கடந்த வாரம், இந்தியா டுடே மாநாட்டில் (India Today conclave) நிதியமைச்சர், 'கருப்பு' (‘black’) பணத்தை சட்டப்பூர்வ அரசியல் நன்கொடைகளாக மாற்றும் திட்டம், 'சரியானது அல்ல' (‘not perfect’) என்று ஒப்புக்கொண்டார்.
'மூத்த பத்திரிகையாளர்' ('veteran journalist') என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால் அது என்னை வயதானவராக உணர வைக்கிறது. ஆனால், நான் நீண்ட காலமாக பத்திரிகைத் துறையில் இருக்கிறேன். அதன் நன்மைகள் உள்ளன. நான் நிறைய வரலாறு மற்றும் தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். இது அரசியல் நிகழ்வுகளை தூரத்திலிருந்து பார்க்க உதவுகிறது. இதனால்தான் தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து எனக்கு ஒரு பார்வை உள்ளது. என்னை தவறாக எண்ண வேண்டாம், இந்த ஏமாற்று திட்டத்தை நான் பாதுகாக்கவில்லை. உச்ச நீதிமன்றம் பதில்களைக் கோரியது மற்றும் நன்கொடையாளர்களின் பெயர்களை அவர்களின் நன்கொடைகளுடன் பகிரங்கப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
'கறுப்பு' பணத்தை அரசியல் நன்கொடையாக மாற்றிய இந்தத் திட்டம் சரியானதல்ல என்று நிதியமைச்சர் சமீபத்தில் ஒப்புக்கொண்டார். ஆனால் முந்தைய அமைப்பு மோசமாக இருந்தது என்று அவர் சொல்வது சரிதான். நீண்ட காலமாக ஒரு பிரச்சினையாக இருந்த ஊழலைத் தடுக்க அது அதிகம் செய்யவில்லை.
1970கள் மற்றும் 1980களில் நடந்த தேர்தல்கள் எனக்கு நினைவிருக்கிறது. அதற்கும் சமீபத்தில், சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை பெரிய நன்கொடைகளை அளிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் வெற்றி பெற்றால் அதற்குப் பதிலாக உதவிகள் தருவதாக வாக்குறுதி அளித்தனர். அரசியல்வாதிகளின் வீடுகளிலும், அவர்களது கூட்டாளிகளின் வீடுகளிலும் பணப் பதுக்கல்கள் இன்னும் தவறாமல் காணப்படுகின்றன. இது இந்த நடைமுறை இன்னும் நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த பணம் பொதுவாக அழுக்காக இருக்கும். தேர்தல் பத்திரங்கள் அரசியல் நன்கொடைகளை வெளிப்படையானதாக மாற்றுவதற்காக இருந்தன. ஆனால் அவை செய்யவில்லை. அவர்கள் நினைத்தபடி கறுப்புப் பணத்தை தடுக்கவில்லை. மாறாக, கறுப்புப் பணத்தைக் கையாள்வதில் அரசியல் கட்சிகள் தூய்மையாக இருக்க ஒரு வழியைக் கொடுத்தனர்.
காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர்கள் பிஜேபியை விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் கடந்த காலத்தை மறந்துவிடுகின்றனர். 1970 மற்றும் 1980 களில், தேர்தல்களின் போது சோவியத் யூனியனில் இருந்து பணம் வருவதாக (suitcases of cash’) வதந்திகள் இருந்தன. இது உண்மையா என்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. பின்னர், கேஜிபி உளவாளி வாசிலி மிட்ரோகின் (Vasili Mitrokhin), இந்திரா காந்தியின் அமைச்சரவையில் சில உறுப்பினர்கள் கேஜிபி - யின் ஊதிய பட்டியலில் (KGB payroll) இருப்பதாக குறிப்பிட்டார். மிட்ரோகின் (Mitrokhin) வெளிப்பாடுகள், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எதிர்பார்க்கப்பட்ட சீற்றம் பலிக்கவில்லை. ஏனெனில் வெளிப்படுத்தல்கள் யாரையும் பாதுகாப்பாகப் பிடிக்கவில்லை.
இந்திய அரசியலில், தேர்தல் நிதி பெரும்பாலும் பணக்கார வணிகர்களிடமிருந்து பெறப்படுகிறது. நன்கொடைகள் சில சமயங்களில் ஒப்பந்தங்கள் அல்லது உதவிகளைப் பெறுவதுடன் தொடர்புடையது. தேர்தல் பத்திரங்கள் (election bonds) மூலம் நன்கொடைகள் வழங்குவதில் உள்ள கவலை என்னவென்றால், சிலர் சுற்றுச்சூழல் விதிகளை (evade environmental clearances) மீற முயற்சிக்கிறார்கள். மேலும், சில நன்கொடையாளர்கள் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) அல்லது வருமான வரித் துறை (income tax (I.T)) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுவதால், இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. அரசியல் நிதியுதவி மற்றும் ஒழுங்குமுறை எவ்வாறு ஒருவரையொருவர் பாதிக்கலாம் என்பதை இது காட்டுகிறது. தேர்தல்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.
உலகளவில், பணத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை உடைப்பது கடினம். ஆனால், சிறந்த கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளைக் கொண்ட நாடுகள் சிறப்பாக நிர்வகிக்கின்றன. இந்தியாவின் அரசியல் இன்னும் கருப்புப் பணத்தை நம்பியிருக்கிறது என்றால், அது பெரும்பாலும் நம் தலைவர்களின் தவறுதான். லஞ்சம் வாங்காமல் தொழிலதிபர்கள் வேலை செய்வதை எளிதாக்கினால், கறுப்புப் பணம் குறையும். இது ஏன் இன்னும் நடக்கவில்லை? அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல்களுக்கு மறைமுக நிதியிலிருந்து பயனடைவதால் இருக்கலாம்.
தேர்தல் பத்திரங்கள் உண்மையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக அல்ல, அதனால்தான் உச்ச நீதிமன்றம் கடுமையாக நிராகரிக்கிறது. விரைவில் நிலைமை மாறுமா? அநேகமாக இல்லை, ஏனென்றால் நமது அரசியல் அமைப்பில் ஊழல் மேலிருந்து கீழ் வரை நடக்கிறது. கிராமப்புறங்களில், உள்ளூர் தலைவர்கள் அதிகாரத்தை வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்படைக்கும் வரை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் மிகவும் லாபகரமானது. அவர்கள் மற்றவர்களின் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் மற்றும் அவற்றால் பயனடையும் கட்சிகளை வெளிப்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு முக்கியமான முதல் படியாகும். ஆனால் உண்மையான மாற்றத்திற்கு, நமது அரசியல் கலாச்சாரம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். நரேந்திர மோடி முதன்முதலில் பிரதமரானபோது, கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாம் நம்ப வேண்டும். ஏனென்றால் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற மாற்றம் தேவை. தேர்தலுக்கு கறுப்புப் பணத்தை நம்பியிருக்கும் நாடுகள் என்றென்றும் ஊழல் நிறைந்த அரசியலில் எப்போதும் சிக்கித் தவிக்கின்றன.