மாற்றியமைக்கப்பட்ட குறைக்கடத்தி (overhauled Semiconductor) வடிவமைப்பிற்காக இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Design-Linked Incentive scheme(DLI)) இந்தியாவின் போட்டிக்கான சூழ்நிலையை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய குறைக்கடத்தி மதிப்பு சங்கிலியின் (semiconductor global value chain) பல்வேறு கட்டங்களில் அதன் விரிவாக்கத்தை மேம்படுத்தும்.
குறைக்கடத்தி வடிவமைப்பிற்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (semiconductor Design-Linked Incentive (DLI)) திட்டத்தின் இடைக்கால மறுஆய்வு விரைவில் செய்யப்பட உள்ளது. இது அறிவிக்கப்பட்டதிலிருந்து, வடிவமைப்பிற்காக இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் ஏழு புத்தொழில்களை (start-ups) மட்டுமே அங்கீகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100ஐ நெருங்கும் அதன் இலக்கை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. இந்த மதிப்பீடு கொள்கை வகுப்பாளர்களுக்கு திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவின் 10 பில்லியன் டாலர் செமிகான் இந்தியா திட்டம் (Semicon India Program) பல்வேறு வகையான முடிவுகளைக் காட்டியுள்ளது. நாடு குறைக்கடத்திக்கான யுக்திகளில் (semiconductor strategy) மூன்று இலக்குகளைக் கொண்டுள்ளது. முதலாவது, பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான துறைகளில், குறிப்பாக சீனாவில் இருந்து குறைக்கடத்தி இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பது. இரண்டாவது குறிக்கோள், உலகளாவிய குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியின் (semiconductor global value chain) ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் விநியோகச் சங்கிலி பின்னடைவை உருவாக்குவது. மூன்றாவது இலக்கு, இந்தியாவின் தற்போதைய பலத்தைப் பயன்படுத்திக் கொள்வது, ஏனெனில் நாடு ஏற்கனவே முக்கிய உலகளாவிய குறைக்கடத்தி நிறுவனங்களுக்கான வடிவமைப்பு வீடுகளின் தாயகமாக உள்ளது. இவற்றில், இந்திய சிப் வடிவமைப்பு பொறியாளர்கள் (Indian chip design engineers) முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த இலக்குகளை அடைவது ஒரு குறைக்கடத்தி அதிகார மையமாக (semiconductor powerhouse) இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்த உதவும். இருப்பினும், இங்கு வளங்கள் குறைவாக உள்ளன. எனவே தொழில்துறை கொள்கையானது (industrial policy) அவற்றிற்கு முன்னுரிமைகள் மூலம் நன்மைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறைக்கடத்தி உற்பத்தியின் பிந்தைய கட்டங்களை விட குறைவான மூலதன தீவிரமான வடிவமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்வது, இந்தியாவில் வளர்ந்து வரும் கட்டுருவாக்கம் (fabrication) மற்றும் ஒன்றிணைத்தல் (assembly) தொழிலுக்கு வலுவான இணைப்புகளை உருவாக்க முடியும். இதுபோன்ற போதிலும், வார்ப்பிடங்கள் (foundry) மற்றும் ஒன்றிணைத்தல் (assembly) நிலைகளுக்கான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களில் (Production-Linked Incentive schemes) செய்யப்பட்ட விரைவான திருத்தங்களைப் போலல்லாமல், வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் (Design-Linked Incentive scheme) செயல்திறன் குறைபாடு குறித்து கொள்கை ஆய்வின் அறிவிப்புக்குப் பின் விரைவான திருத்தங்களைப் பெற்றன.
திட்டத்தில் உள்ள சிக்கல்கள்
முதல் பார்வையில், வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Design-Linked Incentive scheme) வடிவமைப்பு உள்கட்டமைப்புக்கான அணுகலை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலமும், சிப் (chip) வடிவமைப்பில் பல்வேறு படிகளுக்கு நிதி ஆதரவை வழங்குவதன் மூலமும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த திட்டம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஒரு காரணம் என்னவென்றால், பயனாளி புத்தொழில்கள் (start-ups) குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தங்கள் உள்நாட்டு அந்தஸ்தை பராமரிக்க வேண்டும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு (foreign direct investment) மூலம் தேவையான மூலதனத்தில் 50% க்கும் அதிகமாக திரட்ட முடியாது, இது ஒரு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது.
குறைக்கடத்தி வடிவமைப்பு (semiconductor design) தொடர்பான புத்தொழில்கள் (start-ups) கணிசமான செலவுகளை எதிர்கொள்கின்றன. மேலும் குறைக்கடத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வருமானம் (semiconductor research and development (R&D)) ஈட்ட பொதுவாக நீண்ட காலம் எடுக்கிறது. இந்தியாவில் சிப் புத்தொழில்களுக்கான (chip start-ups in India) நிதி நிலப்பரப்பு சவாலானதாகவே உள்ளது. அவற்றின் நம்பிக்கைக்குரிய அறிவுசார் சொத்து மற்றும் வணிக திறன் இருந்தபோதிலும், இந்தியாவில் வன்பொருள் தயாரிப்புகளுக்கான நன்கு வளர்ச்சியடைந்த தொடக்க நிதி சுற்றுச்சூழல் அமைப்பு இல்லாததால், ஏற்படும் வெற்றிக் கதைகளின் பற்றாக்குறையுடன் இணைந்து, உள்நாட்டு முதலீட்டாளர்கள் அபாயங்களை எடுக்க குறைந்த விருப்பம் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையிலிருந்து பயனடையும் புத்தொழில்களில் (start-ups) முதலீடு இல்லாதிருந்தால், திட்டத்தின் உரிமைக் கட்டுப்பாடுகள் தவிர, பங்கு நிதி மூலம் வெளிநாட்டு நிதிகளால் நிரப்பப்படும்.
வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தால் வழங்கப்படும் சலுகைகள் ஒப்பீட்டளவில் மிதமானவை. இவற்றின் தயாரிப்பு வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கு ₹15 கோடி மற்றும் இவை, ஒரு விண்ணப்பத்திற்கு ₹30 கோடி பயன்பாட்டிற்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையாக உள்ளது. இங்கு, புத்தொழில்களைப் (start-ups) பொறுத்தவரை, வரையறுக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் ஒரு நல்ல வர்த்தகமாக இருக்காது. குறிப்பாக முக்கியமான நீண்ட கால நிதிக்கான அணுகலை இழப்பதை இது குறிக்கிறது. இதை நிவர்த்தி செய்ய, குறைக்கடத்தி வடிவமைப்பு வளர்ச்சியிலிருந்து உரிமையைப் பிரிப்பது மற்றும் தொழில் துவங்குவதற்கு உகந்த முதலீட்டு வழிகாட்டுதல்களை (start-up-friendly investment guidelines) ஏற்றுக்கொள்வது முக்கியம். இந்த மாற்றம் அவர்களின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தலாம் மற்றும் அவர்களுக்கு உலகளாவிய வெளிப்பாட்டையும் வழங்கலாம்.
வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Design-Linked Incentive scheme (DLI)) திட்டத்தின் முக்கிய குறிக்கோள் இந்தியாவில் குறைக்கடத்தி வடிவமைப்பு திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். உள்ளூர் திறமைகள் இயற்கையாகவே காலப்போக்கில் உள்நாட்டு நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டு அறிவுசார் சொத்துக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை அங்கீகரிப்பதாகும். வடிவமைப்பு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்படும் வரை, நாட்டிற்குள் உள்ள பல்வேறு சிப்புகளுக்கான வடிவமைப்பு திறன்களை ஆதரிக்கும் பரந்த நோக்கத்தில் கவனம் செலுத்த இந்த திட்டம் திருத்தப்பட வேண்டும். இந்த தயாரிப்பு "இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட சிப்" (the product should be an India-designed chip) ஆக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை, இந்த நிலைப்பாட்டில் ஒரு படியைக் குறிக்கிறது. இந்த கொள்கை மாற்றத்தை ஆதரிக்க, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
பொறுப்பு முகமை (Nodal agency)
வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (DLI) திட்டத்தின் கீழ் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதில் மேம்பட்ட கணினியின் பங்கை மேம்படுத்துவதற்கான மையம் (Centre for Development of Advanced Computing’s role) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மேம்பட்ட கணினியின் பங்கை மேம்படுத்துவதற்கான மையம் (C-DAC) இந்திய சிப் வடிவமைப்புத் துறையிலும் ஈடுபட்டுள்ளதால், நலன் முரண்பாடு மற்றும் செயல்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக அதன் பொருத்தம் பற்றிய கவலைகள் எழுகின்றன. கர்நாடகா அரசாங்கம் குறைகடத்தி ஃபேபிள்ஸ் துரிதப்படுத்தும் ஆய்வுக்கூடத்தைக் (Semiconductor Fabless Accelerator Lab (SFAL)) கொண்டுள்ளது. இது இந்திய மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்தி சங்கம் (Indian Electronics and Semiconductor Association), மின்னணு வடிவமைப்பு தானியங்கி (electronic design automation (EDA)) விற்பனையாளர்கள், நுழைவு பாதுகாப்பு (Ingress protection (IP)) மற்றும் சோதனை நிறுவனங்களுடன் (testing companies) இணைந்து செயல்படுகிறது. இது வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை செயல்படுத்துவதற்கான ஒரு மாதிரியாக செயல்படும்.
இந்தியா குறைகடத்தி திட்டத்தின் (India Semiconductor Mission) கீழ் செயல்படும் இதேபோன்ற நிறுவனம், குறைகடத்தி ஃபேபிள்ஸ் துரிதப்படுத்தும் ஆய்வுக்கூடத்தின் (Semiconductor Fabless Accelerator Lab (SFAL)) அணுகுமுறையைப் பின்பற்றலாம். இந்த நிறுவனம் இணைந்த புத்தொழில்கள் (start-ups) நிறுவனங்களுக்கு வழிகாட்டிகள், தொழில்துறை தொடர்புகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அணுகலை வழங்குவதுடன், திட்டத்தின் கீழ் நிதி ஊக்கத்தொகைகளையும் வழங்கும். இந்த அணுகுமுறையால் வழிநடத்தப்பட்ட ஒரு புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பிற்க்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (DLI) திட்டம், பெரிய அளவிலான உற்பத்திக்குத் தயாராக இருப்பவை மட்டுமல்லாமல், பரந்த அளவிலான குறைக்கடத்தி வடிவமைப்பு தொடக்கங்களை ஈர்க்கக்கூடும். வடிவமைப்பு யோசனைகளை வளர்ப்பதில் ஆரம்ப சவால்களை சமாளிக்க இது அவர்களுக்கு உதவக்கூடும். ஒரு திறமையான நிறுவனத்தால் வழிநடத்தப்படும் சிப் வடிவமைப்பில் கவனம் செலுத்தும் ஒரு மறுசீரமைக்கப்பட்ட கொள்கை, சில தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியும் மற்றும் பயனாளி புத்தொழில் நிறுவனங்களை இந்த உயர் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் இருப்பை நிறுவுவதற்கான ஆய்வுக்கான வாகனங்களாக பார்க்கலாம்.
சத்யா எஸ்.சாஹு பெங்களூருவில் உள்ள தக்ஷஷிலா நிறுவனத்தின் (Takshashila Institution) உயர் தொழில்நுட்ப புவிசார் அரசியல் திட்டத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். பிரனய் கோட்டஸ்தானே பெங்களூருவில் உள்ள தக்ஷஷிலா நிறுவனத்தின் உயர் தொழில்நுட்ப புவிசார் அரசியல் திட்டத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.