வரி குறைப்புகள் (Tariff reductions) இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கொள்கை வகுப்பாளர்கள் வர்த்தக தாராளமயமாக்கல் சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்..
"21-ம் நூற்றாண்டுக்கான அமெரிக்க-இந்தியா ஒப்பந்தம்" (US–India COMPACT for the 21st Century) பிப்ரவரி 13, 2025 அன்று தொடங்கப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை $200 பில்லியனில் இருந்து $500 பில்லியனாக அதிகரிப்பதே இதன் குறிக்கோள் ஆகும். "திட்டம் 500" (Mission 500) என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (bilateral trade agreement) உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் கட்டணங்களைக் குறைத்தல், வரி அல்லாத தடைகளை நீக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். சவால்கள் இருந்தாலும், இந்தத் திட்டம் வளர்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும். இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அறிஞர்கள் இந்த திட்டம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா அல்லது ஆபத்துகளை ஏற்படுத்துமா என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் முக்கிய கேள்வி : "திட்டம் 500" நீண்ட காலத்திற்கு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு உதவுமா அல்லது பாதிக்குமா? என்பதுதான்.
2023-ம் ஆண்டில், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் (US Census Bureau) இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே $190 பில்லியன் வர்த்தகத்தை பதிவு செய்தது. இது ஒரு நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பொருட்களின் வர்த்தகத்தை $129.2 பில்லியனாக மதிப்பிட்டார். இந்தியாவிற்கான அமெரிக்க ஏற்றுமதி $41.8 பில்லியனை எட்டியது. இது 2023-ஐ விட 3.4% அதிகரிப்பு ஆகும். அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி $87.4 பில்லியனாக இருந்தது, இது 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. இது அமெரிக்காவிற்கான வளர்ந்து வரும் பொருட்களின் வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. அமெரிக்காவிற்கு மலிவான, உழைப்பு மிகுந்த ஏற்றுமதிகள் காரணமாக, இந்தியா வர்த்தக உபரியிலிருந்து பயனடைகிறது. இவை அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அதிக மதிப்புள்ள, மூலதனம் மிகுந்த பொருட்களுக்கு முரணானவையாக உள்ளது. இருப்பினும், இந்த வர்த்தக மாதிரி நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது.
இந்தியாவின் சந்தையில் அமெரிக்காவிற்கு வரம்பிற்குட்பட்ட அணுகல் இருப்பதற்கான மற்றொரு காரணம் அதிக வரித் தடைகள் (high tariff barriers) ஆகும். விவசாயப் பொருட்களுக்கான சராசரியாகப் பயன்படுத்தப்படும் மிகவும் விருப்பமான நாடுகளுக்கு (most favoured nation (MFN)) வரிகள் அமெரிக்காவில் 5 சதவிகிதம் ஆனால் இந்தியாவில் 39 சதவிகிதம் ஆகும். இந்திய மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியைவிட, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. இந்த கட்டண வேறுபாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மூலம் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கான உள்நாட்டு அழுத்தம் ஆகியவை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் ஆர்வத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. சுங்க வரி விகிதங்களில், குறிப்பாக விவசாயப் பொருட்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், இந்த நாடுகளுக்கு இடையே உள்ள உள்நாட்டு சந்தையை ஆதரிப்பதில் உள்ள அடிப்படை வேறுபாடுகள் காரணமாகும். இருப்பினும், அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு, குறிப்பாக 2018 முதல் 2020 வரை அதிக ஆதரவை வழங்குகிறது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துவதால், விவசாயப் பொருட்களின் மீதான குறைந்த வரிகளை இந்த ஆதரவு விளக்குகிறது.
இதனால், வரி குறைப்பு (Tariff reductions) இந்தியாவின் உள்நாட்டு சந்தையை பாதிக்கலாம். வர்த்தகம் வளரும்போது, இந்த ஒப்பந்தம் அமெரிக்க சந்தை அணுகலை அதிகரிப்பதைவிட இந்தியாவின் உயர் மதிப்பு ஏற்றுமதிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாய ஏற்றுமதிக்கு பலனளித்தால், இந்தியாவின் வர்த்தக உபரி, அந்நிய செலாவணி இருப்பு மற்றும் விவசாயம் பாதிக்கப்படலாம். இந்தியா மாம்பழங்கள் மற்றும் மாதுளைகளை ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில், அமெரிக்கா தொழில்துறை, உலோகம் மற்றும் நுகர்வோர் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உயர் மதிப்பு வர்த்தக சூழ்நிலையில் பரிமாற்றம் மற்றும் குறைந்த லாபம் கொண்ட விநியோகர்களாக இந்தியாவின் நிலை சவாலானதாக இருக்கலாம்.
அமெரிக்க பெருநிறுவனங்களின் போட்டிக்கு எதிராக இந்திய தொழில்களின் மீள்தன்மை ஒரு கவலைக்குரியது. ஆரம்ப வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க போர்பன் (US bourbon), மோட்டார் சைக்கிள்கள் (motorbikes), ஐசிடி பொருட்கள் (ICT products) மற்றும் உலோகங்கள் (metals) மீதான வரிகளை இந்தியா குறைத்தது. இவை அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டிக்கான நன்மையைக் கொண்ட துறைகள் ஆகும். இருப்பினும், இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை அணுகல் முக்கியமாக விவசாயத்திற்கு பயனளிக்கிறது. இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. வர்த்தக கட்டுப்பாடுகளைக் குறைப்பது இந்தியாவில் அமெரிக்க தயாரிப்பு விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் முக்கிய நிறுவனங்களை பாதிக்கலாம். ஜவுளி, ஆட்டோமொபைல்கள், மின்னணுவியல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகள் சந்தைப் பங்கை இழக்கக்கூடும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு மலிவான பொருட்களை இறக்குமதி செய்ய குறைந்த வரிகளைப் பயன்படுத்தலாம்.
வர்த்தகத்திற்கான சவாலானது பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர ரீதியிலானது. அதிகரித்து வரும் அமெரிக்க இறக்குமதிகள் இந்திய தொழில்களில் சமமான முதலீட்டால் பொருந்தவில்லை என்றால், இந்தியா சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இதில் தொழில்துறை தேக்கம், வேலை இழப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை அடங்கும். வர்த்தக ஒப்பந்தங்கள் மெதுவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இது உள்நாட்டுத் துறைகளுக்கு நீண்டகால பாதிப்பைத் தவிர்க்க உதவும்.
ஒப்பந்தம் (COMPACT) புதிய முதலீடுகளை ஆதரிக்கிறது. ஆனால், தற்போதைய போக்குகள் கவலையளிக்கின்றன. இந்திய நிறுவனங்கள் அமெரிக்க அலுமினியம், எஃகு, பேட்டரி மற்றும் மருத்துவத் தொழில்களில் $7.35 பில்லியனை முதலீடு செய்கின்றன. இது அமெரிக்காவில் 3,000 வேலைகளை உருவாக்குகிறது. இருப்பினும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் அதிக மதிப்புள்ள துறைகளில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கவில்லை.
இந்த நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (COMPACT) இந்தியா முழுமையாகப் பயனடைய, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் அமெரிக்க முதலீடுகள் தேவை. இதில் கூட்டு ஆராய்ச்சி, தகவல் பகிர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் நேரடி நிதி ஆகியவை அடங்கும். இதற்கான உறுதிமொழிகள் இல்லாமல், இந்தியா தொழில்நுட்பத்தில் பின்தங்கக்கூடும். அதே நேரத்தில், திறமையையும், மூலதனத்தையும் தொடர்ந்து இழக்க நேரிடும்.
இந்தியா விமானம், இயந்திரங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற மூலதனம் மிகுந்த, அதிக லாபம் தரும் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இது ஜவுளி, தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உழைப்பு மிகுந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதிக மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமும், குறைந்த லாபம் தரும் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலமும், இந்தியா நியாயமற்ற பொருளாதார அமைப்பில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த அமைப்பு நாடானது அதிக மதிப்புள்ள ஏற்றுமதியை அதிகரிப்பதைத் தடுக்கிறது. கூடுதலாக, அதிக பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான அமெரிக்காவின் அழுத்தம் மூலதனத்தின் பெரிய வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் வர்த்தக உபரியையும் குறைக்கலாம். வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்க, இந்தியா அதன் ஏற்றுமதி இலாகாவில் (export portfolio) அதிக மதிப்புள்ள பொருட்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அமெரிக்க-இந்தியா ஒப்பந்தம் ஒரு சிக்கலான ஒப்பந்தமாகும். ஆனால், அது பொருளாதார நன்மைகளைத் தரும். 2018 முதல் 2023 வரை இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 34.3% வளர்ந்ததாக அமெரிக்க வணிகத் துறை US (Department of Commerce) தெரிவித்துள்ளது. இது $141.5 பில்லியனில் இருந்து $190.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம் $500 பில்லியனாக விரிவடைய முடியுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. வர்த்தக தாராளமயமாக்கல் சமநிலையில் இருப்பதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
வர்மா IIM அகமதாபாத்தில் ஒரு பேராசிரியராகவும் உள்ளார். பானர்ஜி ஒரு கல்வியாளராகவும் உள்ளார்.