இந்த 12 அம்ச கொள்கை முன்முயற்சிகள் (12-point policy initiatives) மக்களின் கண்ணியத்தைக் காக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ₹2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 2019 முதல் குறைந்த வரிகளும், கோவிட்-19க்குப் பிறகு அதிக லாபமும் இதை சாத்தியமாக்குகிறது என்பதை எடுத்துக்காட்டி, தனியார் துறை வேலைவாய்ப்புகளை உருவாக்க பொருளாதார ஆய்வு ஊக்குவிக்கிறது. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பிற முயற்சிகளுடன் இருக்க வேண்டும்.
நிலையான, வேலைவாய்ப்பை உருவாக்க, திறமையற்ற தொழிலாளர்களின் அதிகப்படியான ஊதிய பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ₹25,000 சம்பாதிப்பது முதல் 10% ஊதியம் பெறுபவர்களில் ஒருவரை சேர்க்கிறது என்று காலமுறை தொழிலாளர் (Periodic Labour Force Survey) கணக்கெடுப்பு 2019-20 கண்டறிந்துள்ளது. குறுகிய கால திறன் திட்டங்கள் பெரும்பாலும் நீண்ட கால வேலைவாய்ப்புகளை வழிவகுக்காது. ஏனெனில், நகர வாழ்க்கைக்கு ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பலர் தங்கள் கிராமங்களுக்கு வேறு வேலை தேடித் திரும்புகின்றனர்.
கல்விக்கும் திறமைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சான்றுகள் காட்டுகின்றன. தமிழ்நாடு, கேரளா, இமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்கள் அதிக மாதாந்திர தனிநபர் நுகர்வு மற்றும் சிறந்த மனித வளர்ச்சியைக் (human development indicators) கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, குறுகிய கால திறன் திட்டங்களை வழங்கினாலும் ஒடிஷா குறைந்த தனிநபர் நுகர்வைக் கொண்டுள்ளது. ஏனெனில், ஒடிசாவில் உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் போதுமான அளவு வழங்கப்படுவதில்லை.
பெரிய அளவிலான வேலைகளை உருவாக்குவதற்கு அதிக உற்பத்தித் திறன் தேவை. பொருளாதார ஆய்வு தனியார் துறையை வேலைகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. ஆனால், அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை நிர்ணயித்து உயர்தர பொது சேவைகளை வழங்க வேண்டும். பெரும்பாலான வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பொது வேலை வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாக சான்றுகள் காட்டுகின்றன. நிலையான, கண்ணியமான வேலைகளை உருவாக்க என்ன கொள்கைகள் தேவை?
திறன் தேவைகள் (Skilling needs)
முதலாவதாக, பரவலாக்கப்பட்ட சமூக நடவடிக்கை மூலம் திறன் தேவைகளை அடையாளம் காணலாம். அரசின் திட்டங்கள் திறம்பட செயல்படுத்த சமூகத்தின் பங்கு மிக முக்கியம். கிராம சபைகள் (gram sabha or basti samitis) போன்ற உள்ளூர் குழுக்கள் அரசாங்கத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல உதவும். எப்படி என்றால், வேலை அல்லது சுயதொழில் செய்ய விரும்பும் நபர்களின் பட்டியலை உருவாக்கவும்; உள்ளூர் நிபுணர்களைக் கொண்டு ஒவ்வொரு நபருக்கும் ஒரு திட்டத்தை உருவாக்கலாம்; நல்ல முடிவுகளை உறுதி செய்வதற்காக உள்ளூராட்சி மட்டத்தில் படித்த நிபுணர்களை தற்காலிகமாக பணியமர்த்தலாம்; திறன் பயிற்சியாளர்கள் மற்றும் முதலாளிகளைக் கண்டறிய இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்; தொழிற்பயிற்சிகளும் (apprenticeships) சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும். இது குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
இரண்டாவதாக, கல்வி, சுகாதாரம், திறன்கள், ஊட்டச்சத்து, வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளை உள்ளூர் அரசாங்க மட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களுடன் இணைக்கவும். இது சமூகம் பொறுப்பானது மற்றும் சிறந்த முடிவுகளுக்குத் தேவையான நிதி மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும். இந்தியாவின் பொதுச் சேவைகளான கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை இந்த அணுகுமுறையால் சிறந்து விளங்கும். இந்தப் பகுதிகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் மற்றும் நிதிகளை நிர்வகிப்பதில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்த வேண்டும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
மூன்றாவதாக, B.A., B.Sc., மற்றும் B.Com போன்ற பாரம்பரிய பட்டப்படிப்புகளுடன் ஒவ்வொரு கல்லூரியிலும் நடைமுறைத் தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளை சேர்க்கவேண்டும். இது முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒவ்வொரு கல்லூரியிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கல்லூரிகள் பரிசோதனை செய்வதற்கான வளங்களைக் கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மும்பையில் உள்ள சில கல்லூரிகள் பட்டப்படிப்புடன் சுற்றுலா வழிகாட்டி அல்லது ஆலோசகர் போன்ற சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. இது பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
நான்காவதாக, சர்வதேச தரத்தைப் பின்பற்றி, அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான செவிலியர் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பயிற்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும். செவிலியர்கள், முதியோர் பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக தேவை உள்ளது. முக்கிய பிரச்சினை நிறுவனங்களின் சீரற்ற தரம், ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் போதிய தரம் இல்லாதது. சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு இந்த பயிற்சி திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.
ஐந்தாவதாக, பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியும் வகையில் குழந்தைகள் காப்பகங்களை நடத்த பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களின் உள்ளூர் குழுவை உருவாக்கவும். தற்போது, அங்கன்வாடிகள் பகுதி நேர பராமரிப்பை வழங்குகின்றன. ஆனால், அங்கன்வாடிகளில் அதிக குழந்தைகள் உள்ளனர். உள்ளூர் அரசாங்கங்கள் அல்லது மகளிர் குழுக்களால் ஊதியம் பெறும் பராமரிப்பாளர்களின் பயிற்சி பெற்ற குழுக்கள் அதிகம் தேவைப்படுகிறது. கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த சமூக வள நபர்கள் ஒரு சிறந்த உதாரணம். இந்த சமூகக் குழுக்கள் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பண்ணை அல்லாத வேலை மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் வேலை செய்யலாம்.
ஆறாவதாக, திறன் மேம்பாட்டிற்கான முக்கிய மையங்களாக மாற தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (Invest in Industrial Training Institutes (ITIs)), தொழில் கல்வி நிறுவனங்கள், கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி (Rural Self Employment Training Institutes (RSETIs)) நிறுவனங்களில், முதலீடு செய்ய வேண்டும். இந்த நிறுவனங்களில் பலவற்றில் தரம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு இல்லை இது ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்த நிறுவனங்கள் சுதந்திரமாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும். இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊட்டி பள்ளிகளுக்கான (feeder schools) மையமாகவும் செயல்பட முடியும். கல்வி மற்றும் தொழிற்கல்வியை வரவுகள் மற்றும் நேரங்களின் அடிப்படையில் சமப்படுத்த பள்ளிகள் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். குறைந்த தொழிற்கல்வி வசதிகள் உள்ள மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வலுவான திட்டங்களைக் கொண்டுள்ளன. மனித மூலதனத்தில் (Human capital) முதலீடு செய்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏழாவதாக, தொழில் வல்லுநர்களின் உதவியுடன் உயர்நிலைப் பள்ளிகளில் வணிகம் மற்றும் தொடக்கத் திறன்களைக் (start-up skills) கற்பிக்க வேண்டும். மேல்நிலை பள்ளிகள் அல்லது உயர்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் மற்றும் வணிகப் பாடங்களைச் சேர்க்க வேண்டும். பள்ளிகள் தங்கள் வழக்கமான பாடத்திட்டத்தில் நடைமுறைச் செயல்பாடுகள் மற்றும் வணிக செயல்முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்குச் செல்லும் வல்லுநர்கள் மாணவர்களுக்கு முக்கியமான திறன்களைக் கற்பிக்க முடியும், இது சிறந்த வேலை மற்றும் வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
எட்டாவதாக, தொழில் பழகுநர் (apprenticeships) பயிற்சிகளை பெரிய அளவில் தொழில்துறையுடன் இணை பகிர்வு மாதிரியாக உருவாக்க வேண்டும். இது உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு முக்கியமானது. திறன் செலவுகள் சாத்தியமான முதலாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அரசாங்க நிதியுதவி திறன் மட்டுமே எப்போதும் பயனுள்ளதாக இருக்காது. தொழில் பழகுநர் பயிற்சியில் பங்கு இல்லை என்றால், அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவு.
மூலதன கடன்கள் மற்றும் நிறுவனங்கள் (Capital loans and enterprises)
ஒன்பதாவதாக, பெண்கள் தலைமையிலான மற்றும் முதல்முறை வணிகங்கள் செயல்படும் மூலதனக் கடன் பெறுவதை எளிதாக்க வேண்டும். அதனால் அவர்கள் வளர முடியும். இந்தக் கடன்களைப் பெறுவது சவாலானதாக இருக்கும் என்பதை கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனுபவம் காட்டுகிறது. பெண்கள் கடன் வாங்குபவர்களுக்கான கடன் வரலாறுகளை உருவாக்குவது செயலில் உள்ளது. மேலும், தொழில்நுட்பம் உதவும். ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையம் (Reserve Bank Innovation Hub) மற்றும் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihoods Mission) ஆகியவை வங்கிகள் அதிக கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய யோசனைகளை உருவாக்கி வருகின்றன. கிராம தொழில் தொடங்கும் திட்டம் (Start Up Village Enterprise Programme (SVEP)) முதல் முறை தொழில்முனைவோருக்கு ஆதரவு, நிதி மற்றும் முழுமையான தீர்வுகள் முக்கியம் என்பதைக் காட்டுகிறது.
பத்தாவதாக, திறன் பயிற்சி நிறுவனங்களை சான்றளிக்க ஒரு உலகளாவிய திட்டத்தை உருவாக்கவும். மாநிலங்களும் வணிகங்களும் கூட்டாக இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். திறன் வழங்குநர்கள் ஒரு முழுமையான மதிப்பாய்வுக்குப் பிறகு அங்கீகாரம் பெறுவார்கள், மேலும், மாணவரக்ளுக்கு அரசு மற்றும் முதலாளிகள் இருவரும் நிதியுதவி அளிக்கலாம்.
பதினொன்றாவதாக, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிக வறுமை உள்ள 2,500 பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) சட்ட நிதியில் 70% பயன்படுத்தவும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஏழ்மையான 20 குடும்பங்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். MGNREGA திட்டங்கள் விலங்கு கொட்டகைகள் (animal sheds), நீர்ப்பாசன கிணறுகள் மற்றும் வேலை கொட்டகைகள் போன்றவற்றின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க உதவும். MGNREGA தொழிலாளர்களின் சிறந்த உற்பத்தித்திறனுக்கான திறன்களை மேம்படுத்த வேண்டும். அதிக ஊதியங்கள் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும்.
பன்னிரெண்டாவதாக, தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்துவது இளைஞர்களுக்கு வேலை பெறுவதை எளிதாகும். பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மற்றும் ஊக்கத்தொகையாக மட்டும் உதவித்தொகை வழங்காமல் உண்மையான திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தொழிற்பயிற்சியை முடித்த பிறகு நியாயமான ஊதியம் வழங்குமாறு முதலாளிகளுக்கு அரசாங்கம் கோர வேண்டும். இது சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் தொழிலாளர்களின் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துடன் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உதவும்.
அமர்ஜீத் சின்ஹா ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.