்படி, நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை தேர்வுக் குழு (Selection Committee) ஆரம்பத்தில் அமைக்கப்பட்டது. அரசாங்கம், பின்னர் தலைமை நீதிபதியை நீக்கி குழுவின் அமைப்பை மாற்றியது. இது, பெரும்பான்மையினரின் முன்னனியில், தீர்மானிக்கப்பட்ட சார்புக்கு வழிவகுத்தது. ஏன் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்பது புதிராக உள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி கடந்த காலத் தேர்வுக் குழுக்களில் பிரதமருடன் அரிதாகவே கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இதில், அவர் விலக்கப்பட்டிருப்பது ஒருமித்த கருத்தை வளர்ப்பதற்குப் பதிலாக பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சியாகக் கருதப்படலாம்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் இடையிலான சமத்துவம் குறித்த கேள்வியானது சுவாரஸ்யமானது. தலைமை தேர்தல் ஆணையரின் நிலை எப்போதும் தெளிவாக உள்ளது. அரசியல் சாசனத்தின் 324 (5) பிரிவு, உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நீக்க முடியும் என்று கூறுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்ட பிறகு பணி நிலைமைகளை மோசமாக்க முடியாது என்றும் கூறுகிறது. பின்னர், தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் வணிக பரிவர்த்தனை) சட்டம் (Election Commission (Conditions of Service Of Election Commissioners And Transaction Of Business)] Act), 1991, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தை உச்சநீதிமன்ற நீதிபதியின் சம்பளத்திற்கு சமமாக ஆக்கியது. அவர்களின் மாத ஊதியமும் மற்றும் பிற சலுகைகள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமாக இருக்கும் என்றும் அது கூறியது.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு, மசோதாவின் அசல் பதிப்பில் (பிரிவுகள் 10 மற்றும் 15) அமைச்சரவை செயலாளரைப் போலவே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களையும் அரசாங்கம் ஏன் நடத்த விரும்பியது என்பதைப் பார்ப்பது கடினம். இதில் குறிப்பிட்டுள்ள அடிப்படையான மசோதாவின் மற்றொரு பகுதி (பிரிவு 11 (2)) குறித்து விமர்சகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால், மகிழ்ச்சியடைந்தனர். இந்த பகுதி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை அகற்றுவதற்கான செயல்முறையை ஒரே மாதிரியாக ஆக்கியது. முன்பு, உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே தலைமைத் தேர்தல் ஆணையரையும் பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தால், தேர்தல் ஆணையரை குடியரசுத் தலைவர் நீக்க முடியும்.
இருப்பினும், மசோதாவின் இறுதி மாற்றங்கள் தெளிவற்ற சிந்தனையைக் காட்டுகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதே நேரத்தில், அவர்களின் அகற்றும் செயல்முறையை ஒரே மாதிரியாக மாற்றுவதில் அது பின்வாங்கியது. இதனால், தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்களையும் எப்படி நீக்குவது என்பதில் வேறுபாடு ஏற்பட்டது. இந்த இரண்டு சிக்கல்களும் தொடர்பில்லாதவை என்பதால் இதன் பின்னணியில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்வது கடினம்.
கேபினட் செயலாளருக்குப் (Cabinet Secretary) பதிலாக சட்ட அமைச்சரை தேடல் குழுவின் (Search Committee) தலைவராக அரசாங்கம் ஏன் நியமித்தது என்பதும் புரியாத புதிராக உள்ளது. இந்த குழுவில் மேலும் இரண்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உண்மையான அரசியலைப்பு விதி கூறியது. தேர்தல் விஷயங்களில் அறிவும் அனுபவமும் கொண்டவர்கள். தலைவரை மாற்றுவதற்கும், உறுப்பினர்கள் தேர்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற தேவையை நீக்குவதற்கும் காரணம் குழப்பமாக உள்ளது. இந்த குழப்பம் மசோதாவின் மற்ற முன்மொழியப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட பகுதிகளுக்குப் பின்னால் உள்ள நியாயம் வரை நீண்டுள்ளது. அரசாங்கத்தில் நாற்பதாண்டு கால அனுபவம் இருந்தும் கூட இந்த தெளிவின்மையைப் புரிந்துகொள்வது கடினம்.
கட்டுரையாளர் முன்னாள் தேர்தல் ஆணையர்