கர்நாடக அரசு பொது சுகாதாரத்தை பாதுகாக்க உணவகங்கள் மற்றும் பார்களுக்கு தடை விதித்தது. இந்த தடை சட்டவிரோதமானது என்று உணவகங்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஹூக்கா பார்கள் தீ பாதுகாப்பு விதிகளை மீறுவதாகவும், உணவை பாதுகாப்பற்றதாக மாற்றுவதாகவும் அரசாங்கத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த, விதிகளை மீறுபவர்கள் 2003 ஆம் ஆண்டின் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் (Cigarettes and Other Tobacco Products Act of 2003 (COTPA)) கீழ் மாநில மற்றும் தேசிய சட்டங்களுடன் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அது கூறுகிறது.
பிப்ரவரி 20ம் தேதி கர்நாடக அரசு ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா ஹூக்கா பார்களை "எந்த இடத்திலும்" திறப்பதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பிற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது. மறுநாள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் மூலம், மாநிலத்தில் ஹூக்கா பார் (hookah bar) திறக்கும் எவருக்கும் 1 முதல் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த அறிவிப்பிற்குப் பிறகு, பல உணவக உரிமையாளர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் தங்கள் வழக்கை பிப்ரவரி 13 அன்று தொடங்கினர். இதன் தீர்ப்பு மார்ச் 11 அன்று ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக அறிவிப்பை உணவக உரிமையாளர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
ஆர் பரத், தலைமை மனுதாரர்ரானவர், இந்த அறிவிப்பானது "சட்டவிரோத தலையீடு" (illegal interference) என்று கூறினார். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (COTPA) பொது புகைபிடித்தல், புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துதல் மற்றும் சிறார்களுக்கு விற்பனை செய்வதை மட்டுமே தடை செய்கிறது என்று அவர் விளக்கினார். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் (COTPA) பிரிவு 4 இன் கீழ் நியமிக்கப்பட்ட புகைபிடிக்கும் பகுதியில் (designated smoking area) ஹூக்கா புகைத்தல் அனுமதிக்கப்படுகிறது. அதாவது, அது தடை செய்யப்படவில்லை என்பதை மனு எடுத்துக்காட்டுகிறது.
கர்நாடக சுகாதாரத் துறை (Karnataka health department) சட்டப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், பரத் தனது தொழிலை சட்டப்பூர்வமாக நடத்த தேவையான அனைத்து வர்த்தக உரிமங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19(1)(g) பிரிவின் கீழ் வணிக உரிமையாளர்களின் உரிமைகளை இந்த அறிவிப்பு மீறுவதாக அவர் கூறுகிறார். மேலும், இந்தக் கட்டுரை குடிமக்களுக்கு எந்த வேலையையும் செய்ய அல்லது எந்த வியாபாரத்தையும் நடத்துவதற்கான உரிமையையிம் வழங்குகிறது.
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் மற்ற புகையிலை மற்றும் நிகோடின் சார்ந்த பொருட்களைப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஹூக்கா செயல்பாடுகளை குறிவைத்து, அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் சமத்துவத்திற்கான உரிமையை தடையை மீறுகிறது என்றும் தனி மனுதாரர்கள் கூறினர்.
இந்த காரணங்களால், அரசின் அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கோருகின்றனர். தங்கள் வணிகங்களில் மாநில அரசு தலையிடுவதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹூக்கா தடையை கர்நாடக அரசு எப்படி நியாயப்படுத்தியது?
“பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரம்; மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்” மாநில பட்டியலின் (State List) கீழ் வருவதால், இந்த அறிவிப்பை வெளியிட தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மாநில அரசு கூறியது. அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் நுழைவு 6 இன் கீழ். மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மீது மாநில சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்றலாம்.
அரசாங்கமானது, அரசியலமைப்பின் 162 வது பிரிவைப் பயன்படுத்தியது. இந்த பிரிவு, சட்டமன்றத்தால் சட்டங்களை இயற்றக்கூடிய பகுதிகளில் மாநில அரசுகளுக்கு "நிர்வாக அதிகாரத்தை" (executive power) வழங்குகிறது. இதன் பொருள் ஹூக்கா விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்வதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடலாம்.
மேலும், அரசியலமைப்பின் 47 வது பிரிவை அரசாங்கம் குறிப்பிட்டது. இது "மருத்துவ நோக்கங்களுக்காக போதை தரும் பானங்கள் (intoxicating drinks) மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களைத் தவிர நுகர்வுகளைத் தடைசெய்ய முயற்சிக்கும்" அரசாங்கத்தின் மீது கடமையாக வைக்கிறது.
அரசியலமைப்பு பிரிவு 47 என்பது அரசியலமைப்பின் கீழ் "அரசு கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கை" (directive principle of state policy) ஆகும். இவை மாநிலங்களுக்கும், ஒன்றியத்திற்கும் சட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாகச் செயல்படுகின்றன. ஆனால், அவை மீறப்பட்டால் குடிமக்களுக்கு எதிராகச் செயல்படுத்த முடியாது.
மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற ஹூக்கா தடை உள்ளதா?
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்திற்கு (COTPA) கர்நாடகா திருத்தம் பிரிவு 4A என்ற புதிய விதியை சேர்த்துள்ளது. இதில், ஒரு உணவகம் அல்லது பார் போன்ற எந்த இடத்திலும் ஹூக்கா பார்களை யாரும் தனக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ திறக்கவோ அல்லது நடத்தவோ முடியாது என்று கூறுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் முறையே 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஒரே மாதிரியான திருத்தங்களை நிறைவேற்றின. தமிழ்நாடு சட்டமன்றம் 2022 இல் அதே திருத்தத்தை இயற்றியது, இது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.