திருநங்கைகள் பிச்சை எடுப்பதைத் தடுப்பது கொடூரமானது மற்றும் சட்டத்துக்கு புறம்பானது -ரோஹின் பட்

 திருநங்கைகள் பிச்சை எடுப்பதை தடைசெய்வது என்பது காலனித்துவ காலத்திலிருந்து வந்த பழைய கருத்துகளுடன் வேரூன்றியுள்ளது. ஆனால், இந்த கருத்துக்கள் அரசியலமைப்பைப் பின்பற்றும் ஜனநாயக நாட்டில் பொருந்தாது.


ஏப்ரல் 10 ஆம் தேதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) பிரிவு 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம், புனே காவல்துறை ஆணையர் (Pune police commissioner) அமிதேஷ் குமார், போக்குவரத்து சிக்னல்கள், தனியார் குடியிருப்புகள் மற்றும் பிற பொது இடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் திருநங்கைகள் பிச்சை எடுக்க தடை விதித்தார். திருநங்கைகள் பொதுவாக குறிப்பிட்ட காலங்களில் இது போன்ற சில இடங்களில் பணம் கேட்கும் வழக்கமாக வைத்துள்ளனர். ஏனென்றால், உலகம் பெரும்பாலும் அவர்களை நட்பாக நடத்துவதில்லை. 


காவல்துறை ஆணையர் குமார் அவர்கள், கடந்த ஆண்டு நாக்பூரில் அங்கு பணியமர்த்தப்பட்டபோது இதேபோன்ற தடையை விதித்தார். ஆரம்பத்தில், இது தற்காலிகமாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் விதிக்கப்பட்டது. ஆனால், அது ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த தடைகள் அரசியலமைப்பின் படி சட்டப்பூர்வமாக இருக்காது. மேலும், அத்தகைய தடைகள்,  ஏழைகளாக இருப்பதற்காக மக்களை தண்டிக்க விரும்பும் ஒரு பழைய பாணியிலான சிந்தனையாகத் தெரிகிறது. 


எனவே, புனே மற்றும் நாக்பூர் தடைகள் சட்டப்பூர்வமானவையா?


அத்தகைய சட்டபூர்வமான தன்மையை ஆராயும் முன், சில விஷயங்களைக் கூற வேண்டும்: முதலில், இதுபோன்ற தடைகள் மற்றும் பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் என்று கூறுவது, மேலும் களங்கத்தை உண்டாக்கும். இரண்டாவதாக, பிச்சை எடுப்பதை ஒழிப்பது ஒரு தகுதியான சமூகக் குறிக்கோளாக இருந்தாலும், அது ஆதரவான திட்டங்கள், உள்கட்டமைப்பு, மலிவு விலையில் வீடுகள் மற்றும் தங்குமிடங்களுக்கான அணுகல், கல்வி மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தல், களங்கத்தில் வேரூன்றிய தடைகளுக்குப் பதிலாக ஒரு மாற்று நடவடிக்கையாக இருக்கும்.  


 திருநங்கைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் எதிரான பாகுபாட்டைத் தடைசெய்யும் அரசியலமைப்புப் பிரிவு 15 இன் முதன்மையான மீறல் இது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

 



தற்போதுள்ள முன்னுதாரணத்திற்கு எதிராக


ஆனால், அரசியலமைப்புச் சார்ந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, உயர் நீதிமன்றங்களின் இரண்டு தீர்ப்புகள் விவாதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. அவை, சுஹைல் ரஷித் பட் vs ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் (Suhail Rashid Bhat vs State of J&K) 2019 என்ற  ஒரு பொது நல வழக்கில் (Public Interest Litigation (PIL)) ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம், ஜம்மு & காஷ்மீர் பிச்சைக்காரர் தடுப்புச் சட்டம் (J&K Prevention of Beggary Act), 1960க்கு அரசியலமைப்புச் சவாலை எதிர்கொண்டது. "பொது இடங்களில் பிச்சைக்காரர்களின் தகவல்தொடர்பு நடவடிக்கையை தடை செய்வது அரசியலமைப்பின் 19(1)(d) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளை மீறுவதாகும் மற்றும் நிலையானது அல்ல". மேலும், பிச்சை எடுப்பதை குற்றமாகக் கருதும் சட்டங்கள் உண்மையில் வறுமையை குற்றமாக்குகின்றன. 


இரண்டாவதாக, ஹர்ஷ் மாந்தர் vs ஒன்றிய இந்தியாவில் (Harsh Mander v Union of India) 2018, டெல்லி உயர்நீதிமன்றத்தில், 1959 ஆம் ஆண்டு பாம்பே பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் (Bombay Prevention of Begging Act), டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு (தற்போது டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் (NCT)) நீட்டிக்கப்பட்டது. பிச்சை எடுப்பது குற்றமில்லை என்று கூறி உயர்நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்தது. இதனால், வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்கும் மோசடிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. 


நீதிபதி கீதா மிட்டலின் சில வார்த்தைகள் சிலவற்றை மீண்டும் வலியுறுத்துகின்றன, “மக்கள் தெருக்களில் பிச்சை எடுப்பது அவர்கள் விருப்பத்திற்காக அல்ல, ஆனால் அது அவர்களுக்குத் தேவை என்பதற்காகத்தான். பிச்சை எடுப்பதே இவர்களின் வாழ்வாதாரத்திற்கான கடைசி வழியாக உள்ளது. இதைத் தவிர, வாழ்வதற்கு வேறு வழி இல்லை. மேலும், பிச்சை எடுப்பது ஒரு சமூக நோயின் அறிகுறியாகும், சமூக ரீதியாக உருவாக்கப்பட்ட வலையில் நபர் விழுந்துவிட்டார். பிச்சை எடுப்பதை ஒழிக்க வேண்டுமானால், பிச்சைக்காரர்களை கண்ணுக்கு தெரியாத வகையில் செயற்கையான வழிமுறைகள் போதுமானதாக இருக்காது” என்றார்.  


ஓரங்கட்டப்பட்ட குழுவை குற்றவாளியாக்குதல் 


பிச்சை எடுப்பது மட்டுமே சட்டவிரோதமானது அல்ல. திருநங்கைகளை காவல்துறையினர் எப்படி நடத்துகிறார்கள் என்ற பார்வையும் உள்ளது. இதில், திருநங்கைகள் பல நூற்றாண்டுகளாக தவறாக நடத்தப்படுகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் நியாயமற்ற முறைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கல்வி பெற்றாலும், அவர்கள் வேலை தேடுவதற்கு போராடுகிறார்கள். எனவே, சிலர் உயிர்வாழ்வதற்காக பிச்சை எடுக்க அல்லது பாலியல் தொழில் செய்ய வேண்டிய சூழலுக்குள் சிக்கியுள்ளனர். திருநங்கைகளை நடத்துவது மற்றும் பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டங்கள் இரண்டும் ஒரு நியாயமான சமூகத்தில் சேராத பழைய காலனித்துவ சார்புகளிலிருந்து வருகின்றன. இது பெரும்பாலும் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைக்கும், பிச்சை எடுப்பதற்கு நியாயமற்ற தண்டனைக்கும் வழிவகுக்கிறது. 


அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் பணியாற்ற வேண்டும். இதன் பொருள் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பின்பற்றுவது. அதாவது, மக்கள் வாழ்வதற்கு போதுமான அளவு சம்பாதிப்பது மற்றும் நல்ல சுகாதாரத்தை அணுகுவது போன்றவை ஆகும். தனிநபர்களுக்கு இடையில் மட்டுமல்ல, வெவ்வேறு குழுக்களுக்கு இடையேயும் சமத்துவமின்மையைக் குறைக்க வேலை செய்வதையும் இது குறிக்கிறது.  


பிச்சை எடுப்பதற்கு எதிராக அரசு செயல்படுவதைப் பார்ப்பது, காவல் துறையின் மூலம் வறுமை மற்றும் குற்றங்கள் பற்றிய தரவுகள் இல்லாமல், ஒருவரின் தலையை மணலில் புதைப்பதாகும். திருநங்கைகளுக்கு உதவித்தொகை மற்றும் அவர்களுக்கு உதவ சிறப்பு வாய்ப்புகள், வேலைகளில் சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் தேவை. அவர்களுக்கான பிற ஆதரவு அமைப்புகளும் இருக்க வேண்டும். 


கட்டுரையாளர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், உயிரியல் அறவியலாளராகவும் உள்ளார்.




Original article:

Share: