புதிய தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? -கே. வெங்கடரமணன்

 நியமன நடைமுறையில் சட்டம் என்ன சொல்கிறது? புதிய சட்டம் ஏன் சவால் செய்யப்பட்டுள்ளது?


இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள், தேர்தல் உறுப்பினர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமித்தார். அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரிகள் (retired IAS officers) ஆவார். இதன் மூலம், புதிய சட்டத்தின் கீழ் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் எனப்படும் அரசியலமைப்பு அமைப்புக்கான நியமனங்களை இந்த சட்டம் நிர்வகிக்கிறது. இந்த சட்டம் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் (Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act), 2023 என அழைக்கப்படுகிறது.


புதிய தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன?


மேற்கண்ட, புதிய சட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இரண்டு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. அவர்கள் ஆறு பெயர்களைக் கொண்ட குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் தலைமையிலான ஒரு குழு மற்றும் இரண்டு உயர் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு, சட்டத்தின்படி அவர்களைத் தேர்ந்தெடுத்தது.


இதற்கு முன் என்ன செயல்முறை இருந்தது?


அரசியலைப்பு சட்டத்தின் 324வது பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை கண்காணிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இது, தேர்தல் ஆணையமானது, தலைமைத் தேர்தல் ஆணையரையும், குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயம் செய்யக்கூடிய மற்ற தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையையும் கொண்டிருக்கும் என்றும் அது கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமார் 40 ஆண்டுகளாக ஒரே ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே பணியில் இருந்தார். பின்னர், அக்டோபர் 1989 இல், இது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியது. ஆனால், அந்த நேரத்தில் நியமிக்கப்பட்ட இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஜனவரி 1, 1990 அன்று நீக்கப்பட்டனர்.


1991 இல், தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கான (Election Commissioner (EC)) விதிகளை அமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், இது 1993ல் மாற்றப்பட்டது. ஆனால், இவர்களை எப்படி நியமனம் செய்வது என்று கூறவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட வழி எதுவும் இல்லாததால், குடியரசுத் தலைவர் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) தேர்வு செய்கிறார். இறுதியில், இது வழக்கமான செயல்முறையாக மாறியது: சட்ட அமைச்சகமானது, பிரதமருக்கு தேர்தல் ஆணையர் தேர்வுக்கான நபர்களின் பட்டியலை வழங்குகிறது. பின்னர், பிரதம, ஒருவரை தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை முதலில் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுப்பது வழக்கம். பின்னர், தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் முடிந்ததும், மூத்த தலைமை தேர்தல் ஆணையராக உயர்த்தப்பட்டது.


இந்த செயல்முறையில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன ?


அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம் (Anoop Baranwal vs Union of India) வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை  நியமிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டும் அல்ல என்று முடிவு செய்தனர். இந்த அதிகாரத்தை "பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த சட்டத்தின்படியும்" (subject to any law made by Parliament) உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். அரசியலமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து அத்தகைய சட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதால், நாடாளுமன்றம் அதன் சொந்த சட்டத்தை உருவாக்கும் வரை பதவி நியமனங்களுக்கான தற்காலிக திட்டத்தை நீதிமன்றம் வழங்கியது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (அல்லது மிகப் பெரிய எதிர்க்கட்சித் தலைவர்) மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூன்று நபர் கொண்ட குழு இந்த நியமனங்களைச் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்றம் 2023 சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அது, டிசம்பர் 2023 இன் பிற்பகுதியில் நடைமுறைக்கு வந்தது.


சட்டத்திற்கு எதிரான விமர்சனம் என்ன?


இந்த புதிய சட்டத்தின் முக்கிய விமர்சனம் என்னவென்றால், தேர்வுக் குழுவில் (selection committee) உள்ள இந்திய தலைமை நீதிபதிக்கு (CJI) பதிலாக ஒரு மத்திய அமைச்சரை அது மாற்றியது. இதன் விளைவாக, இப்போது மூன்று பேர் கொண்ட குழுவில் நிறைவேற்று அதிகாரம் இரண்டுக்கு ஒன்று பெரும்பான்மையுடன் உள்ளது. புதிய சட்டம் இயற்றப்படும் வரை தலைமை நீதிபதியாக இருப்பது தற்காலிகமாக இருந்ததால், இந்தச் சட்டம் உண்மையில் தலைமை நீதிபதியை நியமன செயல்முறையிலிருந்து நீக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் பலமுறை நிராகரித்துள்ளது. இப்போது, இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் உள்ள முக்கிய விதியை மீறுவதாக கருதுவதால், மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். இது, நியமன செயல்முறையை அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாக வைத்திருக்க வேண்டும்.




Original article:

Share: