தாமதமான லா நினா : இது இந்திய பருவமழையை பாதிக்குமா? -அஞ்சலி மாரார்

 பல உலகளாவிய வானிலை மாதிரிகள் லா நினா விரைவில் தோன்றும் என்று கணித்துள்ளன. லா நினா அமைப்பு இந்தியாவில் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் அல்லது அதற்குப் பிறகு லா நினா தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 லா நினா (La Niña) என்பது பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை அவ்வப்போது குளிர்விப்பதாகும். முன்னதாக, லா நினா ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று வானிலை மாதிரிகள் கணித்தன. இருப்பினும், இது செப்டம்பர் அல்லது அதற்குப் பிறகு உருவாகும் என்று சமீபத்திய தரவு காட்டுகிறது.


லா நினா என்பது இந்தியாவில் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவைச் சாதகமாகக் கொண்ட காலநிலை வடிவமாகும். இது எல் நினோ தெற்கு அலைவின் (El Nino Southern Oscillation (ENSO)) மூன்று கட்டங்களில் ஒன்றாகும்.


ENSO என்றால் என்ன?


எல் நினோ தெற்கு அலைவு (ENSO) என்பது ஒரு காலநிலை நிகழ்வு ஆகும். இது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் வளிமண்டலத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இணைந்துள்ளன. ENSO-ஆனது உலகளாவிய வளிமண்டல சுழற்சியை மாற்றியமைக்கலாம். இது உலகளவில் வானிலையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகிறது.  ENSO மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது - வெப்பம் (எல் நினோ), குளிர் (லா நினா) மற்றும் நடுநிலை. இது 2 முதல் 7 ஆண்டுகள் வரை மாறுபட்ட சுழற்சிகளால் நிகழ்கிறது.


நடுநிலையான கட்டத்தில், பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) மேற்குப் பக்கத்தை விட (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில்) குளிர்ச்சியாக இருக்கும். காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, வெப்பமான மேற்பரப்பு நீரை இந்தோனேசிய கடற்கரையை நோக்கித் தள்ளுவதே இதற்குக் காரணம். இடம்பெயர்ந்த நீரை மாற்றுவதற்கு கீழே இருந்து குளிர்ந்த நீர் மேலே வருகிறது.


எல் நினோ (El Niño) கால கட்டத்தில், இந்த காற்று அமைப்புகள் வலுவிழந்து, வெப்பமான நீரின் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, பசிபிக் கடலின் கிழக்குப் பகுதி வழக்கத்தைவிட வெப்பமாகிறது. லா நினா கட்டத்தில், இதற்கு நேர்மாறாக நடக்கும்.


சமீபத்திய, எல் நினோ நிகழ்வு ஜூன் 2023 முதல் மே 2024 வரை நீடித்தது, அதே சமயம் லா நினா நிலைகள் 2020 மற்றும் 2023-க்கு இடையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீடித்தது. இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் லா நினா தோன்ற இருப்பதாக உலக வானிலை மாதிரிகள் கணித்தன. இருப்பினும், ENSO-நடுநிலை நிலைமைகள் தொடர்கின்றன. பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் நினோ 3.4 பகுதியில் வெப்பமான சூழல் நிலவி வருகிறது.


லா நினா பற்றி மாதிரிகள் என்ன சொல்கின்றன?


தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) லா நினா தாமதமாக தோன்றுவதை உறுதி செய்துள்ளது. நடுநிலையிலிருந்து நேர்மறை கடல் மேற்பரப்பு வெப்பநிலைக்கு மாறுவது ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் லா நினாவை நோக்கி நடுநிலையான ENSO செல்லக்கூடும்  என்று குறிப்பிட்டது. ஜூலை 11 அன்று அதன் ENSO புதுப்பிப்பில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை லா நினா அமைப்பு தொடரும் என்று கணித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வடக்கு அரைக்கோளத்தில் நீண்ட காலம் நீடிக்கும்.


இந்த ஆண்டின் பிற்பகுதியில் பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தை விட குளிர்ச்சியான சூழல் நிலவும் கடல் மேற்பரப்பில் நிலவும் என்று கணித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உலக கடல் மேற்பரப்பின் வெப்பநிலை மிக உயர்ந்த அளவில் இருந்தது என்று ஆஸ்திரேலியாவில் உள்ள வானிலை ஆய்வுப் பணியகம் (BoM) அதன் சமீபத்திய ENSO அறிக்கையில் லா நினா 'கணிப்புகள்' நிலையைப் பற்றி தெளிவாக விவரித்துள்ளது. 


செப்டம்பர் வரை ENSO நடுநிலை நிலைமைகள் நிலவும் என்று கூறியது. அதன் பிறகு, லா நினா சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், "செப்டம்பர்-ஜனவரியில் லா நினா அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த சூழல் நவம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும் என்று ஹைதராபாத்தில் உள்ள கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National Centre for Ocean Information Services (INCOIS)) ஜூலை 5- ஆம்  தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


இது இந்திய பருவமழையை பாதிக்குமா?


இந்த ஆண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூன் முதல் செப்டம்பர் வரை 'இயல்பான அளவுக்கு மேல்' மழைப் பொழிவு இருக்கும் என்று கணித்துள்ளது. பருவகால மழைப்பொழிவு நீண்டகால சராசரியான 880 மிமீ (1971 முதல் 2020 வரையிலான பதிவுகளின் அடிப்படையில்) 106%-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்து நாட்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் இந்த மழை நம்பிக்கைக்குரியதாக உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழை நாட்டின் பருவ மழையில் கிட்டத்தட்ட 70% ஆகும். செப்டம்பரில் லா நினா நிலைமைகள் தோன்றினாலும், வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கைக்கான எந்த காரணத்தையும் காணவில்லை.


லா நினாவின் தாமதமான வருகை இந்தியாவில் பருவமழையை எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை கணிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி நீடித்தது. நாட்டிலிருந்து தென்மேற்கு பருவமழை முழுமையான பின்வாங்கல் அக்டோபர் நடுப்பகுதி அல்லது அதற்குப் பிறகு நீடிக்கும். பருவமழையின் கடைசி மாதமான தட்பவெப்ப நிலையின்படி செப்டம்பர் மாதத்திற்குள் லா நினா நிலைமைகள் தோன்றினால், இந்த இறுதிப் பருவமழை மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். செப்டம்பரில் பெய்யும் மழை பருவ மழையில் 15% ஆகும்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், தென்மேற்குப் பருவமழை, வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கும் வரை நீடித்தது. 2024-ல் இந்த  சூழல் மீண்டும் நிகழலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த காலங்களில், இரண்டு பருவமழைகளுக்கு இடையில் இடைவெளி இல்லாததால், இது போன்ற நீட்டிக்கப்பட்ட மழை பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.



Original article:

Share: