இந்தியாவில் சுமார் 2.5 இலட்சம் பஞ்சாயத்துகள் மற்றும் 8,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (urban local bodies (ULBs)) உள்ளன. அவற்றின் தணிக்கையில் நல்ல நடைமுறைகளை மேம்படுத்தி அவற்றின் திறனை வளர்ப்பதற்கு உதவ வேண்டும் என்று தலைமைத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு முன்பு கூறியிருந்தார்.
இந்தியாவின் தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) கிரிஷ் சந்திர முர்மு, ஜூலை 18-அன்று ராஜ்கோட்டில் உள்ளாட்சித் தணிக்கைக்கான சர்வதேச மையத்தை (International Centre for Audit of Local Governance (iCAL)) திறந்து வைத்தார். தலைமைத் தணிக்கை அலுவலகத்தின் தரவு படி, இந்தியாவில் இது போன்ற முதல் நிறுவனம் இதுவாகும். ராஜ்கோட்டில் உள்ள பொது கணக்காளர் (கணக்கு மற்றும் உரிமை மற்றும் தணிக்கை-1) அலுவலகத்தில் இருந்து இது செயல்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகளுக்கான சர்வதேச தணிக்கை தரநிலைகளை மேம்படுத்துவதே இதன் இலக்காகும்.
உள்ளூர் ஆளுகைக்கான சர்வதேச தணிக்கை மையம் (International Centre for Audit of Local Governance (iCAL)) எப்படி வேலை செய்யும்?
தலைமைத் தணிக்கை அலுவலகத்தின் தரவு படி, iCAL என்பது கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றும் தணிக்கையாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கும். நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, சேவைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன மற்றும் தரவுகள் எவ்வாறு தெரிவிக்கப்படுகின்றன என்பதை மேம்படுத்துவதற்கு உள்ளூர் அரசாங்க தணிக்கையாளர்களின் சுதந்திரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. iCAL உள்ளூர் அரசாங்க தணிக்கையாளர்களுக்கு அவர்களின் திறன்கள் மற்றும் அறிவை வளர்ப்பதற்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தும்.
தணிக்கையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அதிகாரம் அளிப்பதே அவர்களின் குறிக்கோள். iCAL ஒரு அறிவு மையமாகவும் சிந்தனைக் குழுவாகவும் செயல்படும், பயிற்சிப் பட்டறைகள், அறிவுப் பகிர்வு மற்றும் சக பரிமாற்றங்கள் மூலம் அடிமட்ட அளவில் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும். குஜராத்தின் முதன்மை கணக்காளர் ஜெனரல் (தணிக்கை-I) தினேஷ் பாட்டீல், உள்ளாட்சித் தணிக்கைக்கான சர்வதேச மையத்தின் (International Centre for Audit of Local Governance (iCAL)) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு தணிக்கை செய்யப்படுகின்றன?
இந்தியாவின் நிர்வாக அமைப்பு மூன்று நிலைகளில் செயல்படுகிறது: ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஆகும். கிராமப்புறங்களில், கிராமம், தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் போன்ற பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (Panchayati Raj Institutes) சுயாட்சியைக் கையாளுகின்றன. நகரப் பகுதிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
முர்முவின் கூற்றுப்படி, உள்ளூர் அரசாங்கங்கள் அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நிவர்த்தி செய்கிறார்கள். உள்ளூர் அரசாங்கங்களும் அடிமட்ட அளவில் வளர்ச்சித் திட்டங்களுக்கான திட்டமிடலை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், கணக்குகளைப் பராமரிப்பது அவர்களின் கடமையாகும். ஆனால், பல மாநில அரசாங்கங்கள் இந்தக் கணக்குகளைத் தணிக்கை செய்ய உள்ளூர் நிதிக் கணக்குகளின் தேர்வாளர் (Examiner of Local Fund Accounts (ELFA)) அல்லது உள்ளூர் நிதிக் கணக்குகளின் இயக்குநரை (Director of Local Fund Accounts (DLFA)) நியமிக்கின்றன. உதாரணமாக, குஜராத்தில், உள்ளூர் நிதிக் கணக்குகளின் தேர்வாளர் (ELFA) நிதித் துறையின் கீழ் சுதந்திரமாக செயல்படுகிறது.
மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி உள்ளாட்சி அமைப்புகளால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ELFA தணிக்கை செய்கிறது. இதேபோல், பல்கலைக்கழகங்கள் போன்ற பிற நிறுவனங்கள் தங்கள் தணிக்கைகளை நடத்துகின்றன. இதற்கிடையில், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் உட்பட அனைத்து நிதிகளையும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் தணிக்கை செய்கிறது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலைகளிலும் சரியான கணக்கு பராமரிப்பு மற்றும் தணிக்கைகளை இது மேற்பார்வை செய்கிறது. அதன் தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு முன்முயற்சியின் மூலம், ELFA அல்லது உள்ளூர் நிதிக் கணக்குகளின் இயக்குநருக்கு தலைமை தணிக்கை அலுவலகம் ஆலோசனை மற்றும் உதவி, அவர்களின் தணிக்கை முயற்சிகளை மேம்படுத்துகிறது.
இந்தியாவில் 2.5 லட்சம் பஞ்சாயத்துகள் மற்றும் 8,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) இருப்பதாக ஜனவரி மாதம் ராஜ்கோட் வருகையின் போது முர்மு குறிப்பிட்டார். 40 நாடுகள் தங்கள் உச்ச தணிக்கை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளை தணிக்கை செய்வதை, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகளவில் வரும் நிதி மற்றும் முழுமையான தணிக்கையின் அவசியத்தை தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் வலியுறுத்தியது. இந்த அமைப்புகளுக்கு போதுமான நிதி கிடைக்காதது மற்றும் அது எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய கவலைகள் தொடர்கின்றன. 2022-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, பல நகராட்சிகள் வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிக்கின்றன மற்றும் உண்மையான செலவினங்களை மதிப்பாய்வு செய்கின்றன. ஆனால் பணப்புழக்க மேலாண்மைக்கு தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளைப் பயன்படுத்துவதில்லை. இதனால் நிதி பகிர்வில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடந்த சர்வதேச தணிக்கையாளர் மாநாட்டில், உலகளவில் தணிக்கையாளர்களிடையே சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உச்ச தணிக்கை நிறுவனங்களை (supreme audit institutions (SAIs)) நிறுவன ரீதியாகவும் சர்வதேச தணிக்கை அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை தலைமைத் தணிக்கையாளர் வலியுறுத்தினார். ஒரு கூட்டுத் தளம் உள்ளூர் அரசாங்கங்களில் தணிக்கை நடைமுறைகளை மேம்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
தணிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க ஊழியர்களின் நிதி மேலாண்மை நடைமுறைகள் மற்றும் உள் கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்துவதன் அவசியத்தை தலைமைத் தணிக்கையாளர் வலியுறுத்தினார். தணிக்கைகளை எளிதாக்குவதற்கும், தணிக்கை கண்டுபிடிப்புகளை நிவர்த்தி செய்வதில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் உள்ளூர் அதிகாரிகளுடன் திறந்த தொடர்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். ராஜ்கோட்டில் உள்ள உள்ளூர் ஆளுகைக்கான சர்வதேச தணிக்கை மையம் இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) கிரிஷ் சந்திர முர்மு விளக்கினார்.