HbA1C சோதனை என்றால் என்ன, நீரிழிவு நோயை சரிபார்க்க இது ஏன் பயன்படுத்தப்படுகிறது? -ஜுபேதா ஹமீத்

 2018 ஆம் ஆண்டில் வகை-2 நீரிழிவு நோயை (Type 2 Diabetes) நிர்வகிப்பதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research) வழிகாட்டுதல்கள், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. 2009 ஆம் ஆண்டில், அமெரிக்க நீரிழிவு சங்கமும் (American Diabetes Association) நீரிழிவு நோயைக் கண்டறியும் கருவியாக HbA1c ஐப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.


2023 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 10.13 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 13.6 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நோயாளியாக (pre-diabetic) உள்ளனர். கூடுதலாக, 35% க்கும் அதிகமான இந்தியர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் (hypertension) உள்ளது மற்றும் கிட்டத்தட்ட 40% உடல் பருமனாக உள்ளனர். இவை இரண்டும் நீரிழிவுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. உலக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.


தொற்றாத நோய்களை ஆரம்பத்திலேயே தடுப்பதும் கண்டறிவதும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானவை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். HbA1C சோதனையானது முந்தைய, வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயைக் கண்டறியவும் நிர்வகிக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் (glycated hemoglobin) அல்லது கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை (glycosylated hemoglobin test) என்றும் அழைக்கப்படுகிறது.


சோதனை எவ்வாறு செயல்படுகிறது?


நீங்கள் உண்ணும் உணவில் இருந்து சர்க்கரையானது, இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இந்த, சர்க்கரை அல்லது குளுக்கோஸானது, இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் இணைகிறது. இதில் உள்ள ஹீமோகுளோபின், உடலின் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜனைக் கடத்தும் ஒரு முக்கிய புரதமாகும். ஒவ்வொருவருக்கும், ஹீமோகுளோபினுடன் சில சர்க்கரை இணைக்கப்பட்டுள்ளது. முன் நீரிழிவு (pre-diabetes) மற்றும் சர்க்கரை நோய் (diabetes) உள்ளவர்களுக்கு அதிகமாக உள்ளது. HbA1C சோதனையானது, உங்கள் இரத்த சிவப்பணுக்களில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதைச் சரிபார்க்கிறது.


நீரிழிவு நோயை சரிபார்க்க சோதனை ஏன் பயன்படுத்தப்படுகிறது?


2016 ஆம் ஆண்டில், 'நீரிழிவு மற்றும் இதய அபாயத்தை மதிப்பிடுவதில் ஹீமோகுளோபின் ஏ1சியின் பங்கு' (The Role of Hemoglobin A1c in Assessing Diabetes and Heart Risk) என்ற கட்டுரை Cleveland Clinic Journal of Medicine-னில் வெளியிடப்பட்டது. "HbA1c 1955 இல் கண்டறியப்பட்டது. இருப்பினும், 1968 ஆம் ஆண்டு வரை நீரிழிவு நோயாளிகளின் உயர் HbA1c அளவுகள் அங்கீகரிக்கப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவுகளுடன் HbA1c ஐ இணைக்க மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க அதைப் பயன்படுத்த பரிந்துரைக்க இன்னும் எட்டு ஆண்டுகள் ஆனது. "


ஆரம்பத்தில், HbA1c அளவீடுகள் சீரானதாக இல்லை என்று கட்டுரை குறிப்பிட்டது. பின்னர், ஆய்வுகள் மிகவும் துல்லியமான HbA1c அளவீடுகளைக் கொண்டிருப்பது நோயாளியின் விளைவுகளை மேம்படுத்தியது மற்றும் இறப்பு விகிதங்களைக் குறைத்தது. மேலும் துல்லியமான அளவீட்டு முறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. 1993 முதல் 2012 வரை, HBA1c அளவீடுகளின் துல்லியத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும் அவை குறிப்புத் தரங்களுடன் பொருந்துவதை உறுதிசெய்வதற்கும் திட்டங்கள் இருந்தன என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்க நீரிழிவு சங்கம் 2009 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயைக் கண்டறிய HbA1c ஐப் பயன்படுத்தலாம் என்று கூறியது. 2011 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்புடன் (WHO) ஒரு நிபுணர் ஆலோசனைக்குப் பிறகு, சில தரப் பரிசோதனைகள் செய்யப்பட்டால், அளவீடுகள் சர்வதேசத்தைப் பின்பற்றினால், அதைக் கண்டறியப் பயன்படுத்தலாம் என்றார்கள். 


HbA1C சோதனை முடிவுகள் எப்படி இருக்கும்?


HbA1C அளவுகள் ஒரு சதவீதமாக அல்லது mmol / mol (ஒரு மோலுக்கு மில்லிமோல்கள்) கொடுக்கப்படுகின்றன. அதிக சதவீதம், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். மோல் என்பது இரசாயனங்களுக்குப் பயன்படுத்தப்படும் அளவீடு ஆகும். வேதியியலில் இது பொதுவானது. அதிக சதவீதம், உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும்.


HbA1cக்கு:

- 5.7% க்கு கீழே சாதாரணமானது.

- 5.7% மற்றும் 6.4% க்கு இடையில் முன் நீரிழிவு நோயைக் காட்டலாம்.

- 6.5% அல்லது அதற்கு மேற்பட்டது நீரிழிவு நோயைக் குறிக்கும்.


mmol/mol இல்:

- 42க்குக் கீழே 6.0%க்குக் கீழே சமம்.

- 42-47 mmol/mol 6.0 முதல் 6.4% வரை சமம்.

- 48 mmol/mol அல்லது அதற்கு மேற்பட்டது 6.5% அல்லது அதற்கும் அதிகமாகும்.


நோயாளிக்கு சிறுநீரகம் (kidney) அல்லது கல்லீரல் செயலிழப்பு (liver failure), கடுமையான இரத்த சோகை அல்லது தலசீமியா (thalassaemia) போன்ற இரத்தக் கோளாறு (blood disorder) இருந்தால் சோதனை முடிவுகள் வேறுபட்டிருக்கலாம். ஆரம்ப அல்லது பிற்கால கர்ப்ப காலத்தில் முடிவுகளும் மாறலாம். சிலருக்கு குறைவான பொதுவான வகை ஹீமோகுளோபின் உள்ளது. இந்த வகை குறிப்பிட்ட மக்களில் காணப்படுகிறது. மற்றவர்கள் ஸ்டெராய்டுகள் (steroids), ஓபியேட்ஸ் (opiates) அல்லது டாப்சோன் (dapsone)  (தொழுநோய்க்கான மருந்து) போன்ற குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப அல்லது பிற்பகுதியிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.


நீரிழிவு நோய்க்கு முந்தைய அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பொதுவாக குறிப்பிட்ட HbA1C இலக்குகளை நிர்ணயிக்கிறார்கள். ஆனால்,வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. வயது, உடல்நலம், மருந்துகள் மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் இந்தத் தேவைகள் மாறலாம்.


யார் தேர்வு எடுக்க வேண்டும், எப்போது?


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research) 2018 கூற்றுப்படி, நீங்கள் 30 வயதுக்கு மேல் இருந்தால், நீங்கள் நீரிழிவு நோய்க்கான வகை-2 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் பருமன், பெரிய இடுப்பு அளவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (polycystic ovarian syndrome) போன்ற சில ஆபத்து காரணிகள் உள்ளவர்கள் முன்கூட்டியே பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், அவர்களின் குளுக்கோஸ் அளவு சாதாரணமாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனையை பரிந்துரைக்க வேண்டும். நீரிழிவு நோய்க்கு முந்தையவராக இருந்தால், இந்த பரிசோதனையை தவறாமல் ஆண்டுதோறும் ஏற்பட செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிட்டிருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அடிக்கடி பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.


நீரிழிவு நோய் இருந்தால், மருத்துவரை அணுகி, ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது, உங்கள் இரத்த சர்க்கரையின் அளவு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் சிகிச்சை சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.


பரிசோதனை மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


உணவுக்கு முன் மற்றும் உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை சோதனைகள் மூலம், இரத்த சர்க்கரை அளவை குறிப்பிட்ட நேரங்களில் அதன் அளவை காட்டுகிறது. அதே நேரத்தில் HbA1C சோதனை கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் உங்கள் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை பிரதிபலிக்கிறது.


மேலும், பாரம்பரிய இரத்த சர்க்கரை பரிசோதனைகள் (Traditional blood sugar tests), ஒருவர் என்ன சாப்பிட்டார் மற்றும் எப்போது சாப்பிட்டார் என்பதன் அடிப்படையில் வேறுபடலாம். இருப்பினும், HbA1C சோதனை இந்த காரணிகளால் பாதிக்கப்படாது, இது மிகவும் நம்பகமானதாக அமைகிறது. கடைசியாக உணவை எப்போது உட்கொண்டாலும் இந்த பரிசோதனையைச் செய்யலாம்.


சோதனையின் வரம்புகள் என்ன?


HbA1C சோதனை முக்கியமானது. ஆனால், இது மற்ற சோதனைகளை விட முற்றிலும் வேறுபட்டது. நீரிழிவு நோய் (diabetes) மற்றும் முன் நீரிழிவு நோயை (pre-diabetes) சரிபார்க்க பாரம்பரிய இரத்த சர்க்கரைக்கான சோதனைகள் போன்ற பிற சோதனைகள் மூலம் இதைச் செய்யலாம். HbA1C சோதனையானது நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய வழக்கமான இரத்த சர்க்கரை பரிசோதனைகளை மாற்றானது. இதை, உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருக்கலாம். ஏனெனில், இரத்த சர்க்கரை அளவு பகல் அல்லது இரவில் மாறலாம், மேலும் HbA1C சோதனை மூலம் இந்த மாற்றங்களைக் காட்டாது.


HbA1C சோதனை நீண்ட கால நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டை சரிபார்க்க இது உதவும். இருப்பினும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மருத்துவ குழுக்களும் இதை நோயறிதல் சோதனையாகப் பயன்படுத்துவதை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், சோதனையை தரப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக அதன் துல்லியம் மாறுபடும். ஒருவரைக் கண்டறியும் போது நன்றாகப் புரிந்துகொள்வதற்கு குளுக்கோஸ் சோதனை மற்றும் HbA1C சோதனை இரண்டையும் செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம். இருப்பினும்,  குறிப்பாக இந்தியாவில் கருத்தில் கொள்ள வரம்புகள் உள்ளன.  சோதனைக்கு வரம்புகள் இருக்கலாம், குறிப்பாக இந்தியாவில். நீரிழிவு தொழில்நுட்பம் (Diabetes Technology) மற்றும் சிகிச்சை முறைகள் (Therapeutics), இதழின் 2013 ஆய்வறிக்கையின்படி, சில மருத்துவ சூழ்நிலைகளில் துல்லியமான அளவீடுகள் கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டது. HbA1C அளவுகளில் மாறுபாடுகளுக்கான சில காரணங்கள் பின்வருமாறு: தலசீமியா (thalassemia) மற்றும் ஹீமோகுளோபினில் உள்ள கட்டமைப்பு மாற்றங்கள் (structural changes in hemoglobin) போன்ற சில மருத்துவ நிலைகள். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை (Iron-deficiency anemia), இது இந்தியாவில் மிகவும் பொதுவானதாக உள்ளது. மேலும், பரிந்துரைத்த குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது.


இந்தியாவின் சில பகுதிகளில், இந்த நிலைமைகள் ஒப்பீட்டளவில் அடிக்கடி நிகழும் காரணத்தால், ஒருவருக்கு HbA1c அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவர்களை கவனிக்க வேண்டியது அவசியம். இந்த சூழ்நிலைகளில், இரத்த சர்க்கரையின் கட்டுப்பாட்டை சரிபார்க்க வெவ்வேறு அளவீடுகளைப் பயன்படுத்துமாறு இந்த காட்டுரை மூலம் பரிந்துரைத்துள்ளது.




Original article:

Share: