தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவின் இருண்ட பக்கம் - எம்.கே.நாராயணன்

 2024 இல் உலகளவில் பல தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence (AI)) ஜனநாயகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.


செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் விரைவான முன்னேற்றம், மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த மாதிரிகளின் புதிய திறன்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன. இந்த மாதிரிகள் புதிய திறன்களைப் பெறுவதற்கான வேகம், மனித செயல்கள் மற்றும் சிந்தனை செயல்முறைகளை பிரதிபலிக்கும் திறன் கொண்ட, உருவாக்கும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு (Generative Artificial Intelligence (GAI)) செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)) உருவாகும் எதிர்காலத்தை குறிக்கிறது. செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்கள் மனிதகுலத்திற்கு புதிய புரட்சியை  கொண்டுவரும், மக்கள் உண்மை மற்றும் தவறான தகவல்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதை மாற்றும்.


செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள OpenAI இன் சாம் ஆல்ட்மேன் (Sam Altman) போன்ற பலர், இதை மிக முக்கியமான தொழில்நுட்பமாகப் பார்க்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் ஆதரவாளர்கள் இது பலரின் வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்தும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், செயற்கை நுண்ணறிவு மனித மதிப்புகளுக்கு எதிராக செல்லக்கூடும் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானதாக (‘existential risks’) இருக்கலாம் என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.


செயற்கை நுண்ணறிவு மற்றும் தேர்தல் நிலப்பரப்பு


இந்தியாவில் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில், மெக்ஸிகோ, இங்கிலாந்து (சமீபத்திய சாத்தியமான தேதி ஜனவரி 28, 2025) மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் 50 நாடுகளிலும் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தங்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றி கொள்கை வகுப்பாளர்களும் வாக்காளர்களும் கவனமாக சிந்திக்க வேண்டியது அவசியம். மாறும் உருவகப்படுத்துதல்களை உருவாக்கும் (dynamic simulation) மற்றும் நிஜ உலக தொடர்புகளைப் பிரதிபலிக்கும் (mimics real world interactions) உருவாக்கும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு (Generative Artificial Intelligence (GAI)) போன்ற புதிய தொழில்நுட்பங்கள், சவால்களைக் கொண்டுவருகின்றன. செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence (AGI)),  மனிதர்களைப் போலவே செயல்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது  இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இது நமது கவனத்தை ஈர்க்கும் தேர்தல்களின் கூடுதல் பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.


செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக உருவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (Generative Artificial Intelligence (GAI)) போன்ற புதிய மாதிரிகள், மக்கள் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்பதை மாற்ற முடியுமா என்பதை 2024 தேர்தல்கள் காட்டக்கூடும். ChatGPT, Gemini மற்றும் Copilot போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வாக்களிக்கும் நடத்தைகள் மற்றும் முடிவுகளை பாதிக்குமா என்பதை 2024 தேர்தல்கள் சோதிக்கும். இந்த தேர்தலுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்க போதுமான நேரம் இருக்காது என்றாலும், செயற்கை நுண்ணறிவு இன்னும் முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. 2024 இல் நடக்காவிட்டாலும், இந்தியாவிலும் உலகெங்கிலும் எதிர்கால தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவு பெரிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.


சமீபத்திய பியூ சர்வே (Pew Survey) பெரும்பாலான இந்தியர்கள் 'சர்வாதிகாரத்தை' (‘authoritarianism’) ஆதரிப்பதாகக் கூறுகிறது. இத்தகைய சூழலில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துபவர்கள் வாக்காளர்களை மேலும் குழப்புவதற்கு எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். உலகளவில் நடக்கவிருக்கும் 2024 தேர்தல்களை பலர் ஏற்கனவே 'டீப்  ஃபேக் தேர்தல்கள்' (‘Deep Fake Elections’) என்று அழைக்கின்றனர். இது முற்றிலும் துல்லியமாக இல்லாவிட்டாலும், ’டீப்  ஃபேக்’ தொழில்நுட்பத்தின் எழுச்சி தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர்களைக் குழப்பும் நோக்கில் புதிய பிரச்சார உத்திகள் உருவாகின்றன. இந்த போக்கு போலிகளின் பரவலை அதிகளவில் சாத்தியமாக்குகிறது.


செயற்கை நுண்ணறிவு கணிப்புத்தன்மையை நிவர்த்தி செய்தல்


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறான தகவல்களைப் பரப்பலாம் மற்றும் தவறான நம்பிக்கைகளை மிக எளிதாக வலுப்படுத்தலாம். தேர்தல்களில் தவறான தகவல்கள் புதியவை அல்ல என்றாலும், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு  கருவிகள் முன்பை விட வாக்காளர்களைக் குழப்பக்கூடும். வரவிருக்கும் 2024 தேர்தல்களில், செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அதிக அளவு தவறான தகவல்களை உருவாக்கும் மற்றும் இல்லாத விஷயங்களின் யதார்த்தமான படங்களையும் உருவாக்கும். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தகவல்களில் பெரும்பாலானவை தவறாக இருக்கும். இதில் வாக்காளர்களை திசை திருப்பும் மிக-யதார்த்தமாக (Hyper realistic) டீஃப் ஃபேக்குகள் (Deep Fakes)  இன்னும் பரவலாகிவிடும்.


செயற்கை நுண்ணறிவின் ஜனநாயகங்களை சீர்குலைக்கும் திறன் குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவின் சீர்குலைக்கும் தன்மையைப் பற்றி அறிந்திருப்பது மட்டும் போதாது. மக்கள் சிந்திக்கும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு உத்திகள் செல்வாக்கு செலுத்துவதை நிறுத்த ஜனநாயக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். செயற்கை நுண்ணறிவு வாக்காளர்களை  அதிக அவநம்பிக்கையடையச் செய்யலாம். எனவே, செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கை எதிர்கொளுவதற்காக,  நியாயமானவை மற்றும் சமநிலையானவை என்பதை உறுதிப்படுத்தும் அமைப்புகளைக் கொண்டிருப்பது முக்கியம்.  இந்த சவால்கள் மற்றும் செயற்கை பொது நுண்ணறிவின் திறன் இருந்தபோதிலும், பீதி அடையத் தேவையில்லை. செயற்கை நுண்ணறிவின் சில ஆபத்தான அம்சங்களைத் தணிக்க வழிகள் உள்ளன.


கூகுளின் AI தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட தவறுகளின் மீதான சமீபத்திய கவனம் ஒரு முக்கியமான எச்சரிக்கையை எடுத்துக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பொது செயற்கை நுண்ணறிவு எல்லா சூழ்நிலைகளிலும் கண்மூடித்தனமாக நம்பப்படக்கூடாது. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மக்கள், வேண்டுமென்றோ அல்லது இல்லாமலோ தனிநபர்களை எதிர்மறையான வெளிச்சத்தில் சித்தரிப்பதற்காக கூகுளின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் வருத்தமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டை மீறும் அபாயங்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவில் குறிப்பிடத்தக்க கவலை உட்பட உலகளாவிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் பல செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் தற்போதுள்ள முரண்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சமூகத்திற்கு உண்மையான ஆபத்துகளை எடுத்துக்காட்டுகின்றன 


பல செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இன்னும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளன மற்றும் நம்பமுடியாதவை, சமூகத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு மிகவும் பரவலாக மாறும்போது, இந்த அச்சுறுத்தல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, அதன் குறிப்பிடத்தக்க திறன் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவு நம்பமுடியாதது மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும்.


நாடுகள் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை அதிகம் நம்பியிருப்பதால், வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவின் 'மாயத்தோற்றங்கள்' (hallucinations) என்று அழைப்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். எளிமையாகச் சொன்னால், இந்த வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு, செயற்கை பொது நுண்ணறிவுடன் இணைந்து, சில நேரங்களில் நம்புவதற்கு கடினமான விஷயங்களை உருவாக்குகிறது என்று கூறுகிறார்கள்.  இது சில நேரங்களில் புதிய சிக்கல்களைத் தீர்க்க விஷயங்களைக் கண்டுபிடிக்கிறது. இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் நிச்சயமற்றவை மற்றும் துல்லியமானவை என்று கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. இந்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை அதிகமாக நம்புவது சிக்கலாக இருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது. செய்ற்கை நுன்ணறிவின் முடிவுகள் விரும்பிய அளவுக்கு நம்பகமானதாக இல்லாவிட்டாலும் கூட, செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை பொது நுண்ணறிவின்  வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது. 


செயற்கை நுண்ணறிவிலிருந்து  வரும் பிற கடுமையான அச்சுறுத்தல்களை நாம் புறக்கணிக்க முடியாது.  இது வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் சார்பை விட ஆபத்தானது. சில செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பாதகமான திறன்களை உருவாக்க முனைகின்றன. இந்த தீங்கு விளைவிக்கும் திறன்களின் முக்கிய வகைகள்: 'விஷமாக்குதல்' (poisoning’) - இது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அவற்றின் கணிப்புகளில் குறைவான துல்லியமாக்குகிறது; 'தவறான அணுகல்’ (‘back dooring’) - இது தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது; மற்றும் 'ஏய்ப்பு' (‘evasion’) - இது மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் உள்ளீடுகளை தவறாக வகைப்படுத்தி, அவர்களின் வேலையைச் சரியாகச் செய்வதைத் தடுக்கிறது. மற்ற சிக்கல்களும் இருக்கலாம். ஆனால் அவற்றை விரைவாக    பட்டியலிடுவது அவசியம் .


செயற்கை நுண்ணறிவை இந்தியா கையாளும் விதம் 


தேர்தல்களைத் தவிர, டிஜிட்டல்  துறையில் இந்தியா முன்னேறி வருவதால், செயற்கை நுண்ணறிவை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். செயற்கை நுண்ணறிவினால் நன்மைகள் இருந்தாலும், தேசமும் அதன் தலைவர்களும் சீர்குலைவுக்கான அதன் திறனைப் புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை பொது நுண்ணறிவுக்கு (Artificial General Intelligence (AGI)) குறிப்பாக இது உண்மை. மேலும் அவர்கள் எச்சரிக்கையுடன் தொடர வேண்டும்.  டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நிபுணத்துவம் சாதகமாகவும், அபாயகரமானதாகவும் இருக்கலாம். ஏனெனில், செயற்கை பொது நுண்ணறிவு நன்மைகளை வழங்கும் அதே வேளையில் தீங்கு விளைவிப்பதாகவும்இருக்கிறது.   


எம்.கே.நாராயணன் புலனாய்வு பணியகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் தேசியபாதுகாப்பு ஆலோசகர்.




Original article:

Share: