இந்தியாவின் மாற்று வளர்ச்சித் திட்டத்தின் படிப்பினைகள்

 எரிசக்தி மாற்றம் (energy transition), டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (digital public infrastructure) மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் (female empowerment) ஆகியவற்றில் முதலீடு செய்வது நாட்டை பசுமை மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.


சமீபத்திய இந்தியப் பயணமானது அறிவூட்டுவதாக இருந்தது. ஒரு இருண்ட உலகளாவிய கண்ணோட்டம் இருந்தபோதிலும், ஒரு பிரகாசமான உதாரணத்தைக் கண்டுபிடித்தது. பொது முதலீடுகள் பெரும்பாலும் இந்த வளர்ச்சியைத் தூண்டின. இருப்பினும், தனியார் துறையும் இந்தியாவின் எதிர்காலத்தை பாதிக்கிறது என்பது தெளிவாகிறது. உதாரணமாக, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிகவும் அவசியம் என்பதைக் காட்டும் பெண் தொழில்முனைவோரை தமிழ்நாட்டில் சந்தித்ததன் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தில் முதலீடு செய்கின்றன.


இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், பொது மற்றும் தனியார் முயற்சிகள், புதுமை மற்றும் பின்னடைவு ஆகியவற்றுடன் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இந்த அனுபவம் மற்ற நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேசிய, மாநில மற்றும் உள்ளூர் - பல்வேறு நிலைகளில் பணியாற்றிய வளர்ச்சி உத்திகள் குறித்த மதிப்புமிக்க பாடங்களை இந்தியா வழங்குகிறது. வளரும் நாடுகளிடையே அறிவு பரிமாற்றத்தின் மூலம் மாற்றியமைக்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய நடைமுறை உலக தீர்வுகளுக்கான சோதனைக் களமாக இது செயல்படுகிறது. எனது பயணத்தின் போது, எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய மூன்று எடுத்துக்காட்டுகளில் கவனம் செலுத்தினேன்.


இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இந்தியா ஆற்றல் மாற்றத்தில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதன் மொத்த மின் உற்பத்தி திறனில் 42 சதவீதமாக உள்ளது. இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க சந்தையாகவும், உலகளாவிய சூரிய உற்பத்தி திறன்களில் 3 சதவீதத்தையும் கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் டாலர்களை புதுப்பிக்கத்தக்க வகையில் முதலீடு செய்துள்ளது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பெரிய அளவிலான பொது முதலீட்டைக் கொண்ட உலகின் ஐந்து வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் இடம் பிடித்துள்ளது. மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பசுமை ஹைட்ரஜன் (green hydrogen) உற்பத்தி செய்வதற்கும் நாடு ஆதரவு அளித்துள்ளது. 


தூய்மையான எரிசக்தியை நோக்கிய இந்தியாவின் நகர்வை முதலீட்டாளர்கள் ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கின்றனர். உலக வங்கி, இந்தியாவில் சூரிய பூங்காக்கள் (solar parks) மற்றும் கூரை சூரிய ஒளியில் (rooftop solar) சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இது வணிக முதலீட்டில் 40 மடங்கு தொகையை ஈர்த்துள்ளது. இந்தியா தனது எரிசக்தி மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்த கட்டம் பரிமாற்றம் மற்றும் சேமிப்பில் முதலீடு செய்வதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் கணிக்க முடியாத தன்மையைக் கையாள்வதை உள்ளடக்கும். போக்குவரத்தை பெரிய அளவில் மற்றும் விரைவான மின்மயமாக்கலை ஊக்குவிப்பதில் இது கவனம் செலுத்தும். கூடுதலாக, தொழில்துறை கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களில் முதலீடுகளை இது ஊக்குவிக்கும். 

 

இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (digital public infrastructure (DPI)) முன்முயற்சியுடன் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய அடையாளச் சான்றிதழுடன், மில்லியன் கணக்கான மக்கள் இப்போது சமூக பாதுகாப்பு நிகர கட்டணங்களை அணுகலாம், வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் மற்றும் வரிசையில் நிற்காமல், பொது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், காகிதப் படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி அரசாங்க சேவைகளைப் பெறலாம். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயன்பாடு, மகப்பேறு சுகாதார பணப் பரிமாற்றங்களை 43 சதவீதம் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில், ரொக்கமில்லா சூழலில், டிஜிட்டல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, தங்கள் வணிகத்தை வளர்க்கவும், நிதியை அணுகவும் செழித்து வரும் பெண் குறுந்தொழில்முனைவோரை சந்தித்தது அனுபவமாக இருந்தது. மலிவு விலையில் இணைப்பிற்கான (affordable connectivity) அணுகல் ஒரு பிரச்சினையாக இருந்தாலும், டிஜிட்டல் கண்டுபிடிப்பு கிராமப்புறங்களில் ஒரு  மாற்றத்தை கொண்டுள்ளது. இணையவழி சுகாதார ஆலோசனைகள் (online health consultations), தொலைதூர கற்றல் (remote learning), மின் வணிகம் (e-commerce) மற்றும் நிதி தொழில்நுட்பம் (fin-tech) ஆகியவற்றை செயல்படுத்துகிறது.


டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் நாடுகள் எவ்வாறு வளர்ச்சியடையலாம் என்பதையும், அனைவரையும் உள்ளடக்கவும் மற்றும் வறுமையைக் குறைக்கவும் பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா காட்டுகிறது. இந்தியா தனது டிஜிட்டல் பயணத்தில் கற்றுக்கொண்டதை உலக வங்கி மற்ற நாடுகளுக்கு கற்றுக்கொடுக்கிறது.


மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவான பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால், மேம்படுவதற்கான சாதகமான அறிகுறிகளையும், விவசாயிகள், வணிக உரிமையாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பாலின இடைவெளியைக் குறைக்க பணிபுரியும் அரசாங்க அதிகாரிகள் என பல பெண்களை நான் சந்தித்தேன். மேலும், தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது, நகரங்களில் பாதுகாப்பான வீட்டுவசதிக்கு ஆதரவளிக்கும் கொள்கைகள் எவ்வாறு அதிகமான பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் சேர உதவுகின்றன என்பதைக் கண்டேன். பணத்திற்கான சிறந்த அணுகலுடன், இந்த முயற்சிகள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை மொத்தத்தில் 43% ஆக உயர்த்தியுள்ளன.


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihoods Mission), உலக வங்கியின் (World Bank) உதவியுடன், சுய உதவிக் குழுக்களை (self-help groups) உருவாக்கி லட்சக்கணக்கான கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. பெண்கள் நடத்தும் கூட்டுறவுகள் மற்றும் கிராமப்புற வணிகங்களை ஆதரிப்பதற்காக $4 பில்லியனுக்கும் அதிகமான தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த முயற்சிகளை விரிவுபடுத்தினால், அது உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த முடியும். இது மற்ற வளரும் நாடுகளில் இந்த அளவு சராசரியாக உள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சியை 1% அதிகரிக்கும் மற்றும் பல இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும்.


வெற்றிகரமான திட்டங்களை மற்ற நாடுகளுக்கு பரப்ப உலக வங்கி பணியாற்றி வரும் நிலையில், எனது சமீபத்திய இந்திய பயணம் எனக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் அதிக வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கான இலக்குடன், உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

எழுத்தாளர் உலக வங்கியின் செயல்பாடுகளின் இயக்குநராக (Managing Director Operations) உள்ளார்.




Original article:

Share: