எல்லைப் பாதுகாப்புப் படையின் உள்ளூர் அதிகார வரம்பு பற்றி . . .

 மாநிலங்களின் அதிகாரங்களைப் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு மாநிலங்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். 


எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) மற்றும் அதன் கட்டுப்பாட்டுப் பகுதி ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றன. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தை சரியாக விவாதிக்காததே இதற்குக் காரணம். மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இது அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின் அடிப்படையில் அமைந்தது. எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியை எல்லையிலிருந்து 15 கி.மீ முதல் 50 கி.மீ வரை நீட்டிக்கும்  மத்திய அரசின் முடிவில் பஞ்சாப் அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை கூட்டாட்சி முறையை மீறுவதாக பஞ்சாப் நினைக்கிறது. சட்டம் ஒழுங்கு மீதான பஞ்சாப் காவல்துறையின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் பஞ்சாப் அரசு நம்புகிறது.


இதே கருத்தை மேற்கு வங்கமும் ஆமோதிக்கின்றது. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் இந்த விரிவாக்கத்தை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தப் பின்னணியில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்வது முக்கியமானது. அக்டோபர் 2021 இல், மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒரே மாதிரியாக அமைத்தது. பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் அசாமில், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பரப்பளவு எல்லையிலிருந்து 15 கி.மீ முதல் 50 கி.மீ வரை அதிகரிக்கப்பட்டது. குஜராத்தில் இது 80 கிலோமீட்டரிலிருந்து 50 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, இது 50 கி.மீ ஆக மாறாமல் இருந்தது. மத்திய அரசு 2021 டிசம்பரில் ராஜ்யசபாவில் அளித்த பதிலில், எல்லைப் பாதுகாப்புப் படையின் (Border Security Force (BSF))  அதிகார வரம்பை நீட்டிப்பது அதன் எல்லை ரோந்து கடமையை மிகவும் திறம்பட செய்ய உதவும் என்று கூறியது.


மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சரியான காரணங்கள் இருந்தாலும், பொது ஒழுங்கை பராமரிக்கவும், காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பைக் கொண்ட மாநில அரசுகளின் கடமைகளில் தலையிடக் கூடாது. பொது ஒழுங்கு மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு மாநில அரசுகள் பொறுப்பு. எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை முக்கியமாக செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ நிறுத்துவதும் இதில் அடங்கும். எல்லைப் பாதுகாப்புப் படை குற்றவாளிகளை விசாரிக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ முடியாது. கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கமாக, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் போலீசார் இணைந்து சிறப்பாக செயல்படுவார்கள். அவர்களுக்குள் எந்த மோதலும் இருக்கக் கூடாது.


எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் அதிகாரங்கள் அவர்களை மேலும் குற்றவாளிகளை தேடவும் கைப்பற்றவும் அனுமதிக்கலாம். குற்றவாளிகள் நாட்டிற்குள் வெகுதூரம் சென்றிருக்கும் போது இது அவசியமாகிறது. ஆனால், எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்துவதற்கு உறுதியான காரணங்கள் இருக்க வேண்டும். இது சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட கேள்விகளில் மிகவும் பொருத்தமான கேள்விகள், மத்திய அரசின் அறிவிப்பு மாநில அரசின் உரிமைகளை ஆக்கிரமிக்கிறதா  மற்றும் "இந்தியாவின் எல்லைகளை ஒட்டிய பகுதிகளின் உள்ளூர் வரம்புகளை" தீர்மானிக்கும் போது என்ன காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பவைகளாகும்.




Original article:

Share: