அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? -ராகுல் கர்மாகர்

 ஒருவர் இந்தியரா என்பதை இந்த தீர்ப்பாயங்கள் எப்படி முடிவு செய்கின்றன? இதற்கு எல்லைப்புற  காவல் துறை உதவுமா?


ஜூலை 5-ஆம் தேதி அன்று, அஸ்ஸாம் மாநில அரசாங்கம் 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லீம் அல்லாதவர்களின் வழக்குகளை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு (Foreigners Tribunals (FTs)) அனுப்புவதை நிறுத்துமாறு மாநில காவல்துறையின் எல்லைப்புற  பிரிவுக்கு அறிவுறுத்தியது. இந்த முடிவு 2019-ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்தம்)சட்டத்தைப் (Citizenship (Amendment) Act of 2019) பின்பற்றுகிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறப்படும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் போன்ற முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 


வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners Tribunals (FTs)) எப்படி உருவாகின ?


வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் 1946-ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் (Foreigners (Tribunals) Order of 1964) ஒரு பகுதியாக, 1964-ஆம் ஆண்டின் வெளிநாட்டினர் (தீர்ப்பாயம்) ஆணையின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு சட்ட அமைப்புகளாகும். வெளிநாட்டினர் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இந்த தீர்ப்பாயங்களுக்கு அனுப்ப ஒரு மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை அவை அனுமதிக்கின்றன. தற்போது, ​​தீர்ப்பாயங்கள் அசாமில் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற மாநிலங்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" ("illegal immigrants") வழக்குகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு தீர்ப்பாயங்களும் ஒரு நீதிபதி, வழக்கறிஞர் அல்லது நீதித்துறை அனுபவமுள்ள குடிமை பணி அதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது. 


2021-ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் அசாமில் 300 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், மாநில உள்துறை  இணையதளத்தின் படி, தற்போது 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் மட்டுமே செயல்ப்பபட்டு வருகின்றன. முதல் 11 தீர்ப்பாயங்கள் 2005-ல், 1983-ஆம் ஆண்டின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் (தீர்ப்பாயங்கள் மூலம் தீர்மானித்தல்) சட்டத்தை  (Illegal Migrants (Determination by Tribunals) Act of 1983) ரத்து செய்வதற்கு முன் நிறுவப்பட்டன.


எல்லைப்புற காவல்துறையின் பணி என்ன?


அஸ்ஸாம் எல்லை காவல் நிறுவனம் (Assam Police Border Organisation) 1962-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஊடுருவல் தடுப்பு (Prevention of Infiltration of Pakistani (PIP)) திட்டத்தின் கீழ் மாநில காவல்துறையின் சிறப்புப் பிரிவின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. இது 1974-ல் ஒரு சுதந்திரப் பிரிவாக மாறியது. இப்போது காவல்துறையின் சிறப்பு இயக்குநர் தலைமையில் செயல்ப்பட்டு வருகிறது. பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பிறகு, பாகிஸ்தானின் ஊடுருவல் தடுப்பு திட்டம் வெளிநாட்டினரின் ஊடுருவலைத் தடுப்பது ((Prevention of Infiltration of Foreigners (PIF)) என மறுபெயரிடப்பட்டது. 


வெளிநாட்டினரின் ஊடுருவலைத் தடுக்கும் திட்டத்தின் ((Prevention of Infiltration of Foreigners (PIF)) கீழ் இந்த பிரிவுக்கான 4,037 பதவிகளில் 3,153 பதவிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் அசாம் அரசு 884 பதவிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த பிரிவின் உறுப்பினர்கள் சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டறிந்து நாடு கடத்துகின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இந்தியா-வங்காளதேச எல்லையில் ரோந்து செல்கின்றனர். குறிப்பாக, நதிக்கரை மற்றும் கரி (சாண்ட்பார்) பகுதிகளில் சட்டவிரோத நுழைவுக்கு எதிராக இரண்டு அடுக்கு பாதுகாப்பு   வழங்குகின்றனர். ஆவணங்களின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை தீர்மானிக்க சந்தேகத்திற்குரிய குடியுரிமை வழக்குகளை தீர்ப்பாயங்களுக்கு அனுப்புகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் 'D'  அல்லது சந்தேகத்திற்கிடமான வாக்காளர்களை தீர்ப்பாயங்களுக்கு பரிந்துரைக்கலாம். மேலும், ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு  தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) வரைவில் இருந்து விலக்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தீர்ப்பாயங்களிடம் முறையிடலாம். 3.3 கோடி விண்ணப்பதாரர்களில் சுமார் 19.06 லட்சம் பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens (NRC))  இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


ஒரு வெளிநாட்டு தீர்ப்பாயம்  எவ்வாறு செயல்படுகிறது?


1964-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, ஒரு உரிமையியல் நிதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்களை ஒரு வெளிநாட்டு தீர்ப்பாயம் கொண்டுள்ளது. அது மக்களை வரவழைத்து, அவர்களை உறுதிமொழியின் கீழ் சாட்சியமளிக்கச் செய்யலாம் மற்றும் ஆவணங்களைக் கோரலாம். ஒரு அதிகாரி வெளிநாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு பரிந்துரைக்கும் போது, ​​தீர்ப்பாயம் 10 நாட்களுக்குள் ஆங்கிலத்திலோ அல்லது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியிலோ அறிவிப்பை அனுப்ப வேண்டும். நபர் பதிலளிக்க 10 நாட்களும், அவரது வழக்கை ஆதரிக்கும் ஆதாரங்களை வழங்க மற்றொரு 10 நாட்களும் உள்ளன. ஒரு வழக்கை தீர்ப்பாயத்தின் பரிந்துரையைப் பெற்ற 60-நாட்களுக்குள் முடித்து வைக்க வேண்டும். அந்த நபரால் குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால், வெளிநாட்டு தீர்ப்பாயங்கள் அவர்களை ஒரு தடுப்பு மையத்திற்கு (detention centre) அனுப்பலாம். இது தற்போது அகதிகள் முகாம் (transit camp) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படலாம் (deportation).  


சில தீர்ப்பாயகங்களின் ஆணைகள் ஏன் விமர்சிக்கப்படுகிறது ? 


ஜூலை 11 அன்று, உச்ச நீதிமன்றம் 12-ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த  விவசாயி ரஹீம் அலியை வெளிநாட்டவராக அறிவித்த தீர்ப்பாயத்தின் முடிவை இரத்து செய்தது. நீதிமன்றம் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்தது. வெளிநாட்டினர் சட்டமானது, அதிகாரிகளைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமிருந்து குடியுரிமைச் சான்றிதழைக் கோருவதை அனுமதிக்காது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.  


செப்டம்பர் 2018-ல், மத்திய அஸ்ஸாமின் மோரிகானில் உள்ள ஒரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இலாபம் ஈட்டும் முயற்சியாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார். சில சமயங்களில் மரங்கள் அல்லது மின்கம்பங்கள் போன்ற பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்படுவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான வழக்கு பற்றி தெரியாமல் இருப்பதை வெளிநாட்டு தீர்ப்பாயத்தின்  உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.



Original article:

Share: