சுதந்திரமான, நியாயமான ஜனநாயக நடைமுறையை தேர்தல் ஆணையம் (Election Commission) உறுதி செய்ய வேண்டும்
18வது மக்களவைத் தேர்தல், ஏழு கட்டங்களாக, 44 நாட்கள் நடக்கிறது. தேர்தல் இறுதியில் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த அறிவிப்பு, தேர்தல் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இருப்பினும், இந்திய அரசியலில் பிரச்சாரம் எப்போதும் நடப்பதாகவே தெரிகிறது. ஆளும் பாஜக, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" (one nation, one poll) என்று நம்புகிறது. இது, ஒரே நேரத்தில் தேர்தல்கள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய கேள்விகள் நீண்ட காலமாக இழுக்கப்படும் தேர்தல் பருவத்திற்கான பின்னணியை உருவாக்குகின்றன. இது, உலகில் எங்கும் இல்லாத மிகப்பெரிய தேர்தலாகும். வலுவான ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் இந்தியாயை பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நாம் உற்று நோக்கினால், மேம்படுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. 2019 முதல், இந்தியா நல்ல வழிகளிலும் கெட்ட வழிகளிலும் நிறைய மாறி வருகிறது. பாஜக, இயற்கையாகவே, தனது இரண்டாவது ஆட்சியை அடைவதற்கு முன்னேற்றம் மற்றும் செழுமையின் காலமாக முன்வைக்க முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வலுவாக இல்லை. மற்ற கட்சிகள், ஊடகங்கள், அதிகாரத்துவம் மற்றும் வணிகங்கள் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்த பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் இந்த நியாயமற்ற நிலை பெரும்பாலும் ஏற்படுகிறது. சில பிரச்சனைகளால் எதிர்க்கட்சி பலவீனமடைந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியினரின் வங்கிக் கணக்கு பெரிய விஷயமல்ல என்றாலும், சிறு தவறு காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அமைப்புகள் எப்படி ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
தேர்தல் பத்திர திட்டம் (electoral bond scheme) இந்திய உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் நடைமுறையில் அதன் வெளிப்படைத்தன்மை குறைந்து வருவதை கவலையளிக்கும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission of India (ECI)) கடினமான பணி உள்ளது. தேர்தல் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால், ஒரு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உறுப்பினர் திடீரென வெளியேறியதால் அதில் இரண்டு பதவிகளை விரைவாக நிரப்ப வேண்டியிருந்தது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் சர்ச்சைக்குரியது. ஏனெனில், அரசியல் தலைவர்கள் அதன் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். இவ்வளவு நீண்ட தேர்தல் அட்டவணை தேவையா என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் (Electronic Voting Machines (EVMs)) பாதுகாப்பதில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நியாயமானதாக இருந்தாலும், அவர்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த இன்னும் கடுமையான நிபந்தனைகளை உருவாக்குவதன் மூலம் அதை உறுதிபடுத்த முடியும். நன்கொடையாளர்களின் தனியுரிமை உரிமைகளுக்கும் வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமைக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இந்த பிரச்சினையில் நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்ததன் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் தயங்கக்கூடாது. இந்தியாவின் தேர்தல் ஆணையம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக செயல்முறையை மதிப்பிடும்போது அனைவரும் அதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.