பெண்களுக்கான நீதிமன்றங்களை (நாரி அதாலத்) நிறுவுவதற்கு மாநிலங்களிலிருந்து முன்மொழிவுகளை ஒன்றிய அரசாங்கம் வரவேற்கிறது. இவை தகராறுகளுக்கான மாற்றுத் தீர்வு (Alternative Dispute Resolution (ADR)) இயக்கமுறையின் கீழ் செயல்படும்.
சமீபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி சமீபத்தில், “நாரி அதாலத்களை” அமைப்பதற்கான திட்டங்களை வரவேற்கும் வகையில், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் ஏற்கனவே அசாம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்பட்டு வருகிறது. இதை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள்:
1. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Women and Child Development (WCD)) கீழ் உள்ள நாரி அதாலத் திட்டம், கிராம பஞ்சாயத்து மட்டத்தில் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகள் தொடர்பான குறைகளைத் தீர்க்க உதவுகிறது. ஒவ்வொரு நாரி அதாலத்திலும் கிராம பஞ்சாயத்தால் பரிந்துரைக்கப்படும் 'நியாய சகி'கள் என்று அழைக்கப்படும் 7 முதல் 11 உறுப்பினர்கள் உள்ளனர்.
2. இந்தத் திட்டம் 2023-ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாமில் உள்ள தலா 50 கிராம பஞ்சாயத்துகளில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கியது. 2023-24-ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ₹20 லட்சத்திற்கும் மேல் செயல்படுத்துவதற்காக ஒதுக்கியது. டிசம்பர் 2024-ல், நாரி அதாலத்கள் 1,062 கூட்டங்களை நடத்தி 497 வழக்குகளைப் பதிவு செய்தன.
3. நாரி அதாலத் என்பது பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்புக்காக WCD அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு குடைத் திட்டமான மிஷன் சக்தியின் ஒரு பகுதியாகும். 15வது நிதி ஆணையத்தின் கீழ் சக்தி திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை இயங்குகிறது. சம்பல் (பாதுகாப்பு மற்றும் காபந்திற்காக) மற்றும் சமர்த்யா (அதிகாரமளிப்பதற்காக) இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
சக்தி திட்டத்தின் கூறுகள்:
4. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ள, சக்தி திட்டம் மாற்றுத்திறனாளிகள், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்டவர்கள், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அதிகாரமளிப்புக்கான குறுகியகால மற்றும் நீண்டகால சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. நாரி அதாலத் உள்ளூர் மட்டத்தில் பெண்களுக்கு தகராறுகளுக்கான மாற்றுத் தீர்வு (Alternative Dispute Resolution (ADR)) இயக்கமுறையாக செயல்படுகிறது. ADR என்பது பிரச்சனைகளை விரைவாகவும் திறம்படவும் தீர்க்க நடுவர் மன்றம், சமரசம் மற்றும் மத்தியஸ்தம் போன்ற மிகவும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது. பாரம்பரிய நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலம் எடுக்கும் மற்றும் அதில் நீதி வழங்குவதில் தாமதங்கள் ஏற்படும். ADR முறைகள் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க உதவுகின்றன. இது வழக்கமான சட்ட செயல்முறைக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.
லோக் அதாலத் (Lok Adalats)
1. லோக் அதாலத் என்பது ஒரு மாற்று தகராறு நிவர்த்தி இயக்கமுறையாகும். இதன் நோக்கம் வழக்குகளை சுமுகமாகத் தீர்ப்பது அல்லது சமரசம் செய்வதாகும். 1987-ஆம் ஆண்டு சட்டச் சேவைகள் அதிகாரச் சட்டத்தின் படி (Legal Services Authorities Act, 1987) வழக்குத் தொடுப்பவர்கள் விரைவான நீதி மற்றும் கணிசமாகக் குறைக்கப்பட்ட வழக்குச் செலவுகளின் பலனைப் பெறுகிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது மற்றும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது.
2. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority (NALSA)) படி, 1987-ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரச் சட்டத்தின் கீழ், லோக் அதாலத்களின் முடிவு ஒரு குடிமை நீதிமன்ற உத்தரவைப் போலவே கருதப்படுகிறது. தீர்ப்பு இறுதியானது, அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. லோக் அதாலத்தின் முடிவில் கட்சிகள் திருப்தி அடையவில்லை என்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. இருப்பினும், சட்ட நடைமுறையைப் பின்பற்றி நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
3. லோக் அதாலத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படும்போது, நீதிமன்ற கட்டணம் தேவையில்லை. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்கு லோக் அதாலத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டால், கட்சியினர் முதலில் செலுத்திய நீதிமன்றக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.
4. 2024-ஆம் ஆண்டில், 75 ஆண்டுகளைக் கொண்டாடும் அதே வேளையில், உச்சநீதிமன்றம் ஒரு வார கால சிறப்பு லோக் அதாலத்தை ஏற்பாடு செய்தது. லோக் அதாலத், தானாக முன்வந்து ஒப்புதலுடன் வழக்குகளைத் தீர்ப்பதற்கான எளிய, தொழில்நுட்ப அடிப்படையிலான வழியை வழங்குகிறது என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.
5. தீர்வுக்கு ஏற்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் கருதியது. இதில் திருமண தகராறுகள், சொத்து தகராறுகள், மோட்டார் விபத்து கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு, சேவை மற்றும் தொழிலாளர் தொடர்பான வழக்குகள் அடங்கும். இதுபோன்ற வழக்குகளை விரைவாக தீர்ப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
6. லோக் அதாலத்கள் இந்திய நீதித்துறை அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. லோக் அதாலத்கள் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கவும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.