முக்கிய அம்சங்கள் :
1. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவானது, தேசிய மற்றும் மாநில அளவில் பேரிடர் தொடர்பான தரவுத்தளங்களை உருவாக்க முன்மொழிகிறது. இது, மாநில தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சிகள் உள்ள பெரிய நகரங்களுக்கு நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (Urban Disaster Management Authority) அமைத்தல் மற்றும் மாநில அரசுகள் மாநில பேரிடர் மீட்பு படையை (State Disaster Response Force) அமைத்தல் தொடர்பான மசோதாவாகும்.
2. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், ‘இந்த மசோதா தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பில் தெளிவு மற்றும் சீரான தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றார்.
3. இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலியுறுத்திய அவர், "பேரிடர் என்பது எந்தவொரு கட்சிக்கும் அல்ல, இது எந்தவொரு நபருக்கும் அல்ல, இது எந்த பகுதிக்கும் அல்ல. ஒரு பேரிடர் தாக்கும்போது, அது முழு நாட்டையும் தாக்குகிறது" என்றார்.
4. இந்த மசோதாவை எதிர்த்த திமுக உறுப்பினர் கனிமொழி, "இந்த மசோதா இந்த அவைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு அதிக கலந்தாய்வுகள், கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் தேவை" என்று கூறினார். பேரிடர் மேலாண்மை என்பது மாநில விவகாரம் என்று கூறிய அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான மசோதாக்களைப் போலவே, இந்த மசோதாவும் மாநிலங்களின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக, தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் கூட்டுறவு கூட்டாட்சி என்பது உண்மையில் மோதல் கூட்டாட்சியாக மாறிவிட்டது” என்று கருத்து தெரிவித்தார்.
5. இந்த மசோதா பேரிடர் நிவாரணத்தை 'நியாயப்படுத்தக்கூடிய உரிமையாக' (justiciable right) உறுதி செய்யத் தவறிவிட்டது. மிச்சாங் புயலால் (cyclone Michaung) தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர் உதவிக்காக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது.
6. இந்த மசோதாவை ஆதரித்த தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சிவநாத் (சின்னி) கூறுகையில், ‘அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்களை நிவர்த்தி செய்ய இது சரியான நேரத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும்’ என்றார்.
பேரிடர் தொடர்பான தகவல்கள் பற்றி :
1. பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024 ஆகஸ்ட் 1, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. இந்த மசோதா பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ஐ திருத்துகிறது.
3. சட்டம் அதிகாரங்களை நிறுவுதல் : (i) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA), (ii) மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority (SDMA)), மற்றும் (iii) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (District Disaster Management Authority) போன்ற மூன்று அதிகார ஆணையங்களை அமைக்கிறது.
4. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக்கு இந்த அதிகாரிகள் பொறுப்பு.
5. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மாநில மேலாண்மை ஆணையம் (SDMA) ஆகியன செயல்பட உதவும் வகையில் தேசிய நிர்வாகக் குழு (National Executive Committee) மற்றும் மாநில நிர்வாகக் குழுவை (State Executive Committee) அமைக்க இச்சட்டம் வகை செய்கிறது.
6. இந்த குழுக்களின் முக்கிய செயல்பாடு முறையே தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை திட்டங்களை தயாரிப்பதாகும்.
7. NDMA மற்றும் SDMA ஆகியவை தங்களுக்குரிய திட்டங்களை அங்கீகரித்து, அவற்றைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கின்றன.
8. NDMA மற்றும் SDMA ஆகியவை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கும் என்று மசோதா கூறுகிறது.
9. இந்த மசோதா மாநில தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சியுடன் கூடிய நகரங்களுக்கு ஒரு தனி நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. நகர்ப்புற அதிகாரசபையில் நகராட்சி ஆணையர் தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் துணைத் தலைவராகவும், மாநில அரசால் குறிப்பிடப்பட்ட பிற உறுப்பினர்களும் இருப்பார்கள்.
10. பேரிடர் காலங்களில் சிறப்பு முறையில் செயல்படுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையை (National Disaster Response Force) அமைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
11. இந்த மசோதா மாநில பேரிடர் மீட்புப் படையை (State Disaster Response Force (SDRF)) அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) செயல்பாடுகளை மாநில அரசு வரையறுத்து அதன் உறுப்பினர்களுக்கான சேவை தொடர்பான விதிமுறைகளை பரிந்துரைக்கும்.
12. தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (National Crisis Management Committee (NCMC)) மற்றும் உயர்நிலைக் குழு (High Level Committee (HLC)) போன்ற தற்போதுள்ள அமைப்புகளுக்கு இந்த மசோதா சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய அளவில் தீவிரமான அல்லது தேசிய அளவிலான பெரிய பேரழிவுகளை எதிர்கொள்ளும் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படும். பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு உயர்நிலைக் குழு நிதி உதவி வழங்கும்.
13. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையானதாகக் கருதும் அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களை ஒன்றிய அரசு வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.