தொழிலாளர் வளத்தில் பெண்கள் சேருவதற்கு சாதகமான சூழலை தமிழ்நாடு எவ்வாறு உருவாக்கியுள்ளது? -ஆகாஷ் தேவ்

 தோழி விடுதிகள் (Thozhi Hostels) பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் குறைவான விலையில் அறைகளை வழங்குகின்றன. இந்த விடுதிகள் நகரங்களில் இடம்பெயர்வதால் ஏற்படும் சவால்களை சமாளிக்க உதவுகின்றன.

 

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் அதிகமான பெண்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். பெண் தொழிலாளர் பங்கேற்பு 2017-18 ஆண்டில் 25% ஆக இருந்து 2022-23 ஆண்டில் 40% ஆக அதிகரித்துள்ளது என்று காலமுறை தொழிலாளர் வளம் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) தெரிவிக்கிறது. இந்த வளர்ச்சி, பெண்களுக்கு உயர் பொருளாதார இலக்குகள் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், சிறந்த கல்வி மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துகிறது.


இருப்பினும், பணியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பாலின சமத்துவம் இன்னும் எட்டப்படவில்லை. உலக சராசரியைவிட தொழிலாளர்களில் பெண்களின் சதவீதம் இன்னும் குறைவாகவே உள்ளது. சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகளால் இந்த இடைவெளி ஏற்படுகிறது. இது பெண்களை ஊதியமற்ற கவனிப்பு மற்றும் வீட்டு வேலைகளை செய்ய வைக்கிறது. இந்தப் பொறுப்புகள் அவர்களின் சுதந்திரம் மற்றும் வேலை செய்யும் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், வேலை செய்ய விரும்பும் பல பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

வேலையில் சேரும் பெண்களின் அதிகரிப்பு பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஏற்ப்பட்டுள்ளது. 15-59 வயதுடைய பெண்களுக்கான பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (LFPR)) 2018-19 ஆண்டில் 24.6% ஆக இருந்து 2022-23 ஆண்டில் 41% ஆக அதிகரித்துள்ளது.

 

பொருளாதாரத் தேவைகள் (economic necessity) மற்றும் மாறி வரும் சமூக நெறிமுறைகள் காரணமாக பெண்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். கிராமப்புறங்களில், பல பெண்கள் விவசாயம், தொடர்புடைய நடவடிக்கைகள் அல்லது முறைசாரா மற்றும் சுயதொழில்களில் வேலை செய்கிறார்கள்.  இருப்பினும், நகர்ப்புறங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 5%க்கும் குறைவான அதிகரிப்பு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு தேசிய சராசரியை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது நகர்ப்புற உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் அதிக பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (LFPR) கொண்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% தமிழ்நாடு கொண்டுள்ளது.


தமிழ்நாட்டில் பெண்களுக்கான சிறந்த பணிச்சூழலை உருவாக்கியதன் வெற்றிக்கு மாநில அரசு தோழி தங்கும் விடுதிகளை துவக்கியதே காரணமாகும். இந்த விடுதிகள் உலக வங்கியின் ஆதரவுடன் பொது-தனியார் கூட்டு (public-private partnership (PPP)) மாதிரியின் மூலம் உருவாக்கப்பட்டன. இந்த முயற்சி பொது உட்கட்டமைப்பு மற்றும் தனியார் நிபுணத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது பணிபுரியும் பெண்களுக்கு உயர்தர வீட்டுத் தீர்வுகளை வழங்குகிறது. நகர்ப்புறங்களில் இடம்பெயர்தல் சவால்களை சமாளிக்க இது அவர்களுக்கு உதவுகிறது. 


சென்னை போன்ற நகரங்களில் பெண்கள் வேலை வாய்ப்புகளைத் தேர்வு செய்தல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான, குறைவான மற்றும் நன்கு நிர்வகிக்கப்பட்ட தங்குமிடங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது. இது தொழிலாளர் தொகுப்பில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க உதவுகிறது. பாதுகாப்பு சிக்கல்கள், மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் போதிய சேவைகள் இல்லாமை ஆகியவை பெண்கள் நகர்ப்புற வாழ்க்கைக்கு சுமூகமாக மாறுவதை பெரும்பாலும் கடினமாக்குகிறது.  இந்த சவால்கள் வரலாற்று ரீதியாக பல பெண்களை பணியில் முழுமையாக ஈடுபடுத்துவதை தடுக்கின்றன. 


தோழி விடுதி மாதிரி (The Thozhi hostel model) நிலம் மற்றும் பகுதி கட்டுமான மானியங்களை அரசு வழங்க வேண்டும். ரியல் எஸ்டேட் சந்தை நுண்ணறிவைப் பயன்படுத்தி தமிழ்நாடு தங்குமிடம் நிதி திட்டத்திற்கு இணை நிதியுதவி மற்றும் மேற்பார்வை செய்கிறது.  இதில் மாநிலத்தில் உள்ள தொழில்துறை மண்டலங்களுக்கு அருகில் இடங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தினசரி செயல்பாடுகள் மற்றும் சேவைகளை நிர்வகிப்பதற்கு திறந்த ஏலம் மூலம் தொழில்முறை தனியார் ஆபரேட்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது கூடுதல் அரசாங்க மானியங்கள் இல்லாமல் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. தோழி விடுதிகள் கேமரா கண்காணிப்பு மற்றும் நவீன வசதிகளுடன் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. 


தங்குமிடங்களை குறைவான விலையில் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகள், ஒற்றை அல்லது பகிரப்பட்ட இடங்கள் மற்றும் நெகிழ்வான தங்கும் காலங்கள் போன்ற விருப்பங்களை அவர்களுக்கு வழங்குகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 தங்கும் விடுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளதால், தனியார் விடுதிகள் தங்களது சேவையை மேம்படுத்துவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கான தங்குமிடத்தின் தரத்தை மேம்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தங்குவதற்கான செலவை குறைவாக வைத்துள்ளது.


தோழி விடுதிகளின் வெற்றி, பொது-தனியார் கூட்டாண்மை எவ்வாறு பெரிய சவால்களை தீர்க்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இத்திட்டம் திறமையாகவும், நிலையானதாகவும் செயல்படுவதால், மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களுக்கு வழிவகுத்தது.

 

தொழிலாளர் தொகுப்பில் அதிக பாலின சமத்துவத்தை அடைவதற்கு இந்தியா செயல்படுவதால், தோழி விடுதி மாதிரி மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. இது உட்கட்டமைப்புக்கும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் இடையே உள்ள முக்கியமான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. ஏழை மாநிலங்களுக்கு இது போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானது. தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதில் உள்ள சவால்களை சமாளிக்க கூடிய வகையில் கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.


பாதுகாப்பான மற்றும் ஆதரவான இடங்களை உருவாக்குவதன் மூலம், பெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் நகர்ப்புற வேலை வாய்ப்புகளில் ஈடுபட முடியும். புதுமையான தீர்வுகள் சவால்களை எப்படி வாய்ப்புகளாக மாற்றும் என்பதை இது காட்டுகிறது.  இதில் பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் வசதிகளை வழங்குவது முதல் படியாகும். பெண்களின் இயக்கம் மற்றும் போக்குவரத்துக்கான அணுகலை மேம்படுத்த சட்டங்களை இயற்றுதல்,  சுத்தமான மற்றும் அணுகக்கூடிய (தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம்) வசதிகளை உறுதி செய்தல், பணியிட நெகிழ்வுத்தன்மை சட்டமியற்றுதல் மற்றும் பெண்கள் மீது அடிக்கடி சுமத்தப்படும் சமத்துவமற்ற பராமரிப்புப் பொறுப்புகளைக் குறைத்தல் ஆகியவை நகர்ப்புற வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறந்த சூழலை உருவாக்க இந்த நடவடிக்கைகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


ஆகாஷ் தேவ், எழுத்தாளர் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி குழுவில் (National Council of Applied Economic Research (NCAER)) ஆய்வாளராக உள்ளார்.




Original article:

Share: