உச்சநீதிமன்றம் சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உறுதி செய்தது. இருப்பினும், இந்தத் தீர்ப்பு முக்கிய அரசியலமைப்புச் சிக்கல்களைத் தீர்க்கவில்லை. இத்தீர்ப்பு முக்கியமாக அசாமின் பழங்குடி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிவிட்டது.
அக்டோபர் 2024 இல், இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு 4:1 பெரும்பான்மை உடன் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு, குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்புச் செல்லுபடியை தன்மையை உறுதி செய்தது. முன்னாள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்ட வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு பிரிவு 6A ஒரு சிறப்புக் கட்டமைப்பை வழங்குவதால் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அசாமில் குடியேறிய முன்னாள் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மற்றும் இப்போது வங்காளதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தோர்களுக்கு இது பொருந்தும். இந்த புலம்பெயர்ந்தோர் மார்ச் 25, 1971-ஆம் ஆண்டுக்கு முன் வந்திருந்தால் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். இத்தகைய அரசியலமைப்பு மீறல்களுக்குக்கான தீர்ப்பை பகுப்பாய்வு செய்வது முக்கியம். கூடுதலாக, இந்த தீர்ப்பின் சாத்தியமான எதிர்மறை விளைவுகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.
தீர்ப்பு ஒருதலைப்பட்சமான காரணங்களைக் (arbitrary reasoning) கொண்டிருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அசாமை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு 14வது பிரிவை விளக்கினார். மேற்கு வங்கம் (2,216.7 கிமீ), மேகாலயா (443 கிமீ), திரிபுரா (856 கிமீ), மற்றும் மிசோரம் (318 கிமீ) போன்ற மாநிலங்கள் அசாமை (263 கிமீ) விட வங்காளதேசத்துடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டார். இருப்பினும், அசாமின் கலாச்சார மற்றும் அரசியல் உரிமைகள் மீதான அதன் தாக்கம் அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார்.
அசாமின் சிறிய மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பு காரணமாக, மேற்கு வங்கத்தில் 57லட்சம் புலம்பெயர்ந்த மக்களை விட அசாமில் 47லட்சம் புலம்பெயர்ந்தோரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஏனென்றால், அசாம் மேற்கு வங்கத்தை விட குறைவான மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தை தனிமைப்படுத்துவது பகுத்தறிவுக் கருத்தின் அடிப்படையில் உள்ளது என்று வாதிட்டார். இருப்பினும், சட்டப்பிரிவு 29க்கு எதிரான சட்டத்தை பரிசோதித்த நீதிமன்றம், புலம்பெயர்ந்தோர் வருகை அசாமிய மக்களின் மொழி, எழுத்து அல்லது கலாச்சாரத்தை பாதிக்கவில்லை என்று கூறியது. இந்த அம்சங்களைப் பாதுகாக்கும் அவர்களின் திறன் பாதிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த விதியை ஆதரிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரான விதியை மதிப்பிடுவதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை.
பின்னணி
இந்திய அரசுக்கும் அசாம் இயக்கத்தின் தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1985–ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A அறிமுகப்படுத்தப்பட்டது. கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்த தற்போதைய வங்காளதேசத்தில் இருந்து அசாமுக்கு இடம்பெயர்ந்ததால் இந்த இயக்கம் தொடங்ப்பட்டது. இது உள்ளூர் கலாச்சாரம், பொருளாதார திரிபு (economic strain) மற்றும் அரசியல் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றைப் பாதுகாப்பது குறித்த சிக்கல்களை எழுப்பியது. அசாம் ஒப்பந்தம் (Assam Accord) புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குறிப்பிட்ட தேதிகளை நிர்ணயிப்பதன் மூலம் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனவரி 1, 1966–ஆம் ஆண்டுக்கு முன் அசாமில் குடியேறிய அனைத்து இந்தியர்களும் இந்திய குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர். ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 25, 1971–ஆம் ஆண்டுக்கு இடையே அசாமில் 10 ஆண்டுகள் வாழ்ந்த மக்கள் குடியுரிமை பெறலாம். மார்ச் 25, 1971–ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த மக்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட்டனர். மேலும், அவர்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட்டனர் (deportation).
பகுத்தறிவில் இடைவெளிகள்
குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவில் சில அரசியலமைப்பு குறைபாடுகள் உள்ளன. அரசியல் சாசனத்தின் கலாச்சார (cultural) மற்றும் மொழி அடையாளங்களை (linguistic displacement) பாதுகாக்கும் 29வது பிரிவை இந்த சட்டம் மீறுவதாக பார்க்கப்படுகிறது. பிரிவு 6A பிரிவு 29 (1)ஐ மீறவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு மாநிலத்தில் வெவ்வேறு இனக்குழுக்கள் இருப்பது அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட கலாச்சார உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்காது என்று நீதிமன்றம் விளக்கியது. சட்டப்பிரிவு 29(1) மக்கள் தங்கள் கலாச்சாரத்தை "பாதுகாக்க" (conserve) உரிமை அளிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. குடிமக்கள் தங்கள் மொழி, எழுத்து அல்லது கலாச்சாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதாக நீதிமன்றம் விளக்கியது. இந்த முயற்சிகளை சட்டம் தடுக்கக் கூடாது. பிரிவு 6A அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் வருகை, அசாமிய மக்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இருந்து நேரடியாக தடையாக இருந்தது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இருப்பினும், இந்த காரணம் முற்றிலும் தவறானது. கலாச்சாரத்தை "பாதுகாக்க" பொது உரிமையில் நீதிமன்றம் கவனம் செலுத்தியது. நீதிமன்றம் கலாச்சாரத்தை "பாதுகாக்கும்" உரிமையில் கவனம் செலுத்தியது. ஆனால், இந்த தீர்ப்பு மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதை எவ்வாறு கடினமாக்குகிறது என்பதை புறக்கணித்தது. கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை அங்கீகரிப்பது மட்டும் போதாது என்பதை நீதிமன்றம் உணரவில்லை. தினேஷ் புக்ரா மற்றும் மேத்யூ ஏ. பெக்கர் ஆகியோரின் ஆராய்ச்சி, வளர்ப்பு செயல்முறையின் போது, புலம்பெயர்ந்தோர் மற்றும் புரவலன் கலாச்சாரங்கள் (host cultures) இரண்டும் மாறக்கூடும் என்பதைக் கண்டறிந்தனர். அணுகுமுறைகள், குடும்ப மதிப்புகள், தலைமுறை நிலை மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கலாச்சாரங்களில் அவை தொடர்பு கொள்ளும்போது நிகழலாம்.
"வடகிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்படும் மதம் மற்றும் மொழி கலவை மாற்றம்: 1951 முதல் 2001–ஆம் ஆண்டு வரையிலான புள்ளியியல் பகுப்பாய்வு" என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையையும் நீதிமன்றம் மதிப்பாய்வு செய்தது. 1951 மற்றும் 2001–ஆம் ஆண்டுக்கு இடையில், அஸ்ஸாமில் வங்கமொழி பேசும் மக்களின் சதவீதம் 21.2%லிருந்து 27.5% ஆக 29.7% அதிகரித்துள்ளது என்பதை இந்தத் தாள் கோடிட்டு காட்டுகிறது. மாறாக, அசாமிய மொழி பேசும் மக்களின் சதவீதம் 12.26% குறைந்துள்ளது. 69.3% இலிருந்து 60.8% ஆக உள்ளது.
கூடுதலாக, நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட மனுதாரர்களின் சமர்ப்பிப்புகள், 1951 முதல் 2011–ஆம் ஆண்டு வரை, அசாமில் வங்கமொழி பேசும் மக்களின் சதவீதம் 36.36% அதிகரித்து, 21.2% இலிருந்து 28.91% ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், மாநிலத்தில் அசாமி பேசும் மக்களின் சதவீதம் 30.18% குறைந்து, 69.3%இல் இருந்து 48.38% ஆக குறைந்துள்ளது. இந்த மக்கள்தொகை மாற்றம் (demographic shift) என்பது வெவ்வேறு இனக்குழுக்கள் ஒன்றாக வாழ்வது மட்டுமல்ல. அசாமிய மக்களின் தனித்துவ அடையாளத்தை ஆழமாக பலவீனப்படுத்திய கலாச்சார மற்றும் மொழியியல் மாற்றத்தை இது காட்டுகிறது.
பிரிவு 6A இன் மிகவும் குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு குறைபாடுகளில் ஒன்று அதன் தற்காலிக நியாயமற்ற தன்மையாகும். இது வெளிப்படையான தன்னிச்சையான கோட்பாட்டின் கீழ் ஒரு கருத்தாகும். சட்டம் இயற்றப்படும் நேரத்தில் அரசியலமைப்பாக இருக்கும் சட்டங்கள் மாறிவரும் சூழ்நிலைகள் காரணமாக காலப்போக்கில் நியாயமற்றதாகிவிடும். பிரிவு 6A இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.
இந்த சட்டத்தில் அதன் செயல்பாட்டில் எந்த விதமான தற்காலிக கால வரம்பும் கொண்டிருக்கவில்லை. இந்த பிரிவைச் சேர்ந்த தனிநபர்கள் காலவரையின்றி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. கெடுவிதிக்கப்பட்ட தேதிக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சட்டம் இன்னும் அமலில் உள்ளது. இது தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட உண்மையான சிக்கலைத் தீர்ப்பதில் சட்டம் பயனற்றதாகிவிட்டது.
தவறான பொறிமுறை, அதன் தாக்கம்
பிரிவு 6A(3) இன் கீழ் புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு செயலாக்குவதற்கான அமைப்பு குறைபாடுடையது. இது நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொறுப்பை மாநிலத்தின் மீது வைக்கிறது. ஆனால், புலம்பெயர்ந்தோர் தானாக முன்வந்து தங்களை அடையாளம் காட்ட அனுமதிக்காது. இதன் விளைவாக, சந்தேகத்திற்கிடமான சட்டவிரோத குடியேறிகள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அது அவர்களின் நிலையை தீர்மானிக்கிறது. இருப்பினும், இந்த பரிந்துரைகளைச் செய்வதற்கான காலக்கெடு இல்லாததால், சட்டம் அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றாலும், காலவரையின்றி தொடர அனுமதிக்கிறது.
மேலும், பிரிவு 6Aஇன் கீழ் குறிப்பிடப்பட்ட தனிநபர்களின் குடியுரிமை நிலையை தீர்மானிக்கும் பொறுப்பு தீர்ப்பாயத்திற்கு (foreigners’ tribunal) உள்ளது. இருப்பினும், தீர்ப்பாயத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரிவு 6A இன் கீழ் தகுதி பெறாதவர்கள் கூட தாங்கள் இதன் கீழ் இருப்பதாக கூறுகின்றனர். இது செயல்முறையை மெதுவாக்குகிறது மற்றும் பரவலான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பிரிவு 6A சட்டத்தை நியாயப்படுத்த நீதிமன்றம் தீர்ப்பை எழுதியதாக தெரிகிறது. இந்தத் தீர்ப்பில் முக்கியமான அரசியலமைப்புச் சிக்கல்களைக் பற்றி குறிப்பிடவில்லை. குறிப்பாக, அசாமின் பழங்குடி மக்கள் மீதான கலாச்சார மற்றும் மக்கள்தொகை தாக்கத்தை இந்தத் தீர்ப்பு புறக்கணிக்கிறது. அசாமிய மக்களின் மொழியியல் மற்றும் கலாச்சார அடையாளத்தை எவ்வாறு சரிபார்க்கப்படாத இடம்பெயர்வு பலவீனப்படுத்தியுள்ளது என்பதை இந்த தீர்ப்பு புறக்கணித்தது. இது பிரிவு 29இன் பாதுகாப்பு நோக்கத்தை மீறுகிறது. கூடுதலாக, காலாவதியான மற்றும் தன்னிச்சையான கொள்கைகளை வைத்திருக்கும் விதியின் தற்காலிக நியாயமற்ற தன்மையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
ரவி சிங் சிகாரா இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அர்னவ் ராய் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.