விளைநிலங்களில் உள்ள மரங்களால் சிறு விவசாயிகள் எவ்வாறு பயனடைவார்கள்? -தீப்தி ஆர்.சாஸ்திரி, மிலிந்த் புயன், ரவிகாந்த் ஜி.

 சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார காரணங்களால் இந்தியாவில் உள்ள சிறு-குறு விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பில் சவால்களை எதிர்கொள்கின்றனர். 


இந்தியாவில் விவசாயம் என்பது வரலாற்று ரீதியாக பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளை ஒருங்கிணைத்து, பலதரப்பட்ட நில பயன்பாட்டு நடைமுறையாக இருந்து வருகிறது. வேளாண் காடு வளர்ப்பு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த நுட்பம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் மற்றும் பசுமைப் புரட்சியால் (Green Revolution) ஈர்க்கப்பட்ட ஒற்றைப்பயிர் சாகுபடி (monocropping) முறையின் பத்தாண்டுக்குப் பிறகு மெதுவாக பிரபலமடைந்து வருகிறது.


சமீபத்தில் எங்களின் களப்பயணத்தின் போது, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடுத்தர விவசாயியான சித்ரா என்பவர், கஜா புயலால் தென்னை மரங்களை முழுவதுமாக அழித்து மண்ணை உப்பாக மாற்றிவிட்டது என்று கூறினார். அதன் பிறகு, எந்த விதமான பயிர்களை நடவு செய்வது என்று தெரியாமல் இருந்தோம். பின்னர், இவருடன் சேர்ந்து மற்ற விவசாயிகளும் அதற்கு பதிலாக பலா மற்றும் மா மரங்களை நடவு செய்ய முடிவு செய்தனர். இப்போது, அவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல லாபம் ஈட்டுகிறார்கள்.


வேளாண் காடுகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முன்னோடி முயற்சிகளின் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய வேளாண் வனவியல் கொள்கை 2014 (National Agroforestry Policy) மூலம் இந்த பகுதியில் முயற்சிகளை மேம்படுத்துகிறது. இருப்பினும், வேளாண் காடு வளர்ப்பு பெரும்பாலும் நடுத்தர அல்லது பெரிய நிலம் கொண்ட விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது.


சிறு விவசாயிகள் பொதுவாக மரங்களை வளர்ப்பதில்லை. ஏனெனில், அவை வளர நீண்ட நேரம் எடுக்கும். மேலும், அதற்கு அதிக ஊக்கத்தொகை அல்லது முதலீடு கிடைக்காது என்பதால், சந்தைக்கான இணைப்புகள் பலவீனமாக உள்ளன. ஆனால், விவசாயி சித்ராவின் அனுபவம் வேளாண் காடுகளின் திறனை நிரூபிக்கிறது. இது, பண்ணைகளில் அதிக மரங்களை நடவு செய்வதை ஊக்குவிப்பதற்கான ஆதரவின் அவசியத்தை பரிந்துரைக்கிறது.

தொடர் தண்ணீர் பிரச்சனை


ஐந்தாண்டு கால நீட்டிப்பால் ‘இந்தியாவின் காடுகளுக்கு வெளியே மரங்கள்’ (Trees Outside of Forests India (TOFI))   முன்முயற்சியானது, தற்போதைய நிலையில் மாற்றத்தைத் தூண்டுவதற்கான விரிவான வழிகளை மதிப்பிடுவதற்கான ஒரு முயற்சியாகும். இது சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (Agency for International Development (USAID)) மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest and Climate Change) கூட்டு முயற்சியாகும். இந்தியாவின் ’காடுகளுக்கு வெளியே மரங்கள்’ (TOFI) நம்பிக்கைக்குரிய விரிவாக்க வாய்ப்புகளை அடையாளம் கண்டு சரியான வளர்ச்சிகளை ஈடுபடுத்துவதன் மூலம் ஏழு இந்திய மாநிலங்களில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்க முயல்கிறது.


ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் வேளாண் காடுகள் மூலம்   காடுகளுக்கு வெளியிலான மரங்களின் (trees-outside-forests (TOF)) எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கான முக்கிய தடைகளை எங்கள் ஆராய்ச்சி மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகள் மூலம் கண்டறிந்துள்ளோம்.


இந்த மாநிலங்களில் உள்ள சிறு விவசாயிகள், புதிய தொழிநுட்பத்திற்கு மாறுவதற்கு போதுமான தண்ணீர் மற்றும் பணத்தைப் பெறுவது குறித்து அடிக்கடி கவலைப்படுவதைக் கண்டோம். ஆனால், இந்த பிரச்சனைகளை சரிசெய்ய வழிகள் இருப்பதாக நாம் நம்புகிறோம். 


சரியான பூர்வீக இனங்களைக் கண்டறிதல்


வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) 2014 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வனவியல் கொள்கையை (National Agroforestry Policy) உருவாக்கியபோது தண்ணீர் கிடைப்பது, குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதை கவனித்தது. மேலும் தண்ணீரைப் பாதுகாக்க கூடுதல் நிதி தேவைப்படும் மற்றும்/அல்லது அவ்வாறு செய்வதில் கூடுதல் கடனைச் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். மேலும், மரக்கன்றுகள் வளரும் பருவத்தில் நீர் இருப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும், கடினமான பாறை நிலத்தடி நீர் ஆதாரங்களைக் கொண்ட பகுதிகள் அல்லது அதிக மழை பெய்யாத இடங்கள் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பயிர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் அது கடினமாக இருக்கும்.


இந்த சிக்கலை போக்க, பயிர்களைப் போல அதிக தண்ணீர் தேவைப்படாத மரங்களை நடவு செய்வது ஒரு தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இது எப்போது சரியான தீர்வாக அமையும் என்பதைக் கண்டறிய 'ஜல்டோல்' (Jaltol) என்ற நீர் அளவிடும் கருவியை (water-accounting tool) மாற்றியமைக்க பெங்களூரில் உள்ள வெல் ஆய்வகத்துடன் (WELL Labs) நாங்கள் இணைந்தோம். இந்த கருவி, மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது. உதாரணமாக, மத்திய கர்நாடகாவில் உள்ள சில பயிர்களைப் போல மா மரங்களுக்கும் அதிக தண்ணீர் தேவையில்லை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களுக்கு ஆண்டு முழுவதும் பயிர்களை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. 


இந்த கருவிகள் நிலத்தை மீட்டெடுக்க விரும்பும் குழுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் மரங்கள் மற்றும் பயிர்களின் சரியான கலவையைத் தேர்வுசெய்ய உதவுகின்றன. 

 


சரியான பூர்வீக இனங்களைக் கண்டறிதல்


உண்மையில், சரியான இடம் மற்றும் சரியான காரணத்திற்காக சரியான இனங்களைத் தேர்ந்தெடுப்பது, வாழ்வாதாரத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு வேளாண் காடுகளின் அடிப்படையாகும். இருப்பினும், பல விவசாயிகள் தாவர உண்ணும் விலங்குகளைத் தடுக்கும் வேகமாக வளரும் மரங்களை விரும்புகிறார்கள். ஆனால், இந்த மரங்கள் பெரும்பாலும் பூர்வீகமானவை அல்ல. அவை, மண்ணுக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். 


உதாரணமாக, பூர்வீகமாக இல்லாத கேசுவரினா (Casuarina) மற்றும் யூகலிப்டஸ் (eucalyptus) மரங்கள் உப்பு மண்ணை நன்கு கையாளும் மற்றும் அதிக வேலை தேவையில்லாமல் விரைவாக வளரும். ஆனால், இரண்டு இனங்களும் முதன்மையாக ஒரு ஊடுபயிராக (mono-crop block plantations) அல்லது மரம்-பயிர் கலவையாக (intercrop or a tree-crop) இல்லாமல் பெரிய ஒற்றைப்பயிர் தொகுதி தோட்டங்களாக வளர்க்கப்படுகின்றன. இது, சிறிய நில உரிமையாளர்களுக்கு இன்றியமையாததாக இருக்கும்.


வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பூர்வீக மரங்களைக் கண்டுபிடிப்பது கடினமானது. ஆனால், நில சேதத்தைத் தடுப்பதற்கும், வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதற்கான கூடுதல் வழிகளை வழங்குவதற்கும் இன்றியமையாதது. 'மறுசீரமைப்புக்கான பன்முகத்தன்மை' (Diversity for Restoration) போன்ற கருவிகள் உதவக்கூடும். குறிப்பிட்ட மறுசீரமைப்பு இலக்குகளுடன் பொருந்தக்கூடிய காலநிலை-எதிர்ப்பு இனங்களின் ஏற்புடைய பட்டியலை பரிந்துரைக்கிறது. இந்த கருவி விரைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்படும். பின்னர், மற்ற பகுதிகளுக்கான திட்டங்களும் இருக்கும்.


சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணம்


மற்ற ஆய்வுகள் ஒரு நிலையான விவசாய முறையாக வேளாண் காடுகளுக்கான பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளைப் பார்த்தன. ஆனால், உண்மையில் வேளாண் முறைகளில் இதைச் செய்வது இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது. அதற்கு பணம் செலுத்துவதற்கும் நல்ல சந்தைகளுடன் இணைவதற்கும் போதுமான ஆதரவு இல்லை. மேலும், அரசாங்க விதிகள் பெரும்பாலும் வெவ்வேறு நில அளவுகள் அல்லது வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள சூழலுடன் பொருந்தாது. இதன் விளைவாக, இந்தத் திட்டங்கள் இயல்பாகவே சிறு விவசாயிகளை விலக்குகின்றன. 


எடுத்துக்காட்டாக, இந்திய வன மற்றும் மரச் சான்றிதழ் திட்டம் (Indian Forest and Wood Certification Scheme) 2023, வேளாண் காடுகள் மற்றும் மர அடிப்படையிலான தயாரிப்புகள் நிலையானவை என சான்றளிக்கும், விவசாயிகள் மற்றும் தொழில்களுக்கான தகுதி அளவுகோல்களின் முழுமையான பட்டியலைக் கொண்டுள்ளது. 


ஆனால், அதன் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது சிறு விவசாயிகளுக்கு மிகவும் செலவு மிக்கதாக இருக்குமா என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. தற்போதைய அரசாங்கக் கொள்கைகள் வேளாண் காடுகளுக்கு நிதியளிக்க எவ்வாறு உதவும் என்பதையும் கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.


சுற்றுச்சூழல் வரவுகளின் புதிய யோசனை மற்றும் 'சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணம்' (payment for ecosystem services(PES)) போன்ற பழைய வழிகள் விவசாயிகளை ஊக்குவிக்கும். சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணத்தில், மகரந்தச் சேர்க்கை போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவையிலிருந்து பயனடையும் ஒரு நிறுவனம், அந்த சேவையை ஆதரிக்கும் மரங்களை பராமரிக்க ஒரு விவசாயிக்கு பணம் கொடுக்கலாம். இந்தக் கருவிகள் பொருளாதாரத்தில் இயற்கையின் மீது கவனம் செலுத்தும் யோசனையை ஆதரிக்கின்றன. ஆனால், சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை (ecosystem service) யார் விற்கிறார்கள் மற்றும் வாங்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பகுதிக்கான குறிப்பிட்ட சேவைகளை நாம் முழுமையாகப் பார்க்க வேண்டும். இது ஒரு அரசியல் எல்லைக்கு மட்டும் உகந்ததல்ல. இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், மண் மற்றும் நிலத்தடி நீரை ஆரோக்கியமாக்கும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான விவசாய முறைகளை பராமரிக்க இந்த நடைமுறைகள் முக்கியமானவை.   

   

ஒரு  வாழ்க்கை முறை 


வேளாண் காடுகள் வளர்ப்பில் இந்தியாவில் சிறு விவசாயிகளை ஈடுபடுத்த வேண்டும். ஏனெனில், அவர்கள் நாட்டின் பெரும்பாலான விவசாய நிலங்களை வைத்திருக்கிறார்கள். இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இது இப்போது கடினமாக உள்ளது. வேளாண் காடு வளர்ப்புக்கு பாதுகாப்பான நில உரிமை ஒரு முன்நிபந்தனை என்றாலும், நிலையான வேளாண் காடு வளர்ப்பின் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் போது சந்தை இணைப்புகள் மூலம் பொருளாதார நம்பகத்தன்மையை உறுதி செய்வது இந்த விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க முக்கியமானது.


வேளாண் காடுகள் பாதுகாவலர்கள் (conservationists), வேளாண் பொருளாதார வல்லுநர்கள் (agro-economists) மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் (policymakers) அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு தீர்வாக இருக்கலாம். இது சுற்றுச்சூழல் அமைப்புகள் (foster healthy ecosystems) ஆரோக்கியமாக இருக்கவும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு, குறிப்பாக சிறு உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும். 


தீப்தி ஆர்.சாஸ்திரி, மிலிந்த் பனியன், ஜி.ரவிகாந்த் ஆகியோர் பெங்களூருவில் உள்ள சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையில் (Ashoka Trust for Research in Ecology and Environment (ATREE)) TOFI முன்முயற்சியின் மூலம் பண்ணைகளில் மரங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கான சூழல் சார்ந்த வழிகளை மேம்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.




Original article:

Share: