இன்றைய ’பக்க நுழைவு' (Lateral Entry) முறைக்கு முன், நேருவின் அரசு 'திறந்த சந்தையில்' (Open Market) இருந்து பணியமர்த்தியது -ஷ்யாம்லால் யாதவ்

 திறந்த சந்தை ஆட்சசேர்ப்புகளில் (open-market recruitments) SC மற்றும் ST-களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மாநில அரசுப் பணிகளில் இருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை.


நரேந்திர மோடி அரசாங்கம் அதிகாரத்துவத்தில் "பக்கவாட்டு நுழைவுகளை" (lateral entries) அறிமுகப்படுத்துவதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு அரசாங்கம் "திறந்த சந்தையிலிருந்து" (open market) பல நியமனங்களைச் செய்தது. பல்வேறு துறைகளில் தங்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்தனர்.


மோடி அரசாங்கம் 2018-ல் பக்கவாட்டில் நுழைபவர்களுக்கான (lateral entrants) முதல் காலியிடங்களை விளம்பரப்படுத்தியது. செவ்வாயன்று, ஒன்றிய அரசின் 45 பணியிடங்களை நிரப்ப, ஐந்தாவது சுற்று நியமனங்களுக்கான ஆகஸ்ட் 17 அன்று அறிக்கை வெளிப்படுத்தியதை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டது.


பல எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தின் முக்கிய கூட்டணி கட்சிகளும் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். மேலும், இதற்கான இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் பணி நியமனம் செய்யப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.


1946-ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் நெருங்க, ஒன்றிய அமைச்சரவை ஒரு முடிவை எடுத்தது. முக்கிய தலைவர்களின் மாநாட்டிற்குப் பிறகு, அவர்கள் இந்திய நிர்வாகப் பணி (Indian Administrative Service (IAS)) மற்றும் இந்திய காவல் பணி (Indian Police Service (IPS)) ஆகியவற்றை உருவாக்க முடிவு செய்தனர். இந்த புதிய பணிகள் முறையே இந்திய குடிமைப் பணி (Indian Civil Service (ICS)) மற்றும் இந்திய காவல் (Indian Police (IP)) ஆகியவற்றிற்கு பதிலாக அமைக்கப்பட்டன.


சுதந்திரத்திற்குப் பிறகு, கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் உதவுவதற்கு நாட்டிற்கு அதிகாரிகள் தேவைப்பட்டனர். அப்போது தகுதியான அதிகாரிகள் அதிகம் இல்லை. இந்திய குடிமைப் பணி (Indian Civil Service (ICS)) அதிகாரிகளின் கடைசி குழுவானது 1943 இல் பணியமர்த்தப்பட்டதாலும், இதற்கான முதல் குழு, இந்திய நிர்வாகப் பணி (Indian Administrative Service (IAS)) அதிகாரிகள் 1948-ல் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.


1950 களின் நடுப்பகுதி வரை, ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு சுமார் 7,000 பேர் விண்ணப்பித்ததாகவும், இதில் சுமார் 200 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கும் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த நல்ல அதிகாரிகளின் தேவை இருந்தது.


சிறப்புத் திறன் (specialized skills) கொண்ட அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1948-49 மற்றும் 1956-ல் சிறப்பு பணியிடங்களின் தேவைகள் (special recruitment drives) ஏற்பாடு செய்யப்பட்டன. இதில், சர்தார் வல்லபாய் படேல் 1948-49ன் போது துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த சிறப்புத் தேவைகள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் வருடாந்திர காலி பணியிடங்களுடன் கூடுதலாக இருந்தன.


ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (UPSC) சிறப்புத் தேர்வுகளை மேற்கொண்டது. இருப்பினும், இவை அவசரகால பணியிட வாரியத்தின் (Emergency Recruitment Board) பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்பட்டன.


1949-ம் ஆண்டில், சிறப்பு பணியிட விண்ணப்பதாரர்களின் பதிவுகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் நேர்காணல்களை நடத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. 1956-ல் காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையை உள்ளடக்கியது. இந்த அவசரகால பணியிடங்கள் இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) மற்றும் பல ஒன்றிய பணிகளுக்காகவும் செய்யப்பட்டன.


சிறப்புப் பணியிடங்கள், இந்தியாவிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையேயும் மிகவும் திறமையான நபர்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்திற்கு அவர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. மே 30, 1956 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ஜிபி பந்த் மக்களவையில் ஆற்றிய உரையில், “புத்திசாலித்தனமான பணியாளர்கள் குறைந்துள்ளனர். மேலும், இங்கே ஒன்றியத்தில், துணைச் செயலாளர் (Deputy Secretaries) பதவிகள் மற்றும் இந்திய நிர்வாகப் பணி (IAS) போன்ற பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் யாரும் இல்லை” என்றார்.


காலிப் பணியிடங்களின் செயல்முறை


ஆரம்ப காலத்தில் குடிமைப் பணித் தேர்வில் கலந்து கொள்ள அதிகபட்ச வயது வரம்பு 24 ஆக இருந்தது. 25 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு திறந்த சந்தை பணியிடங்கள் (Open market recruitments) நடத்தப்பட்டது. பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்சவரம்பு 45 ஆண்டுகள் ஆகும். இப்போது இரத்துசெய்யப்பட்ட பக்க நுழைவு (lateral entry) முயற்சிக்கான வயது வரம்பு ஒன்றாக உள்ளது.


1948-49-ல் நடந்த சிறப்பு பணியிடங்களின் முதல் சுற்றில் 82 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இது அவசரகால பணியிட வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்தது. இரண்டாவது சுற்றில், உள்துறை இணை அமைச்சர் பி.என் தாதர், ஏன் திறந்த சந்தை பணியிடங்கள் தேவை? என்பதை விளக்கினார்.


இந்த அவசரகால பணியிட சேவைகளில் இருந்து மட்டுமின்றி, திறந்த சந்தையிலிருந்தும் விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு திறக்கப்படும். இருப்பினும், இதுபோன்ற பணிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம். அதிக எண்ணிக்கையிலான இந்திய நிர்வாகப் பணி (IAS) அதிகாரிகள் தேவை. எனவே, அதிக பணியாளர்கள் ஒரு பரந்த குழுவில் இருந்து பணியமர்த்தப்படுவார்கள், என்று அவர் மக்களவையில் மார்ச் 23, 1956 அன்று கூறினார்.


1956-ம் ஆண்டில், திறந்த சந்தையில் இருந்து விண்ணப்பிக்கும் போட்டியாளர்களுக்கு குறைந்தபட்ச வருமானம் ரூ.300 என வரம்பை அரசாங்கம் நிர்ணயித்தது. இந்த கோரிக்கை நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.


வேலையில்லாத இளைஞர்கள் இதனால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் வாதிட்டார். மேலும், அவர் கூறுகையில், “இது இந்திய குடிமைப் பணியின் (Indian Civil Service (ICS)) பழைய பாரம்பரியத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். இந்திய குடிமைப் பணிக்கு (ICS) பணியிடங்கள் என்பது பிரபுத்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியமான சூழ்நிலை நிலவியது. சாதாரண குடிமக்கள் இந்திய குடிமைப் பணிக்கு (ICS) தகுதி பெறவில்லை. இந்த இந்திய நிர்வாகப் பணி (IAS) பணியிடங்கள்  விதி அந்த பழைய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இது நாட்டின் மிக முக்கியமான நிர்வாகப் பணிக்கான விண்ணப்பதாரர்கள் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் குழந்தைகளுக்கு உட்படுத்துகிறது, ”என்று கோபாலன் மக்களவையில் மே 30, 1956 அன்று கூறினார்.


1956-ம் ஆண்டில், இந்த பணியிடங்களுக்கு 22,161-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1,138 பட்டியல் வகுப்பினர் விண்ணப்பங்களும், 185 பட்டியல் பழங்குடியினர் விண்ணப்பங்களும் இதில் அடங்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்வெழுத அனுமதிக்க, இந்தியாவுக்கு வெளியே 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கான தேர்வு டிசம்பர் 28, 1956 அன்று நடத்தப்பட்டது.


பணி நியமனங்களில் ஒதுக்கீடுகள்


திறந்த சந்தை பணியிடங்களில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மாநில அரசுப் பணிகளில் இருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை.


பட்டியல் வகுப்பினர் (SC) ஒதுக்கீடு 12.5% ​​ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) ஒதுக்கீடு 5% ஆகவும் இருந்தது. இந்த ஒதுக்கீடுகள் வழக்கமான போட்டித் தேர்வுகள் மற்றும் திறந்த சந்தையில் இருந்து சிறப்பு பணியிடங்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பணி கிடைப்பதன் அடிப்படையில் ஒதுக்கீடுகள் நிரப்பப்பட்டன. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரை பணியமர்த்துவதற்கான நிபந்தனைகளை முடிந்தவரை தளர்த்துவதாக அரசு கூறியது.


உள்துறை அமைச்சர் பந்த் அவர்கள், ஏப்ரல் 24, 1958 அன்று மக்களவைக்கு அறிவித்தார். UPSC தயாரித்த உண்மையான பட்டியலில், பட்டியல் வகுப்பினர் 26 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, யு.பி.எஸ்.சி., தரநிலைகளை தளர்த்துமாறு கேட்டுக் கொண்டனர். UPSC இந்த விதிமுறையை ஒப்புக்கொண்டு மேலும் 133 உறுப்பினர்களை சேர்த்தது. இதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, யுபிஎஸ்சி ஆணையமானது இறுதிப் பட்டியலை வெளியிட்டது.


1956-ல் திறந்த சந்தையில் இருந்து இறுதி பணியிட சேர்ப்பில், 7 பட்டியல் வகுப்பினர் (SC) மற்றும் 3 பட்டியல் பழங்குடியினர் (ST) தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1949-ல் 82 ஐஏஎஸ் அதிகாரிகள் திறந்தவெளிச் சந்தையில் இருந்து பணியமர்த்தப்பட்டனர். இவர்களில், ஒருவர் எஸ்டி, 12 பேர் எஸ்சி அதிகாரிகள் ஆவார்.



Original article:

Share: