மோடியும் மேக்ரானும் சந்திக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சவால்கள் - சி.ராஜ மோகன்

 வழக்கமாக இந்தியாவையும்,  பிரான்ஸையும் இணைக்கும் 'இராஜதந்திர சுயாட்சி' (strategic autonomy) மற்றும் 'பன்முக உலகம்' (multipolar world) போன்ற பாரம்பரிய கருத்துக்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான கேள்விகளையும் நாம்   கருத்தில் கொள்ள வேண்டும். 


பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் இந்திய வருகை வெறும் ஆடம்பரத்தின் காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா? இரு தலைவர்களும் சில எழுச்சியூட்டும் விழாக்களால் பயனடையலாம். தற்போது, தனது அதிபர் பதவியை புதுப்பிக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ள மேக்ரான், இந்தியாவில் தனக்கு கிடைத்துள்ள அன்பான வரவேற்பில் நிம்மதியாக இருப்பார். மேக்ரானுக்கு ஜெய்ப்பூரில் உள்ள அரச ராஜ்புதானா வரவேற்பு (royal Rajputana welcome) பிரான்சில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பிரான்சில் அதிபர் பதவி இயல்பிலேயே குடியரசு கட்சியாகும்.  ஆனால் ஏகாதிபத்திய பாணியில் உள்ளது.


உள்நாட்டில் வலுவான ஆதரவை அனுபவித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, மேக்ரானின் வருகை மேற்கத்திய தலைவர்களிடமிருந்து நடந்து வரும் உயர்மட்ட அரசியல் ஈடுபாட்டைக் குறிக்கிறது. தாராளவாத ஆங்கிலோ-சாக்சன் ஊடகங்கள் (liberal Anglo-Saxon media) மோடியின் கோயில் திட்டத்தை விமர்சிப்பதாலும், இந்தியா மதச்சார்பின்மையிலிருந்து விலகிச் செல்வதையும் உணரும் நிலையில் இது குறிப்பாக பொருத்தமான நிகழ்வாக உள்ளது. எவ்வாறாயினும், மேற்கத்திய புவிசார் அரசியல் நலன்களை ஊடகங்களின் தாராளவாத சித்தாந்தத்தின் வெளிப்பாட்டுடன் குழப்பத்துடன் இல்லாமலிருப்பது முக்கியம். இதைத் தவிர, பிரெஞ்சுக்காரர்கள், கிழக்கில் இருந்தாலும் சரி, மேற்கில் இருந்தாலும் சரி, மதச்சார்பின்மையில் அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்கள்.


ஆனால் உண்மையான சாதனைகள் என்ன? கடந்த ஜூலை மாதம் பாஸ்டில் தின கொண்டாட்டங்களுக்காக (Bastille Day celebrations) மோடி, பாரிஸ் சென்றிருந்தபோது இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அடுத்த 25 ஆண்டுகளில் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடுவானம் 2047 (Horizon 2047) என்ற லட்சிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தினர்.


வெறும் ஆறு மாதங்களில் இதுபோன்ற பரந்த செயல் திட்டத்தை (expansive agenda) விரிவுபடுத்துவது சவாலானது. ஆனால் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்க வேண்டும். கொள்கையளவில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி என்ன? உதாரணமாக, இந்தியா 26 ரஃபேல் மரைன் விமானங்களை (Rafale Marine aircraft) வாங்குவது, மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை (Scorpene submarines) உருவாக்குவது அல்லது ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தை (jet engine technology) இந்தியாவுக்கு மாற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளது.


இந்த ஒப்பந்தங்களில் அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை முன்னெடுப்பதில் கடந்த ஆறு மாதங்களில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது தெளிவாக இல்லை. அமெரிக்காவைப் போலன்றி, பிரான்ஸ் அரசாங்கமும் ஒப்பந்தங்களை திறமையுடன் நிறைவேற்றக்கூடிய ஒரு வலுவான நிர்வாகியைக் கொண்டுள்ளது. இந்தியாவில், மோடி அரசாங்கமானது, வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னர், தற்போதைய பதவிக்காலத்தின் கடைசி நாள் வரை முக்கிய சில காரியங்களை செய்து முடிக்க முடியும்.


பயணத்தின் உறுதியான முடிவுகளைப் பொருட்படுத்தாமல் மோடியும், மேக்ரானும் சிந்திக்க வேண்டிய சில சவால்கள் உள்ளன.  பாரிசில் நடந்த கடைசி கூட்டத்திற்கு பின்னர் பிராந்திய மற்றும் சர்வதேச போக்குகள் மாறிவிட்டன. அவர்களின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த  இது வலியுறுத்துகிறது. டெல்லி மற்றும் பாரிஸை கருத்தியல் ரீதியாக பிணைக்கும் பாரம்பரிய "இராஜதந்திர சுயாட்சி" (strategic autonomy) என்ற பாரம்பரிய முழக்கத்திற்கு அப்பால் இரு தலைவர்களும் செல்லவும் இது உதவும். 


சர்வதேச சூழ்நிலையில் மூன்று குறிப்பிடத்தக்க மாற்றங்கள் முக்கியமானவை. முதலாவதாக, ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் எதிர்த்தாக்குதல் குறைந்துள்ளது. இது ஐரோப்பாவில் போர் மற்றும் அமைதி குறித்த கேள்வியை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்ததுடன்.  சமீபத்திய அனுமானங்கள் கூட இப்போது மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.


இரண்டாவதாக, ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த மத்திய கிழக்கு இப்போது தீவிரமான பதட்டங்களை அனுபவித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல் நடத்திய குறிப்பிடத்தக்க பதிலடி ஆகியவை பிராந்தியத்தில் ஒரு பரந்த போருக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன. உலக வர்த்தக பாதையான ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் கப்பல்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.


மூன்றாவதாக, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள், வாஷிங்டனில் புதுப்பிக்கப்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் கொள்கைகளின் தீவிரமான திசைதிருப்பல் பற்றிய அச்சத்தை உருவாக்கியுள்ளன. அமெரிக்க உள்நாட்டு அரசியல் இன்று சர்வதேச விவகாரங்களில் ஒரு முக்கிய மாறுபாடாக மாறியுள்ளது. 


அமெரிக்காவின் புதிய இயக்கத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதில் ஐரோப்பா ஒரு குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறது. அட்லாண்டிக் இராணுவ கூட்டணி வட அட்லாண்டிய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization(NATO)) நோக்கி வாஷிங்டனில் புதுப்பிக்கப்பட்ட விரோதம் குறித்த கவலை உள்ளது. உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ ஆதரவு வழங்குவதற்கு குடியரசுக் கட்சி காட்டும் எதிர்ப்பு மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள டிரம்ப் விருப்பம் காட்டுவது ஆகியவற்றால் ஐரோப்பா கலக்கமடைந்துள்ளது. 


பிரதமர் மோடி, டிரம்புடன் ஒரு நல்ல உறவைக் கொண்டிருந்தாலும், டிரம்பின் பிராந்திய மற்றும் உலகளாவிய கொள்கைகளின் பல்வேறு விளைவுகளைக் கையாள்வதில் இந்தியா சவால்களை எதிர்கொள்ளும். காலநிலை மாற்றத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், அமெரிக்காவிற்கான அனைத்து இறக்குமதிகள் மீதும் சுங்கவரிகளை விதிக்கவும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள கூட்டாளிகளுடன் மறுபேச்சுவார்த்தை நடத்தவும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். இவரின் நடவடிக்கை இந்தியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


இதற்கிடையில், டிரம்பின் ’அமெரிக்காவுக்கு முதலிடம்’   கொள்கைகள் (America First policies) இந்தியாவையும் பிரான்சையும் பிணைக்கும் இரண்டு நீண்டகால யோசனைகளை சோதிக்கும். அதில், ஒன்று பன்முக உலகம் (multipolar world) என்ற கருத்தாக்கம், மற்றொன்று இராஜதந்திர சுயாட்சி (strategic autonomy) பற்றிய யோசனை.


ரஷ்யாவும் சீனாவும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே, 1990 களின் பிற்பகுதியில், பிரான்ஸ் ஒரு பன்முக உலகத்திற்காக (multipolar world) வாதிட்டது. பிரான்ஸ் தலைவர்கள், அமெரிக்காவை ஒரு கட்டுப்பாடற்ற "வல்லரசு" (hyperpower) என்று கருதி, அமெரிக்க ஒருதலைப்பட்சத்தின் அபாயங்களைக் கட்டுப்படுத்த கூட்டணிகளுக்கு அழைப்பு விடுத்தனர். ஒற்றை துருவ உலகம் (unipolar world) குறித்த கவலைகளை பகிர்ந்து கொண்ட இந்தியா, அமெரிக்காவால் ஏற்படக்கூடிய தீங்கு குறித்து கவலை கொண்டுள்ளது. காஷ்மீர் மீதான அமெரிக்க நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் குறிக்கோள் இந்தியாவின் கவலைகளை உறுதிப்படுத்தியது. இதற்கு மாறாக, உலக அணுசக்தி நிலையில் (global nuclear order) இந்தியாவை ஒருங்கிணைப்பது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று பிரான்ஸ் நம்பியது. 1998 இல் இந்தியாவின் அணுவாயுத சோதனைகளுக்குப் பிறகு, ரஷ்யா உட்பட ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையின் (United Nations Security Council) மற்ற உறுப்பினர்களிடமிருந்து அணுவாயுதப் பரவல் தடுப்பு அழுத்தங்களை திசைதிருப்புவதில் பாரிஸ் இந்தியாவை ஆதரித்தது. சமீபத்தில், 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையில் (United Nations Security Council) காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்குவதற்கான சீனாவின் முயற்சியை பிரான்ஸ் உறுதியாக தடுத்தது.


இந்தியா மற்றும் பாரிஸ் ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலும் இராஜதந்திர சுயாட்சி என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை (independent foreign policy) பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அமெரிக்காவிடமிருந்து அரசியல் இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட பல விஷயங்களை இது அடையாளப்படுத்தியுள்ளது.


எவ்வாறாயினும், அமெரிக்கா அதன் விரிவான சர்வதேச அங்கீகாரத்தைக் குறைத்தாலும், குறிப்பாக ட்ரம்பின் சாத்தியமாக உள்ள இரண்டாவது பதவிக்காலத்தில், இந்த கருத்துக்கள் பொருந்தமானதாக இருக்குமா?. இருப்பினும், அமெரிக்காவின் அதிகாரம் வீழ்ச்சியடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உள்நாட்டு அரசியலானது அமெரிக்காவை பல்வேறு துறைகளில் பின்வாங்க நிர்பந்திக்கலாம். 


அமெரிக்காவின் புவிசார் அரசியல் நோக்குநிலையைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்களின் முக்கிய வெளியுறவுக் கொள்கை அடையாளங்களை வரையறுப்பது டெல்லி மற்றும் பாரிஸுக்கு வரையறுப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்காது. மோடியும் மேக்ரானும் "பல்முகத்தன்மை" (mutipolarity) மற்றும் ”இராஜதந்திர சுயாட்சி” (strategic autonomy) போன்ற குறைவான கருத்தாக்கங்களை விட நடைமுறை கேள்விகளுக்கு பதிலளிக்கும் சவாலை இவை எதிர்கொள்கின்றனர். 

உக்ரைனில் அமைதியைக் கொண்டுவருவது மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஒரு நிலையான பாதுகாப்பு ஒழுங்கை எவ்வாறு ஏற்பாடு செய்வது? ஐரோப்பிய பாதுகாப்புக்கு இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும்? ஆசியாவில் போரைத் தடுப்பதற்கான இந்தியாவின் திறனை பிரான்ஸ் எவ்வாறு உயர்த்த முடியும்? மேற்கு ஆசியாவின் கடற்பகுதியில் உள்ள கடல் பாதைகள் தொடர்புகளை (Sea Lanes of Communication (SLOC)) பாதுகாப்பது எப்படி? ஒரு வேளை, இப்போது கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா பின்வாங்கினால்? அமெரிக்காவை விட இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் செங்கடல் வழியாக வர்த்தகம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக யூரேசியாவை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. டிரம்ப் நிர்வாகம் அதன் நிர்வாகத்தின் செலவுகள் மற்றும் நன்மைகளை மறுபரிசீலனை செய்தால், ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சக்திகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் மற்றும் யூரேசியா மற்றும் அதன் கடல் பாதுகாப்பை நிலைப்படுத்த நீண்ட கால திட்டங்களை உருவாக்க வேண்டும்.  


எழுத்தாளர் தி இந்தியன் எக்ஸ்பிரளில் சர்வதேச விவகாரங்களில் பங்களிக்கிறார்.




Original article:

Share: