மேற்காசிய நெருக்கடி சீனா, ரஷ்யாவுக்கு கடினமான சவால்களை முன்வைக்கிறது -கபீர் தனேஜா

இரண்டு வல்லரசு நாடுகளும் மேற்கு ஆசிய பாதுகாப்பில் அமெரிக்காவின் செல்வாக்கை பலவீனப்படுத்தும் ஒரு பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளன. 

அதனால், இரு நாடுகளும் தங்கள் செல்வாக்கு மண்டலங்களையும் உருவாக்கியுள்ளனர்.


ஹமாஸின் பொலிட்பீரோவின் தலைவரும் குழுவின் பேச்சுவார்த்தையாளருமான இஸ்மாயில் ஹனியே ஜூலை மாதம் மத்திய தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இஸ்ரேலையும் ஈரானையும் ஒரு முழு அளவிலான போருக்கு தள்ளியுள்ளது. இது ஏப்ரலில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பரிமாற்றத்தைவிட அதிக வன்முறையாக இருக்கக்கூடும். இருப்பினும், ஈரானின் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை குறிப்பிடத்தக்க இடைவெளியை கடைபிடித்து தெளிவற்ற தன்மையை பராமரித்து வருகின்றன. 


காசா போர் பல ஆண்டுகளாக ஒரு பிராந்திய காரணப் புள்ளியாக இருந்து வருகிறது. ஆனால் 2024-ல், இது ஒரு பெரிய வல்லரசு போட்டியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. ஒருபுறம் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நாடுகளும், மறுபுறம் ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவை தளர்வாக உள்ளடக்கிய சீனா தலைமையிலான குழு உள்ளது. இந்த குழுவாக்கத்தில் ஈரான் ஒரு முக்கிய இடத்தை வகித்துள்ளது. அது மாஸ்கோவிற்கு உக்ரேனுக்கு எதிராக டிரோன்கள் வடிவில் இராணுவ தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளதுடன், பெய்ஜிங்கிற்கு மலிவு விலையில் எண்ணெயையும் வழங்கியுள்ளது. சீனா அதன் ஆதிகத்தை அதிகரிக்க இதைப் பயன்படுத்தியுள்ளது. 


செல்வாக்கு கட்டமைப்பு


ஆனால், ரஷ்யாவும் சீனாவும் தனிப்பட்ட இலக்குகளைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. தெஹ்ரான் பிராந்தியம் முழுவதும் ஒரு வழக்கமான மோதலில் ஈடுபட்டால், அதற்கு ஆதரவு தேவைப்படும். இந்த கோரிக்கை மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இரண்டின் மீதும் விழக்கூடும். இரண்டு சக்திகளும் மேற்கு ஆசிய பாதுகாப்பில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டாலும், அவை தங்கள் சொந்த செல்வாக்கு கட்டமைப்புகளையும் உருவாக்கிள்ளனர். இவை ஒரு கூட்டு முயற்சியாக இல்லாமல் தனித்தனியாக செயல்படுகின்றன. 


சீனா ராஜதந்திர முயற்சியில்  மிகவும் தீவிரமாக உள்ளது. மார்ச் 2023-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதில் இது ஒரு பொதுவான பங்கைக் கொண்டிருந்தது. சமீபத்தில், 2006-ஆம் ஆண்டு முதல் மோதலில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் மற்றும் ஃபத்தா உட்பட பாலஸ்தீனிய பிரிவுகளின் ஒரு குழுவையும் ஆதரவு அளித்தது. பெய்ஜிங் தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆதரித்து வருகிறது. இது இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கிறது. முதலாவதாக, மேற்கத்திய காலனியாதிக்கத்தால் ஏற்பட்ட அநீதி. இரண்டாவது, அரபு நிலைப்பாடுகளுக்கான பொதுவான ஆதரவு. உதாரணமாக, ஒரு சீன வெளியீடு ஹனியேவை ஒரு "அமைதிவாதி" என்று முன்னிலைப்படுத்தியது. 


ரஷ்யாவைப் பொறுத்தவரை, நிலைமை வேறு. மாஸ்கோ 2015-ஆம் ஆண்டு முதல் சிரிய மோதலில் இராணுவரீதியில் ஈடுபட்டுள்ளது. சிரியாவின் தலைவர் பஷார் அல்-அசாத், இஸ்லாமிய அரசின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இராணுவ ஆதரவைக் கோரிய போது இது தொடங்கியது. அப்போதிருந்து, மாஸ்கோ லடாகியா மாகாணத்தைச் சுற்றி நிரந்தர இராணுவத் தளங்களை பராமரித்து வருகிறது. இது மத்தியதரைக் கடலுக்கு முக்கிய அணுகலை வழங்குகிறது. ரஷ்யாவுடன் ஈரானும் அசாத் ஆட்சிக்கு ஆதரவாக களமிறங்கியது. இதற்கு ஈடாக ஈரான் அதன் இராஜதந்திர நடவடிக்கைகளை அடைய, அதன் நாடு முழுவதும் பினாமிகளின் வலைப்பின்னலை வலுப்படுத்தியது. 


ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு விவகாரம் 


சில சீரமைப்புகள் இருந்தபோதிலும், சீனாவும் ரஷ்யாவும் தங்கள் மேற்கத்திய எதிரிகளுடன் தொடர்ந்து அணிசேரும் ஒரு பகுதி உள்ளது. இதுதான் ஈரானின் அணு ஆயுதமயமாக்கலுக்கான சாத்தியக்கூறு. ஈரான் ஆயுதத் திறனை அடைவதற்கு நெருக்கமாக இருப்பதால் இந்நிலை இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மிதவாதியான மசூத் பெசேஷ்கியன் அண்மையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், அப்பாஸ் அரக்சி போன்ற சீர்திருத்தவாதிகளை வெளியுறவு அமைச்சராக அவர் தேர்ந்தெடுத்ததும், பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உள்ள நாடுகளுக்கு (The Security Council has five permanent members (P5+1)) நம்பிக்கை அளிக்கலாம். அணுசக்தி பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம். இருப்பினும், நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவு உட்பட பல காரணிகளைப் பொறுத்தது. இல்லையெனில் கடுமையான சூழ்நிலையில் அணுகுவது நேர்மறையான நிலையாகப் பார்க்கப்படுகிறது. ஈரானிய தேர்தலுக்கு முன்பு, ஸ்டிம்சன் மையத்தின் அறிஞர் யுன் சன், மேற்கத்திய எதிர்ப்பு மற்றும் அமெரிக்க எதிர்ப்பாளராக இருக்கும் ஈரானிய தலைவரை சீனா விரும்பக்கூடும் என்று கூறினார். ஆனால் அணு ஆயுதங்களை அடைவதற்கான அபாயக் கோட்டைத் தாண்டுவதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. 


பிராந்திய யதார்த்தங்கள் 


இன்னும் எச்சரிக்கையாக இருக்கும் பெய்ஜிங்குடன் ஒப்பிடுகையில் ரஷ்யர்கள் ஏற்கனவே மேற்கத்திய சக்தியை இராஜதந்திர ரீதியாக குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளனர். இராஜதந்திர ரீதியாக, மாஸ்கோ உலகளாவிய தெற்குடன் சிறப்பாக சமாளித்து, உக்ரேன் தொடர்பாக ஒரு நடைமுறை நிலைப்பாட்டை பராமரித்து வருகிறது. அதன் உளவுத்துறை மற்றும் இராணுவப் படைகள் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுவதற்கு அணிதிரண்டுள்ளன. மேற்கு ஆசியாவில், செங்கடல் வழியாக உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைக்க ஹவுத்திகளுக்கு உதவுவதற்காக யேமனில் ரஷ்ய உளவுத்துறை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாகூட தனது கப்பல்களைப் பாதுகாக்க கணிசமான கடற்படை இருப்பை நிறுத்த வேண்டியிருந்தது. இந்த பிராந்திய யதார்த்தங்கள் அமெரிக்கா ஏன் சிரியா மற்றும் ஈராக்கில் அதன் சிறிய படைகளை வைத்திருக்க வலியுறுத்துகிறது என்பதை விளக்குகின்றன. இப்போது வெளியேறுவது என்பது பிராந்தியத்தில் அதன் கடைசி அதிகார கோட்டைகளில் ஒன்றை விட்டுக்கொடுப்பதைப் போன்று உள்ளது. 


நடந்து கொண்டிருக்கும் குழப்பம் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் நன்மை பயக்க, ஈரான் இஸ்ரேலுடன் ஒரு பாரம்பரிய போரில் ஈடுபடாமல் இருப்பது முக்கியம். இருப்பினும், ஹனியேவின் படுகொலைக்கு பதிலளிப்பதைத் தவிர்ப்பது தெஹ்ரானுக்கு கடினமாக இருக்கலாம். அது பலவீனமானதாகத் தோன்றுவது மட்டும் இல்லாமல், அதன் சார்பில் பல ஆண்டுகளாக போராடி வரும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா உட்பட அதன் பினாமிகள் ஈரானிய தலைமையிடம் இருந்து வலுவான நடவடிக்கைகளைக் எதிர்பாக்கக் கூடும். 


கபீர் தனேஜா,உறுப்பினர், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் 

Original article:

https://www.thehindu.com/opinion/op-ed/west-asia-crisis-spells-tough-choices-for-china-russia/article68547576.ece  

 

Share: