உண்மையான ஜனநாயக நாட்டிற்கான போராட்டத்தில், மியான்மரின் சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) மற்றும் பிற நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 9, 2021 அன்று, மியான்மரின் யாங்கூனில் உள்ள மிசிமாவின் தலைமையகத்திற்கு (Mizzima’s headquarters in Yangon) இராணுவ டிரக்குகள் வந்தன. பின்னர், ஜுண்டா இராணுவ ஆட்சிக்குழு படையினர் சுதந்திர ஊடகக் குழுவின் (independent media group) அலுவலகத்தை சோதனையிட்டு கொள்ளையடித்ததோடு அவர்கள் விரும்பிய பொருட்களை எடுத்துச் சென்றனர். இந்நகரில், நவம்பர் 2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பிப்ரவரி 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியான்மரின் சுதந்திரமான ஊடகங்களை நிறுத்த ஜுண்டா (junta) இராணுவ ஆட்சிக்குழு சட்டங்களை இயற்றியது.
கள நிலவரம்
மியான்மரில் பல பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டனர். அதனால், அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. மேலும், அவர்கள் அருகில் உள்ள நாடுகளுக்குச் சென்றனர் அல்லது மியான்மரில் ராணுவ அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்குச் சென்றனர். இதில், மியான்மருக்குள்ளேயே இருபது மில்லியனுக்கும் அதிகமான மியான்மர் குடிமக்கள் மற்றும் சுமார் 1.5 மில்லியன் அகதிகள் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல ஊடகவியலாளர்களின் இந்த வெளியேற்றமும் பெருமளவில் மக்களால் பிரதிபலித்தது. சுமார் 25 மில்லியன் மக்கள், மியான்மரின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வறுமையில் வாடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மியான்மர் மற்றும் அருகிலுள்ள நாடுகளில் பெரும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது.
மியான்மரின் சுதந்திரமான ஊடகம் இப்போது அண்டை நாடுகளில் உள்ளது. மியான்மரில் உள்ள மோதல் மியான்மரில் மட்டும் பிரதிபலிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும், இதில் பிரச்சனை முக்கியமாக பிராந்தியத்தை பாதிக்கிறது. இந்த சண்டை அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவி அவர்களுக்கு பாதுகாப்பற்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசம், சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற இந்த நாடுகளும் ஏராளமான அகதிகளை கையாள்கின்றன மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும். இந்த மோதல் அப்பகுதியில் வர்த்தக மற்றும் பொருளாதார இணைப்புகளுக்கான திட்டங்களையும் நிறுத்துகிறது.
மியான்மரில் சட்டம் சீர்குலைந்ததால் அதிக குற்றங்கள் நடந்துள்ளன. இது மியான்மர் மட்டுமின்றி, இந்த குற்றச் செயலால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளையும் பாதிக்கிறது.
நிலைத்தன்மைக்கான தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN) முயற்சிகள்
பிப்ரவரி 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, அமெரிக்கா, ஐக்கிய நாடுகளவை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிறர் மியான்மரில் மோதலைத் தீர்க்க உதவ தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பினை (Association of Southeast Asian Nations (ASEAN)) எதிர்பார்த்தனர். ஒரு மாதத்திற்கு பின்னர், தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பானது (ASEAN) ஜுண்டா இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர் (junta leader senior General) ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன் ஐந்து அம்ச திட்டத்திற்கு உடன்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மியான்மர் மோதலைத் தீர்ப்பதில் அல்லது பிராந்தியத்தை ஸ்திரப்படுத்துவதில் ஆசியான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையவில்லை. முன்னதாக தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புக்கு (ASEAN) தலைமை தாங்கிய இந்தோனேசியா, நெருக்கடியைத் தீர்க்க மியான்மரின் பங்குதாரர்களுடன் 260 க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியதாகக் கூறியது.
இதன் விளைவு என்னவென்றால், மியான்மரில் வன்முறையைத் தடுக்க தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் பிற நாடுகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மூன்று ஆண்டுகளில் இருந்ததை விட இன்று மோதல்கள் மோசமாக உள்ளன. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், மியான்மரின் பெரும்பாலான 330 நகரங்களில் 316 இல் சண்டை பதிவாகியுள்ளது. அவற்றில், 40% ஆளும் ஆட்சிக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லை. இராணுவ ஆட்சிக்கு சவால் விட சுமார் 600 எதிர்ப்பு குழுக்கள் உருவாகியுள்ளன. அக்டோபர் 2023 இல், இனப் படைகள் (ethnic forces) ஆபரேஷன் 1027 ஐத் தொடங்கின. இது, ஜுண்டா இராணுவ ஆட்சிக்குழுக்கு எதிரான ஒரு தாக்குதல் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை வெற்றிகரமாக சுமார் 200 இராணுவ முகாம்களைக் கைப்பற்றியது மற்றும் நான்கு எல்லை வாயில்கள் மீது கட்டுப்பாட்டைப் பெற்றது.
மியான்மர் மக்கள் இராணுவ ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இருப்பினும், மாநில நிர்வாக கவுன்சில் (State Administration Council (SAC) என்று அழைக்கப்படும் ஜுண்டா இராணுவ ஆட்சிக்குழு அதன் ஒடுக்குமுறையைத் தொடர்கிறது. அவர்கள், மியான்மர் மக்கள் மீது ராணுவ ஆட்சி கடுமையாக நடந்து கொள்கிறது. காரணமின்றி மக்களைக் கைது செய்கிறார்கள், காயப்படுத்துகிறார்கள், விசாரணையின்றி கொலை செய்கிறார்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களைத் தாக்குகிறார்கள்.
சுதந்திரமான ஊடகவியலாளர்கள்
வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், மியான்மரின் சுதந்திரமான ஊடகங்கள் தொடர்ந்து உண்மையை வெளியிட்டு வருகின்றன. மியான்மரின் சுதந்திரமான ஊடகங்கள் அண்டை நாடுகளில் உள்ள தளங்களில் இருந்து செயல்படுகின்றன. பத்திரிக்கையாளர்களையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாப்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாகும். மியான்மர் பிரஸ் கவுன்சிலை எதிர்கொள்வதற்காக இது ஒரு சுதந்திரமான பத்திரிகை கவுன்சிலை உருவாக்குகிறது, அது இனி அது செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படாது, அதற்கு பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ ஊழியர்களுடன் அரசு பிரச்சாரத்திற்கு ஊக்கமளிக்கும் பணியை வழங்குகிறது.
மியான்மர் மோதலைத் தீர்க்க உதவுமாறு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் அண்டை நாடுகளை உலகளாவிய அமைப்புகள் கேட்டுக் கொண்டன. இப்போது, அவர்கள் அதைக் கையாள முடியும் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், மியான்மர் மீது மட்டுமல்ல, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். இராணுவ ஆட்சியால் தில்லுமுல்லு செய்யப்படும் எந்தவொரு தேர்தல் முடிவுகளையும் ஏற்றுக்கொள்வது வன்முறையை மோசமாக்கும். அதற்கு பதிலாக, கொள்கை வகுப்பாளர்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இராஜதந்திரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பூர்த்தி செய்யும் ஒரு ஜனநாயக மியான்மரை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
மியான்மர் மோதலின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, கொள்கை வகுப்பாளர்கள் பிராந்தியத்தின் நலனுக்காக இராணுவ ஆட்சிக்குப் பிந்தைய உண்மையான ஜனநாயக மியான்மரை ஆதரிக்க வேண்டும். இது இராஜதந்திரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கவலைகள் உட்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் நலன்களுடன் ஒத்துப்போகிறது. இராணுவ ஆட்சிக்குப்பின் அமைதியான, நிலையான, வளமான மற்றும் ஜனநாயக மியான்மருக்கு மியான்மர் ஊடகவியலாளர்கள் மற்றும் மியான்மர் மக்கள் பாடுபடும் போது, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் பிற பங்குதாரர்களை ஆதரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
சோ மைன்ட் மியான்மரின் மிசிமாவின் நிறுவனர், தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.