டிரம்ப் நிர்வாகத்தை தெற்காசிய நாடுகள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் சீனா மற்றும் இந்தியாவையும் எப்படி சமப்படுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
2025 ஜனவரியில், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வருவது பல நாடுகளில் ஆர்வத்தையும் சில நாடுகளில் பதட்டத்தையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், தெற்காசியாவில், டிரம்ப் தொடர்ச்சியாக மாற்றங்களை கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது யோசனைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகள் தெற்காசியாவில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். அதே சமயம், அவரது தலைமைப் பாணியும், முடிவெடுக்கும் முறையும், அவர் உலக அரசியலை எப்படி நிர்வகிக்கிறார் என்பதை வடிவமைக்கும். இது புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் கொண்டுவரும்.
அமெரிக்க-இந்திய உறவின் காரணிகள்
2000களின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. 2009-ல், அமெரிக்கா இந்தியாவை நிகர-பாதுகாப்பு வழங்குநராக (net-security provider) அங்கீகரித்தது, பிராந்தியத்தில் அதன் தலைமையை ஒப்புக் கொண்டது. பைடன் நிர்வாகம் (2021-24) இதே அணுகுமுறையைப் பின்பற்றியது. சீனா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், இந்தியாவும் அமெரிக்காவும் தெற்காசியாவில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. இந்தோ-பசிபிக் ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம், சீனாவை எதிர்ப்பதற்கும் மதிப்புகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் தலைமையை ஆதரிப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. நேபாளத்தில் மிலேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (Millennium Challenge Corporation (MCC)) திட்டங்களில் அவர்கள் இணைந்து பணியாற்றுவதிலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதிலும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு காட்டப்படுகிறது. கூடுதலாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிபர் பைடன் வரையறுக்கப்பட்ட உறவு வைத்திருந்தார். இது இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படவும், பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட பார்வையை வளர்க்கவும் உதவியது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதில் இந்தியாவின் முக்கிய குறிக்கோள், சீனாவை எதிர்கொள்வது மற்றும் மாற்று வளர்ச்சி கூட்டாண்மைகளை வழங்குவதாகும். இருப்பினும், பைடன் நிர்வாகம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சில நாடுகளில் கவனம் செலுத்தியது. அதே, நேரத்தில் மதிப்புகள் அடிப்படையிலான ஒழுங்கை ஆதரிப்பதாகவும் சீனாவை எதிர்ப்பதாகவும் கூறுகிறது.
இந்தியா வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கத்தை ஆதரித்தது மற்றும் மியான்மரின் இராணுவ ஆட்சியுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கிடையில், அமெரிக்கா இரு அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்தது மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்தது, அவற்றை சீனாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. மேலும், ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றும் இந்திய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் அதானி குழுமத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இலங்கையில் இரண்டு இந்தியத் திட்டங்களை தோல்வியடையச் செய்தன. அதனால் ஏற்படும் விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள சூழல் ஏற்பட்டது.
குறைவான சிக்கல்கள் இருக்கலாம்
இருப்பினும், அதிபராக டிரம்ப் மீண்டும் பதவி ஏற்பது இந்தப் பிரச்சனைகளை குறைக்கும். அவரது முதல் பதவிக்காலத்தில், அவர் சுமைப் பகிர்வு, பரஸ்பரம் (reciprocity), தேசியவாதம் மற்றும் தனது வெளியுறவுக் கொள்கையில் சீனாவுடன் போட்டியிடுவதைக் தெரிவித்தார். டிரம்ப் இதைப் பின்பற்றினால், மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் தேசத்தை மீண்டும் உருவாக்குவதற்கு குறைவான முக்கியத்துவத்தைக் கொடுக்கும் அதே வேளையில் சீனாவை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துவார். இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து, பிராந்தியத்தில் இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் விரும்புவார். இது கருத்து வேறுபாடுகளைக் குறைத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும். மற்றொரு, பிரச்சினை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மீதான அவர்களின் கொள்கைகளாகும்.
தனது முதல் பதவிக் காலத்தில், ஆப்கானிஸ்தான் நெருக்கடியைத் தீர்ப்பதில் இந்தியா ஒரு தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அதே வேளையில், டிரம்ப் பாகிஸ்தானுக்கு தண்டனை அளித்து ஒத்துழைத்தார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வெளியேறிய பிறகு ராஜதந்திர முக்கியத்துவம் குறைந்தது. இந்த விவகாரம் இப்போது கவலைக்குரியதாக இல்லை.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், திறன் மேம்பாடு, மேம்பாட்டு உதவி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் தெற்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். சீனாவை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவை ஆதரிப்பது என்ற அவரது இலக்குகளின் காரணமாக இந்த அணுகுமுறை தொடரும். டிரம்ப் ஜனநாயகம், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் அவரது முதல் பதவிக்காலத்தைப் போலவே சிறிதளவு கவனம் செலுத்துவது இலங்கைக்கும் பயனளிக்கும். இலங்கையின் புதிய அரசாங்கம் இன்னமும் பொருளாதார உதவியை நாடுவதுடன் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த அணுகுமுறை மியான்மர் மற்றும் தலிபான்களுக்கும் பயனளிக்கும். இருப்பினும், வாஷிங்டன் அவர்களை எந்த அளவிற்கு ஈடுபடுத்த விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மறுபுறம், வங்காளதேசம் தனது புதிய ஆட்சியின் கீழ் ஒரு அரசியல் மாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் வேலையில் நாடு சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் உதவி குறைக்கப்படுவதைக் காணலாம்.
சீனாவும் பிராந்தியமும்
டிரம்பின் சீனாவுடனான மோதல் அணுகுமுறை தெற்காசிய நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். அவரது ஒழுங்கற்ற முடிவுகளைக் (erratic decisions) கருத்தில் கொண்டு, வாஷிங்டன் தெற்காசிய நாடுகள் ஒரு பெரிய சக்திக்கு எதிராக மற்றொரு வல்லரசுக்கு எதிராக செயல்படுவது சகிப்புத்ததன்மையை குறைக்கும். பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் பிரச்சனைகள் மற்றும் முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பற்றிய தெளிவற்ற நிலைப்பாடு ஆகியவை பரஸ்பரம் பெறுவதற்கு அமெரிக்காவிடம் இருந்து அதிக அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், டிரம்ப் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவருவதிலும், மேற்கு ஆசியாவின் நெருக்கடியைத் தீர்ப்பதிலும் வெற்றி பெற்றால், அது போராடும் தெற்காசியப் பொருளாதாரங்களுக்கு உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கத்தை சமாளிக்க உதவும்.
உலகம், ட்ரம்ப் 2.0-க்கு தயாராகும் போது, தெற்காசியா பல்வேறு மாற்றங்களை சந்திக்கும். இருப்பினும், இப்பகுதி தொடர்ச்சியாக மாற்றம் காண வாய்ப்புள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் தெற்காசியாவில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரித்து, தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் சித்தாந்தம், தலைமைத்துவ பாணி மற்றும் உலகளாவிய அதிகாரத்தை நிர்வகிப்பதற்கான அணுகுமுறை ஆகியவை பிராந்தியத்திற்கு வாய்ப்புகள் மற்றும் சவால்களை கொண்டு வரும். புதிய நிர்வாகத்தை தெற்காசிய நாடுகள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் சீனா மற்றும் இந்தியாவையும் எப்படி சமப்படுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஹர்ஷ் வி.பந்த், Observer Research Foundation (ORF)-யில் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான துணைத் தலைவராக உள்ளார். ஆதித்யா கௌடரா சிவமூர்த்தி, Observer Research Foundation (ORF)-யில் இணை ஆய்வாளராக உள்ளார்.