முக்கிய அம்சங்கள் :
1. குறிப்பிடத்தக்க ஏற்றுமதி ஆதாயங்கள் எதிர்பார்க்கப்படும் நாடுகளில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதனால்தான், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதல் உள்ளது. பங்குதாரர்கள் நாட்டிற்கு அதிக சந்தைக்கான அணுகலை வழங்கினாலும், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை எந்த நாடும் பின்பற்றவில்லை.
2. இதற்கான முயற்சியை ஆதரிக்க, வணிக அமைச்சகம் ஒரு புதிய நிலையான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure (SOP)) உருவாக்குகிறது. எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான செயல்முறைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
3. இது பிப்ரவரி 2022-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் (pact with the UAE) மற்றும் 2010-ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்புகளுடன் (ASEAN) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் உட்பட பல வர்த்தக ஒப்பந்தங்களைப் பின்பற்றுகிறது. இதன் விளைவாக ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக இறக்குமதியும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆரம்பகால விதிகளை மீறுவது குறித்த கவலைகளை எழுப்புகிறது.
4. கரிம எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, நிலைத்தன்மை குறித்த எந்தவொரு விவாதமும் 'பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் (Common but Differentiated Responsibilities (CBDR))' கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்துவது பல்வேறு வளர்ச்சிப் பாதைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.
5. 2022-23ஆம் ஆண்டில், இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தகம் 16 சதவீதம் அதிகரித்து 20.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 11.4 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 10.5 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், அதன் இறக்குமதி 2021-22ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 2022-23ஆம் ஆண்டில் 8.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குத் தெரியுமா?
1. இந்தியாவும் இங்கிலாந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஜனவரி 2022-ம் ஆண்டில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Free Trade Agreement (FTA)) பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளிட்ட 26 அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23ஆம் ஆண்டில் 20.36 பில்லியனிலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 21.34 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
2. கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)), அல்லது கார்பன் வரி (carbon tax), ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், எஃகு, சிமென்ட், உரம், அலுமினியம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற ஏழு கார்பன்-தீவிரத் துறைகளில் உள்ள நிறுவனங்கள், தரவைப் பகிர வேண்டும். அக்டோபர் 1, 2023 முதல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கார்பன் உமிழ்வு தொடங்குகிறது.
3. ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, இங்கிலாந்தும் கார்பன் உமிழ்வின் அடிப்படையில் உலோக இறக்குமதிக்கு வரி விதிக்க விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய பாணியிலான கரிம எல்லை சரிசெய்தல் செயல்முறை (carbon border adjustment mechanism (CBAM)) இந்தியா கணிசமான கட்டணங்களை நீக்கினாலும் இங்கிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும். இங்கிலாந்தின் கார்பன் வரி கடுமையானதாக இருக்கலாம். ஏனெனில், அதன் நோக்கங்களில் ஒன்று ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும்.
4. பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் எஃகு, கண்ணாடி மற்றும் உரம் போன்ற கார்பன்-தீவிரமான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட CBAM, வரி பற்றி இந்தியா கவலைகளை எழுப்பியது. இந்த வரியானது இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கும் இந்திய எஃகு உற்பத்தியாளர்களை பாதிக்கும்.
5. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டணி அமைப்பாகும். இது, 2021-ம் ஆண்டில், அவர்களுக்கு இடையேயான வர்த்தகம் 88 பில்லியன் யூரோக்கள் அல்லது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 10.8% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 10-வது பெரிய வர்த்தக நட்பு நாடாக இந்தியா உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த வர்த்தகத்தில் 2.1% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சேவைகளின் வர்த்தகம் 2020-ம் ஆண்டில் 30.4 பில்லியன் யூரோக்களை எட்டியது.
6. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)), பொருளாதார சிந்தனைக் குழுவானது, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற, அதன் ஒப்பந்தங்களை உலகளாவிய முதலீட்டு நடைமுறைகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தீவிரமான உடன்படிக்கை ரத்துகளால் ஏற்படும் எதிர்மறையான உணர்வை அது நிவர்த்தி செய்து அதன் பேச்சுவார்த்தை திறன்களை மேம்படுத்த வேண்டும். 2016-ம் ஆண்டிற்குள் இந்தியா தனது 80-க்கும் மேற்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் (Bilateral Investment Treaties (BIT)) 77 இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) தரவு குறிப்பிட்டது.
7. ஒரு தயாரிப்பின் தேசிய மூலத்தைத் தீர்மானிக்கும் தோற்ற விதிகள், இங்கிலாந்து உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுக்களில் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்த விதிகள் முக்கியமானவை. ஏனெனில், நாடுகள் அவற்றின் வளங்களின் அடிப்படையில் தயாரிப்புகளுக்கு வரிகள் அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. கூடுதலாக, இந்திய வர்த்தகம் மற்றும் வரித்துறை அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்து மதுபானம் மற்றும் விஸ்கி இறக்குமதிக்கான வரி குறைப்புகளை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகள் உள்ளூர் பாட்டில் தொழிலை பாதிக்கலாம். இதனால், பேச்சுவார்த்தை வேகம் குறைந்துள்ளது.
8. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக அமைப்பு (EFTA) நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பகுதியாக இல்லை. EFTA என்பது தடையில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் தீவிரப்படுத்தும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். ஐரோப்பிய சமூகத்தில் சேர விரும்பாத மாநிலங்களுக்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டது. ஏப்ரல்-பிப்ரவரி 2022-23ல் EFTA நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 1.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2021-22ல் 1.74 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2021-22ல் 25.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதிகள் 11 மாத காலப்பகுதியில் மொத்தம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வர்த்தக இடைவெளி EFTA குழுவிற்கு சாதகமாக உள்ளது.