காலநிலை மாற்றத்திற்கு தயாராதல் : உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? - அலிந்த் சௌகான்

 இந்த கட்டுரையில், காலநிலை மாற்றம், அதன் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் அதன் தாக்கம் பற்றிய மிக அடிப்படையான சில கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம். பத்தாவது தவணையாக 'உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஏன் முக்கியமானது?' என்ற கேள்விக்கும் நாங்கள் பதிலளிக்கிறோம்.


பிப்ரவரி 2024 இல், உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை (global sea surface temperature (SST)) 21.06 டிகிரி செல்சியஸை எட்டியது என்று மார்ச் 5 அன்று கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (Copernicus Climate Change Service (C3S)) தெரிவித்துள்ளது. இது ஆகஸ்ட் 2023 இல் பதிவான 20.98 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது. மார்ச் 2023 முதல், தினசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 


காலநிலை மாற்றத்தின் முக்கிய அம்சங்களை விளக்கும் தொடரான "காலநிலை மாற்றத்திற்கு வெப்பமயமாதல்" இன் இந்த வார பதிப்பில், பெருங்கடல்கள் ஏன் வெப்பமடைகின்றன, கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஏன் அதிகரித்து வருகிறது என்பதை நாங்கள் ஆராய்வோம். 


கடல்கள் ஏன் வெப்பமடைகின்றன?


19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி முதல், மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், ஓசோன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற ஏராளமான பசுமை இல்ல (greenhouse) வாயுக்களை வெளியிட்டுள்ளனர். இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் வெப்பத்தை இருக்க வைத்து, புவி வெப்பமடைதலை ஏற்படுத்துகின்றன. அன்றிலிருந்து சராசரி உலக வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.


பசுமை இல்ல வாயுக்களில் உள்ள கூடுதல் வெப்பத்தில் சுமார் 90% வெப்பம் கடலுக்குள் சென்று, காலப்போக்கில் அவை கடலையும் வெப்பமடைய செய்கின்றன. கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பே அக்வாரியம் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Monterey Bay Aquarium Research Institute in California) உயிரியல் கடலியலாளர் பிரான்சிஸ்கோ சாவேஸ், வயர்டு இதழிடம் கூறுகையில், "பெருங்கடல்கள் எங்கள் மீட்பர்கள்.. அந்த வெப்பத்தின் பெரும்பகுதி மேற்பரப்பில் வைக்கப்படுவது மட்டுமல்லாமல், அது ஆழத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.


எல் நினோ போன்ற பிற காரணிகளும் பெருங்கடல்களையும் பூமியின் மேற்பரப்பையும் வெப்பமாக்குகின்றன. பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் உள்ள நீர் வழக்கத்தை விட வெப்பமடையும் போது எல் நினோ உருவாகும். ஆனால் எல் நினோ முழுமையாக உருவாகும் முன்பே, உலகளாவிய தினசரி சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிறைய உயரத் தொடங்கிவிடும் மற்றும் எல் நினோ இப்போது குறைந்து வருகிறது என்றாலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.


சமீபத்தில், சகாரா பாலைவனத்தில் இருந்து குறைந்த தூசிக்காற்று  உறுவானது, ஏனெனில் காற்று வழக்கத்தை விட பலவீனமாக உள்ளது. பொதுவாக, இந்த தூசி அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பெரிய குடை போல் செயல்பட்டு கடல் நீரைக் குளிர வைக்கிறது என்று வயர்டு பத்திரிகையில் ஒரு அறிக்கை கூறுகிறது. இப்போது, குறைந்த தூசியுடன், அதிக சூரிய ஒளி கடல் நீரை வெப்பமாக்குகிறது, என்று அறிக்கை விளக்குகிறது.


அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஏன் கவலையை ஏற்படுத்துகிறது?


அதிக கடல் வெப்பநிலை கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். பெருங்கடல்கள் வெப்பமடையும் போது, அவை மேலும் அடுக்குகளாக மாறும். இதன் பொருள் வெப்பமான, இலகுவான, குறைந்த உப்பு நீர் குளிர்ந்த, உப்பு, ஊட்டச்சத்து நிறைந்த நீரின் மேல் இருக்கும். வழக்கமாக, கடல் இயக்கங்கள் இந்த அடுக்குகளை கலக்கின்றன, ஆனால் உயரும் வெப்பநிலை அவை சரியாக கலப்பதை கடினமாக்குகிறது. இதன் காரணமாக, கடல்கள் காற்றில் இருந்து அதிக கார்பன் டை ஆக்சைடை எடுக்க முடியாது, மேலும் காற்றில் இருந்து வரும் ஆக்ஸிஜன் நீர் வழியாக நன்றாக பரவ முடியாது, இது கடல் உயிரினங்களுக்கு தீங்கை ஏற்படுத்தும்.


மேலும், ஊட்டச்சத்துக்கள் ஆழ்கடலில் இருந்து மேற்பரப்புக்கு பயணிக்க முடியாது. கடலின் மேற்பரப்பில் வாழும் மற்றும் கடல் உணவுச் சங்கிலிகளுக்கு முக்கியமானதாக இருக்கும் சிறிய தாவரங்களான பைட்டோபிளாங்க்டனுக்கு தீங்கை ஏற்படுத்தும். விலங்கு மிதவை உயிரிகள் தாவர மிதவை உயிரிகளையும், நண்டு, மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. எனவே, தாவர மிதவை உயிரிகளின் எண்ணிக்கை குறைந்தால், அது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.


வெப்பமான பெருங்கடல்கள் கடல் வெப்ப அலைகளை (marine heat waves (MHWs)) ஏற்படுத்துகின்றன. கடலின் ஒரு பகுதி குறைந்தது ஐந்து நாட்களுக்கு வழக்கத்தை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பமடையும் போது இவை நிகழ்கின்றன. 1982 மற்றும் 2016க்கு இடையில், கடல் வெப்ப அலைகள் எண்ணிக்கையில் இரட்டிப்பாகி, நீண்டு வலுவடைந்ததாக, ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) 2021 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு கூறுகிறது.


கடல் வெப்ப அலைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் தீங்கானவை. அவை பவளப் பாறைகளை கடுமையாக பாதிக்கின்றன, இது பவளப்பாறையின் இனப்பெருக்கம் செய்யும் திறனை பாதிக்கிறது மற்றும் அவை நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புள்ளது. கடல் வெப்ப அலைகளால் கடல் விலங்குகளின் இடம்பெயர்வு முறைகளையும் பாதிப்படைகின்றன.


அதிக கடல் வெப்பநிலை என்பது சூறாவளி போன்ற அடிக்கடி மற்றும் தீவிரமான புயல்களையும் குறிக்கலாம். பெருங்கடல்கள் வெப்பமாக இருக்கும்போது, அவை அதிக நீரை ஆவியாக்குகின்றன, மேலும் வெப்பம் தண்ணீரிலிருந்து காற்றுக்கு வேகமாக நகர்கிறது. எனவே, புயல்கள் சூடான பெருங்கடல்களைக் கடக்கும்போது, அவை அதிக நீராவியையும் வெப்பத்தையும் எடுத்துக்கொள்கின்றன. இது வலுவான காற்று, கனமழை மற்றும் நிலத்தைத் தாக்கும் போது அதிக வெள்ளம் ஆகியவற்றுடன் அவற்றை வலுவாக்குகிறது - இது மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


இந்த சிக்கல்களை குறைக்க ஒரே வழி பசுமை இல்ல வாயு (greenhouse gases (GHGs)) உமிழ்வைக் குறைப்பதுதான். ஆனால் நாம் அதை சரியாக பின்பற்றவில்லை. அதனால் 2023 ஆம் ஆண்டில், காற்றில் பசுமை இல்ல வாயுக்களின் அளவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன, என்று கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) கூறுகிறது.




Original article:

Share: