தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் ‘கூட்டுறவு கூட்டாட்சியின்’ பலவீனத்தைக் காட்டுகிறது. -அர்பிட் கோயல்

 தற்போதைய அமைப்பை ஆதரிக்கும் மக்கள், ஆளுநர்கள் தேசிய ஒற்றுமைக்கு முக்கியம் என்று கூறுகிறார்கள். ஆளுநர் அவர்கள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக செயல்படுகிறார். ஆனால் தமிழ்நாட்டில், இந்த இணைப்பு ஒரு தடையாக மாறிவிட்டது. அது நிகழும்போது, ​​அமைப்பை மறுபரிசீலனை செய்வது அவசியம்.


35 வயது மற்றும் இந்திய குடிமகன் என்ற இரண்டு தகுதி அளவுகோல்களை மட்டுமே கொண்ட ஒரு அரசியலமைப்பு அலுவலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இதற்கு, நிபுணத்துவம் தேவையில்லை. அரசியல் சார்புகளை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை. இது ஒரு டிஸ்டோபியன் கதையும் அல்ல. இந்த முறை இந்தியாவின் ஆளுநர் அலுவலகத்தின் யதார்த்தமான நடைமுறையாகும். இந்த அலுவலகம் ஒரு காலனித்துவ காலத்திலிருந்து நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.


தமிழ்நாட்டில் நடந்து வரும் பிரச்சினையில், ஆளுநர் ஒரு வருடத்திற்கும் மேலாக 12 மசோதாக்களை தாமதப்படுத்தியுள்ளார், இது ஒரு சாதாரணமான மசோதாவும் அல்ல. இது ஒரு பெரிய பிரச்சனையின் அறிகுறியாகும். பஞ்சாப் ஆளுநர் மீதான உச்ச நீதிமன்றத்தின் 2023 தீர்ப்பு இந்த நடைமுறையைத் தடுக்கத் தவறிவிட்டது. ஆளுநர் "முடிந்தவரை விரைவில்" செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் கூறியது. இருப்பினும், இதன் அர்த்தம் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அது வழங்கவில்லை. இதன் காரணமாக, உறுதியான விதிகளை அமைக்க நீதிமன்றம் ஒரு முக்கியமான வாய்ப்பை தவறவிட்டது.


ஒரு மசோதா மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும்போது, ​​அரசியலமைப்பின் பிரிவு 200 ஆனது ஆளுநருக்கு மூன்று விருப்பங்களை வழங்குகிறது. அவை, ஒப்புதல் வழங்குதல் (granting assent), ஒப்புதலை நிறுத்தி வைத்தல் (withholding assent) அல்லது மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்குதல் (reserving the bill for the president’s consideration) ஆகியவை ஆகும். இருப்பினும், நடவடிக்கை எடுப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் இல்லை. இது இந்த பிரிவின் பரவலான தவறான பயன்பாட்டிற்கு வழிவகுத்தது.


இந்தப் பிரச்சினையின் முக்கிய மூல காரணமாக பிரிட்டிஷ் ஆட்சிக்குச் செல்கின்றன. ஆளுநர்கள் பேரரசின் முகவர்களாகக் காணப்பட்டனர். இதனால், உள்ளூர் விருப்பங்களை முடக்கும் பணியில் ஈடுபட்டனர். நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, அரசியலமைப்பு சபையில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதங்கள் இருந்தன. ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் அவர்கள் நியமிக்கப்படும் விதம் காரணமாக மோதல்கள் ஏற்படலாம் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆளும் கட்சி ஆளுநர் நியமனங்களைக் கட்டுப்படுத்தினால், பாரபட்சமற்றத் தன்மை இழக்கப்படும் என்று பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஹுகும் சிங் எச்சரித்தார். ஒரு மாநிலத்தின் மொழி மற்றும் விவகாரங்கள் தெரியாத வெளியாட்களை நியமிப்பதை அசாமில் இருந்து ரோகிணி குமார் சவுத்ரி விமர்சித்தார். இந்த நடைமுறையை காலனித்துவத்துடன் ஒப்பிட்டார். அதிகப்படியான மத்திய கட்டுப்பாட்டால், கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் என்று ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஹிருதய் நாத் குன்ஸ்ரு எச்சரித்தார். இது இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அவர் கூறினார்.


சுவாரஸ்யமாக, வரைவானது அரசியலமைப்பின் பிரிவு 131 முதலில் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கர் பரிந்துரைக்கப்பட்ட ஆளுநரை விரும்பினார். ஆளுநரின் பங்கு அரசியலமைப்பு ரீதியாக மட்டுமே இருந்து நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லாவிட்டால், தேர்வு முறை - தேர்தல் அல்லது நியமனம் - ஒரு பொருட்டல்ல என்று அவர் வாதிட்டார். ஆனால், குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும் இந்த சமரசம் பின்னர் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியது.


மாநில நிர்வாகத்தில் தலையிடுவதை ஆளுநர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூற முடியுமா? இன்று, பல ஆளுநர்கள் ஓய்வு பெற்ற அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் விசுவாசத்திற்கான வெகுமதியாக நியமிக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத வீட்டோ அதிகாரிகளாக (veto players) செயல்படுகிறார்கள். அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருக்க முடியுமா? என்பது பற்றி தெளிவான பதில் "இல்லை".


சமீபத்திய ஆண்டுகளில், மாநிலங்களவையில் பல தனியார் உறுப்பினர் மசோதாக்கள் (private member bills) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் ஆளுநர் அலுவலகத்தை ஒழிப்பதையோ (abolish the governor’s office) அல்லது ஆளுநர்களை நியமித்தல் (reform the process for appointing) மற்றும் நீக்குவதற்கான (removing governors) செயல்முறையை சீர்திருத்துவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏப்ரல் 2024-ல், நாடாளுமன்ற உறுப்பினர்  பிரியங்கா சதுர்வேதி ஆளுநர் நியமனங்களை சீர்திருத்துவதற்கான ஒரு மசோதாவை முன்மொழிந்தார். பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மாநில முதல்வர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தேர்வுக் குழுவை அவர் பரிந்துரைத்தார். இந்த மசோதா ஒரு பதவி நீக்க செயல்முறையையும் முன்மொழிந்தது. இருப்பினும், பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட நான்கு மாத காலக்கெடுவை அது கோரியது.


இந்த தனியார் உறுப்பினர் மசோதாக்கள் பெரும்பாலும் சர்க்காரியா ஆணையத்தின் (Sarkaria Commission) 1988 பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும் அவை, செயல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பாக, கேரள ஆளுநர் மாநில அரசுடன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், தெலுங்கானாவில், ஆளுநர் முக்கியமான சுகாதார மசோதாக்களை (healthcare bills) தாமதப்படுத்தியுள்ளார். இந்த சர்ச்சைகள் ஒப்புதலை நிறுத்தி வைப்பதோடு கட்டுப்படுத்தவில்லை, டெல்லியில், துணைநிலை ஆளுநர் முக்கிய சேவைகள் தொடர்பாக மாநில அரசுடன் சண்டையிட்டுள்ளார். மகாராஷ்டிராவில், ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தவ் தாக்கரே பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. இதுபோன்ற இன்னும் பல வழக்குகள் உள்ளன. இந்த மோதல்கள் இந்தியாவின் அரை-கூட்டாட்சி கட்டமைப்பின் (quasi-federal structure) பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன. மேலும், "கூட்டுறவு கூட்டாட்சி" (பிரிவு 256) பலவீனமானது மற்றும் பயனற்றது என்பதை அவை காட்டுகின்றன.


தற்போதைய அமைப்பின் ஆதரவாளர்கள், ஆளுநர்கள் பணி தேசிய ஒற்றுமைக்கு முக்கியம் என்று வாதிடுகின்றனர். மேலும், ஆளுநர் அவர்கள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான இணைப்பாக செயல்படுகிறார்கள். ஆனால், இந்த இணைப்பு தமிழ்நாட்டைப் போலவே ஒரு முற்றலாக மாறும்போது, ​​அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.


தமிழ்நாடு தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது மாநில அரசு தாக்கல் செய்த மனுக்களில் இருந்து வருகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்காததை மனுக்கள் சவால் செய்கின்றன. சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகளின் முதற்கட்ட மதிப்பாய்வு, நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் உள்ளிட்ட அமர்வு, ஆளுநர் ரவியின் "பாக்கெட் வீட்டோவைப்" (pocket veto) பயன்படுத்துவதில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் காட்டுகிறது.


இந்த வழக்கு வெறும் சட்டப் போராட்டத்தை விட அதிகம். இது கூட்டாட்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சோதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மசோதா தாமதமாகிறது, குடிமக்கள் தங்கள் உரிமைகளை இழக்கிறார்கள். மேலும், சீர்திருத்தங்கள் சிக்கிக் கொள்கின்றன, இதனால் ஜனநாயகம் பாதிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றிய-மாநில உறவுகளை மாற்றக்கூடும். இருப்பினும், நீடித்த மாற்றத்திற்கு மக்களின் விருப்பம் தேவை.


எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் ஆவார்.




Original article:

Share: