இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் முதல் முறையாக கலாச்சாரம் ஏன் ஓர் இலக்காக அங்கீகரிக்கப்பட்டது? -கோவிந்த் மோகன்

 இந்த மைல்கல் மிகவும் முக்கியமான வளர்ச்சிக்கான உலகளாவிய அணுகுமுறையை மாற்றுகிறது. இப்போது, கலாச்சாரம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சியின் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. கலாச்சாரம், சமூக உள்ளடக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.


ஜி20 மாநாட்டில் இந்தியாவின் தலைமையின் கீழ், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமனதாக கலாச்சாரத்தை ஒரு சுதந்திரமான இலக்காக ஊக்குவிப்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டன. இந்த ஒப்பந்தம் இரண்டு முக்கிய ஆவணங்களில் இருந்தது. ஒன்று புது தில்லி தலைவர்களின் பிரகடனம் (New Delhi Leaders’ Declaration), மற்றொன்று கலாச்சார பணிக்குழுவின் விளைவு ஆவணத்திலும் (Outcome Document of the Culture Working Group) பிரதிபலிக்கிறது. இந்த ஆவணத்திற்கு காசி கலாச்சார பாதை (Kashi Culture Pathway) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உலக வளர்ச்சியை எவ்வாறு அணுகுகிறது என்பதில் ஒரு பெரிய மாற்றமாகும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு கலாச்சாரம் மிகவும் முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. மக்களை ஒன்றிணைப்பதிலும் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும் கலாச்சாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.


சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருந்தபோதிலும், கலாச்சாரம் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDG)) சேர்க்கப்படவில்லை. இது, 2030 செயல் திட்டத்தில் அதன் அங்கீகரிக்கப்பட்டதிற்கு மாறாக இந்த செயல் திட்டத்தை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனமானது (United Nations General Assembly Declaration(UNGAD)), புரிதல், சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் உலகளாவிய குடியுரிமை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பின் நெறிமுறைகளை மேம்படுத்துவதில் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆனால், இந்த பிரகடனம் கலாச்சாரத்தின் பங்கை தெளிவாக வரையறுக்கவில்லை. இது நிலையான வளர்ச்சிக்கான பங்களிப்பை தெளிவற்றதாக ஆக்குகிறது.


இன்றைய உலகில் கலாச்சாரம் மிகவும் முக்கியமானது. இது உரிமைகளை மதிக்கும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை அடைய உதவுகிறது. கலாச்சாரம் சமூகங்களின் பன்முகத்தன்மையை தழுவுகிறது. இது உள்நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகிறது. கலாச்சாரமானது தலைமுறைகளைக் கடந்து தொடர்பு மற்றும் கற்றலை அனுமதிக்கிறது. இது சமூக விதிமுறைகள் மற்றும் மதிப்புகளை பலப்படுத்துகிறது.


கலாச்சாரம் பல பொதுக் கொள்கைகளை பாதிக்கிறது. இது வளர்ச்சி நோக்கங்களுக்கு ஓர் ஊக்கியாகவும், வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வழிகாட்டியாகவும் செயல்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சிக்கான 2030-ன் செயல் திட்டத்தின் முக்கிய கருத்துக்களுடன் பொருந்துகிறது. நீடித்த வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு இந்த செயல் திட்டம் அழைப்பு விடுக்கிறது. இதில் 17 வகையான நிலையான வளர்ச்சி இலக்குகளும் (Sustainable Development Goals (SDGs)) மற்றும் 169 இலக்குகளும் அடங்கும். ஒன்றோடொன்று தொடர்புடைய பல காரணிகளின் விளைவாக நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. வெவ்வேறு கொள்கைப் பகுதிகள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன மற்றும் மேம்படுத்துகின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.


கலாச்சாரத்திற்கு குறிப்பிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் இல்லை என்றாலும், அனைத்து 17 நிலையான வளர்ச்சி இலக்குகளையும் அடைவதற்கு கலாச்சாரம் முக்கியமானது. கலாச்சாரத்தின் தாக்கம் பரந்த அளவில் உள்ளது. வறுமையைக் குறைத்தல் (SDG 1), கல்வியை மேம்படுத்துதல் (SDG 4), வேலைகளை உருவாக்குதல் (SDG 8), சமூக நீதியை ஊக்குவித்தல் (SDG 10) மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் (SDG 13) ஆகியவை இதில் அடங்கும். மேலும், பல இலக்குகள் குறிப்பாக கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன. எனவே, நிலையான வளர்ச்சியில் கலாச்சாரத்தின் பங்கு ஒரு பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இது ஒருங்கிணைந்த மற்றும் நிலையான வளர்ச்சியின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கியது. 


2030க்குப் பிந்தைய வளர்ச்சி செயல் திட்டத்தில் கலாச்சாரத்தை ஒரு சுதந்திரமான இலக்காக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், சமூகத்தில் அதன் மாற்றத்தக்க செல்வாக்கானது, தனித்துவமான உலகளாவிய முயற்சிகளை அணிதிரட்டவும், படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை வளர்க்கவும், விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்தவும், பாதிக்கப்படக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாக்கவும் இது உதவும். வளர்ச்சித் திட்டங்களில் கலாச்சாரத்தைச் சேர்ப்பது என்பது சமூகத்தை மாற்றும். இது உலகை நியாயமானதாகவும், எதிர்காலத்திற்கு நிலையானதாகவும் ஆக்குகிறது.


சர்வதேச சமூகம், 2030 க்குப் பிந்தைய செயல் திட்டங்களுக்கான சவால்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் போது, எதிர்கால கடமைகள், இலக்குகள் மற்றும் கலாச்சாரத்தை எவ்வாறு சரியான முறையில் இணைக்க முடியும் என்பதை ஆராய்வது பொருத்தமானது. 2030க்குப் பிந்தைய செயல் திட்டத்தில் கலாச்சாரத்தை ஒரு தனித்துவமான இலக்காக அறிமுகப்படுத்துவது தற்போதைய இடைவெளியை நிரப்புவதோடு நிலையான வளர்ச்சிக்கான விரிவான அணுகுமுறைக்கு உத்தரவாதம் அளிக்கும்.


உலக அரங்கில் கலாச்சாரத்திற்கான இந்தியாவின் ஆதரவு அதன் வளமான பாரம்பரியம் மற்றும் முழுமையான நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. நமது தேசத்தின் பண்டைய அறிவுநுட்பம் மற்றும் கலாச்சார நடைமுறைகள் கடந்த காலத்தின் எச்சங்கள் மட்டுமல்ல, அவை இன்றைய நடைமுறைக்கான கண்டுபிடிப்பு தீர்வுகளை வழங்கும் வாழ்க்கை வளங்களின் நிலைத்தன்மையாக உள்ளன. கலாச்சாரம், அதன் பரந்த அர்த்தத்தில், எப்போதும் இந்திய சமூகத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாக இருந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகளாக சமூக-பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் நம்மை செழிக்க அனுமதிக்கிறது. இந்தியாவின் கலாச்சார நெறிமுறைகள் பரஸ்பர சகவாழ்வு, அமைதி மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. சமகால நடைமுறை சவால்களைச் சமாளிப்பதற்கான முழுமையான அணுகுமுறையை நமக்கு வழங்குகிறது.


நவீன தேவைகளுக்கு ஏற்ப பாரம்பரிய அறிவுநுட்பத்தை மாற்றியமைப்பதன் மூலம் புதுமையான தீர்வுகளை உருவாக்க இந்தியா இந்த பாரம்பரியத்தை பயன்படுத்த முடிந்தது. பொதுவாக, நிலையான தேர்வுகளை மேற்கொள்வதாக அறியப்படுகிறோம். இது இந்தியாவை குறைந்த பொருளாதாரங்களில் ஒன்றாக ஆக்குகிறது. இந்திய வீடுகளில் பழைய கிழிந்த ஆடைகள் முதலில் ஒப்படைக்கப்படுகின்றன.  பின்னர் பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படுவதற்கு பதிலாக டஸ்டராக (dusters) பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் பல தலைமுறைகளாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அனைத்து வளங்களுக்கும் மதிப்பைக் கற்பிக்கும் கலாச்சாரத்தை நாம் கொண்டுள்ளோம். சிக்கனம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். எனவே, வட்டப் பொருளாதாரம் (circular economy) என்ற கருத்து நமது வாழ்க்கை முறையில் பொதிந்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி 2021 இல் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சி மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle for Environment (LiFE)) பற்றி பேசினார். உலகளாவிய நிலைத்தன்மைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையைத் தழுவுவதன் முக்கியத்துவத்தை சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE)  வலியுறுத்துகிறது மற்றும் வளங்களை கவனத்துடன் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சியில் பங்கேற்க உலக சமூகத்தை அழைக்கிறது.


இந்தியாவின் தலைமையின் கீழ் கலாச்சாரத்தை முக்கிய இலக்காக மாற்ற ஜி20 நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் உலகிற்கு மிகவும் முக்கியமானது. இந்த உயர்வின் மூலம், உள்ளடக்கிய, வலுவான மற்றும் இணைக்கப்பட்ட சமூகங்களை உருவாக்க கலாச்சாரம் முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. உலகளாவிய வளர்ச்சி சிந்தனையில் இந்த மாற்றம் சரியான நேரத்தில் மட்டுமல்ல, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்கும் முக்கியமானது. 2030க்குப் பிந்தைய உலகத்தை நாம் கற்பனை செய்யும்போது, உலகளாவிய வளர்ச்சிக்கான செயல் திட்டத்தில் கலாச்சாரத்தை ஒருங்கிணைப்பது ஒரு இராஜதந்திர முடிவு மட்டுமல்ல, இது அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் பிரகாசமான மற்றும் இணக்கமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும்.   


மோகன் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் (Union Ministry of Culture) செயலாளராகவும், பாண்டியா இணை செயலாளராகவும் உள்ளனர்.




Original article:

Share: