தவறான கொள்கை : கர்நாடகாவின் ‘உள்ளூர் மக்களுக்கு வேலை’ மசோதா குறித்து

 உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் கர்நாடக மசோதாவானது தவறான முன்னூதாரணமாக அமைகிறது.


உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என நிரூபிக்கப்பட்டு நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும், மாநில அரசாங்கங்கள் சொந்த மாநில மக்களின் உணர்வுகளைப் (nativist sentiment) பூர்த்தி செய்வதற்கான சோதனையை இன்னும் உணர்கிறது. தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான கர்நாடகா மாநில வேலைவாய்ப்பு மசோதா (Karnataka State Employment of Local Candidates in the Industries, Factories and Other Establishments Bill), 2024-க்கு காங்கிரஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், கர்நாடகாவில் தொழில்துறை தலைவர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அது "தற்காலிகமாக நிறுத்தப்பட்டது". இதில், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளில் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும் என்று மசோதா முன்மொழிந்ததுடன், நிர்வாகம் அல்லாத பணியிடங்களில் 70% உள்ளூர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். கூடுதலாக, உள்ளூர் மக்களை வரையறுப்பதற்கான மசோதா கடுமையான அளவுகோல்களை அமைத்துள்ளது. 2019-ல் ஆந்திரப் பிரதேசத்திலும், 2020-ல் ஹரியானாவிலும், 2023-ல் ஜார்கண்டிலும் இதேபோன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளூர் மக்களின் தகுதியை வரையறுப்பதற்கான அளவுகோல்களில் ஒன்றாக கர்நாடக மசோதா கன்னடத்தில் தகுதி பெற்றிருந்தாலும், ஹரியானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சட்டங்கள் பெரும்பாலும் குடியிருப்பதற்கான அளவுகோல் அடிப்படையாக இருந்தன.  பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 2023-ஆம் ஆண்டில் ஹரியானா சட்டத்தை ரத்து செய்தது, இது அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்தையும், அரசியலமைப்பின் பிரிவு 19-ன் கீழ் சுதந்திரத்தையும் மீறுவதாகக் கூறியது. இச்சட்டம் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரானது. அத்தகைய சட்டங்களை இயற்றும் மாநிலங்கள் இந்தியா முழுவதும் "செயற்கை சுவர்களை" (artificial walls) உருவாக்க முடியும். ஆந்திரப் பிரதேச சட்டம் இன்னும் நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்படுகிறது. ஜார்கண்ட் மசோதா இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மேற்கூறிய காரணங்களைத் தவிர, கர்நாடக மசோதா, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் பிரிவு 16(3)-ஐயும் மீறுகிறது. ஆனால், அது பொது வேலைவாய்ப்பை மட்டுப்படுத்துகிறது மற்றும் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தால் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும், மாநில சட்டமன்றத்தால் அல்ல.


உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஒதுக்கி, உள்ளூர் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் மசோதாக்களை உருவாக்க கர்நாடக அரசு முற்படுகிறது. இந்த மசோதாக்கள் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கலாம். இதற்குப் பின்னால் உள்ள ஆர்வம், வளர்ந்த மாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை பறிப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். தனியார் துறையில் வேலை தேடுபவர்களுக்கு இது குறிப்பாக உண்மையின் வெளிப்பாடாகும். சில முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுரண்ட முற்படுகின்றனர். குறைந்த ஊதியத்திற்கு இந்த தொழிலாளர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்கிறார்கள். இதனால், தொழிலாளர்களுக்கு சலுகைகள் அல்லது சமூக பாதுகாப்புகள் இல்லை. கூடுதலாக, உள்ளூர் தொழிலாளர்கள் பெறும் அரசியல் ஆதரவு அவர்களுக்கு கிடைப்பதில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே தொழிலாளர் சந்தையைப் பிரிப்பது குறித்து கர்நாடகா கவலைப்பட்டால், அது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தொழிலாளர் உரிமைகளையும் அமல்படுத்த வேண்டும். சுரண்டல் நடைமுறைகளை நிறுத்துவதன் மூலம், அது அனைவருக்கும் நியாயமான நிலைமைகளை உறுதிப்படுத்த முடியும். உள்ளூர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதும், குறுகிய மனப்பான்மையுடன் இருப்பதும் தீர்வாகாது.



Original article:

Share: