சுற்றுச்சூழல் விளைவு அறிக்கையின் (environmental impact report) ஒரு பகுதியாக காலநிலை மாற்றத்தைச் சேர்ப்பதற்கான நேரம் -ரம்யா கண்ணன்

 2030 முதல் 2050 ஆம் வரையில், காலநிலை மாற்றம் ஆண்டுக்கு 2.5 லட்சம் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாக, மாறிவரும் காலநிலையிலிருந்து தெளிவான மாற்றங்களை புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக, நாம் மீண்டும் மீண்டும் வெப்பத்தின் உச்சநிலையை சந்தித்து வருகிறோம். இதில், கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் இரண்டும் கலந்து மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், கடுமையான மற்றும் அழிவுகரமான வெள்ளத்தை ஏற்படுத்தும் புயல்களை  எதிர்கொண்டு வருகிறோம். இந்த புயல்கள் பரந்த நகர்ப்புறங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கூடுதலாக, சில சமயங்களில் நாம் மிகவும் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்கிறோம். காலநிலை மாற்றம் மனித வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் தெளிவாக பாதிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் காலநிலை மாற்றம் நல்ல ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய கூறுகளைப்  பாதிப்படையச் செய்கிறது என்று கூறுகிறது. சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், சத்தான உணவு வழங்கல், பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவை இதில் அடங்கும். காலநிலை மாற்றம் உலகளாவிய ஆரோக்கியத்தில் பல பத்தாண்டுகால முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திறன் கொண்டது.


மேலும், 2030 மற்றும் 2050க்கு இடையில், காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அழுத்தத்தால் மட்டும் ஆண்டுக்கு 2,50,000 கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஆரோக்கியத்திற்கான நேரடி செலவுகள் வருடத்திற்கு $2 முதல் $4 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைவான, சுகாதார உள்கட்டமைப்பு உள்ள பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக கருதப்படுவதால், இந்த பிராந்தியங்கள் பெரும்பாலும் வளரும் நாடுகளில் உள்ளன. இதில், தேவையான அடிப்படை கூறுகளை தயார் செய்து சமாளிக்கும் அளவுக்கு திறன் குறைவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.   


உலகளாவிய காலநிலை நெருக்கடி மோசமடைவதால், மனித ஆரோக்கியத்தில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளும் அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த தாக்கங்களிலிருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை, ஆனால் மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இன சிறுபான்மையினர், சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் வறுமையில் வாழ்பவர்கள் மிகவும் ஆபத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Sri Ramachandra Institute of Higher Education and Research (SRIHER)) பொது சுகாதார நிபுணர்களால்  சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  அதிக வெப்பத்தில் பணிபுரிவது கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில், இவர்கள் முன்னர் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டனர்.


காலநிலைத் தடம் (Climate footprint)


இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நன்பர்கள் என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் என்பவரால் ஒரு குறிப்பிடத்தக்க பொது நல வழக்கு (public interest litigation) பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் கூறும் கருத்து எளிமையானது மற்றும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடுகள் (Environmental impact assessments (EIA)) காலநிலை மாற்றத்தின் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான கட்டுமானம் அல்லது மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடுகள் தேவை என்பதாகும்.


மனுதாரர் இந்த பிரச்சினையில் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டின் (environmental impact assessment (EIA)) காலநிலை மாற்றம் ஏன் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் விளக்கினர். இதற்கான தேவை மிகவும் எளிமையானது. ஒரு குடியிருப்புக்கு அருகில் இரசாயன தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்யப்படும் என்று சுந்தராஜன் விளக்குகிறார். இந்த மதிப்பீடு தொழிற்சாலை சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அளவிடும். இது நீர், மண் மற்றும் ஒலி மாசுபாடு ஆகியவற்றைக் கவனிக்கும்.  


காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பிடும்போது, கட்டுமானத்தின் முதல் நாள் முதல் தொழிற்சாலையின் ஆயுள் முடியும் வரை ​​அதன் விளைவுகளை ஆரம்பத்தில் இருந்தே மதிப்பீடு செய்ய வேண்டும். கார்பன் தடம் (carbon footprint), பசுமை இல்ல வாயு உமிழ்வு (emissions of greenhouse gases) மற்றும் அருகிலுள்ள சமூகங்களின் ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்பைக் குறைக்க சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த திட்டத்தை ஆவணமாக அரசுக்கு சமர்ப்பிக்கவும். அனுமதி வழங்கலாமா என்பதை முடிவு செய்வதற்கு முன் அரசு அதை மறுபரிசீலனை செய்யும். 


சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பிரிவு அமர்வு இந்த மனு நியாயமானது என்று கூறியது. இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டனர். காலநிலை மாற்றத்தை இனி புறக்கணிக்க முடியாது என்ற உலகளாவிய அங்கீகாரத்தை இது எடுத்துக்காட்டுவதால், இந்த வழக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக மாறும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தயாரிப்பதற்கும் குறைப்பதற்கும் பல நாடுகள் ஏற்கனவே சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த நாடுகளில் பஹாமாஸ், பிரான்ஸ், சிலி, அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படும் இந்தியாவும் சட்டங்களை உருவாக்க வேண்டும். இந்தச் சட்டங்கள் சுற்றுச்சூழல் ஆதாயங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மேலும் சேதத்தைத் தடுக்க வேண்டும். 



Original article:

Share: